Tag Archive: ஈ.வே.ரா

வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்

தமிழிலக்கியத்தின் இரு கிளைகளுக்கு முன்னோடியானவர் வ.வே.சு.அய்யர். தமிழ்ச்சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என அவர் எழுதிய மங்கையர்க்கரசியின்காதல் என்ற சிறுகதைத்தொகுதி குறிப்பிடப்படுகிறது. அதில் உள்ள குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் இலக்கணம் அமைந்த சிறுகதை என க.நா.சு. மரபினர் சொல்வார்கள்.  வ.வே.சு.அய்யர் பாரதிபாடல்களுக்கு எழுதிய முன்னுரை தமிழின் விமர்சன மரபுக்கு வழிகோலியது.   வாழ்க்கையின் கடைசிக்காலகட்டத்தில் வ.வே.சு.அய்யர் கடும் சர்ச்சைகளுக்கு ஆளானார்.பாரதியார் உத்தேசித்த சுதேசிக்கல்வியைப் பரப்பும்பொருட்டு வ.வே.சு.அய்யர் ஒரு கல்விநிலையத்தை சேர்மாதேவியில் நிறுவினார். தமிழ்நாடு ஆசிரமம் என்ற அக்குருகுலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21150/

பெரியார்- அறிவழகனின் கடிதம்

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், என்னுடைய இந்தக் கடிதத்தை நீங்கள் ஒரு விவாதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், ஏனெனில் ஒரு உரையாடலாகவும், ஒரு புனைவிலக்கிய முன்னோடி உடனான கருத்துப் பரிமாற்றம் என்ற அளவிலேயே இதனை நான் கருதுகிறேன், இருப்பினும் இந்த உரையாடல் எல்லா நேரங்களிலும் ஈ.வே.ரா என்கிற தலைப்போடு துவங்குவது வியப்பளிக்கிறது. தொடர்புகளும், ஒப்பீட்டு நோக்கும் அறவே அற்ற சில தலைப்புகளை உங்கள் தளத்தில் பார்க்க நேரிடுகிற போது உங்கள் எழுத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26237/

வைக்கமும் காந்தியும் 2

வைக்கம் போராட்டம் என்ற வரலாற்று நிகழ்ச்சியின் நுட்பமான தகவல்களுக்குள் செல்ல இது தருணமல்ல. கேரளத்தில் அதைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது. நினைவுகள், பதிவுகள். காங்கிரஸ் தரப்பிலும் நாராயண இயக்கங்களின் தரப்பிலும். வரலாற்றுக் கோணங்களில் மாறுபாடுகள் பல உள்ளன. சில தகவல்கள் கூட மாறுபடுகின்றன. ஆனால் தமிழகத்தில் ஈவேரா அவர்களால் முன்வைக்கப்பட்டதுபோல காந்தி அந்தப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தார், கைவிட்டார் என்று எவராலும் எழுதப்பட்டதில்லை. காந்தியின் போக்கை முழுமையாக மறுப்பவர்கள் கூட அதைச் சொன்னதில்லை. இந்த கோணம் ஈவேராவால் உருவாக்கப்பட்டு திராவிடர் கழகத்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5792/

வைக்கமும் காந்தியும் 1

  அன்புள்ள ஜெ.எம், காந்தியம் குறித்த உங்கள் விவாதங்களின் ஒருபகுதியாக வைக்கம் குறித்தும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன். வைக்கம்போராட்டத்தில் காந்தியின் துரோகம் குறித்து பெரியாரின் மேற்கோள்களுடன் நிறையவே பேசப்படுகிறது. ‘வைக்கம் தெருவில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நடமாட உரிமையை வாங்கிக் கொடுத்தவர் பெரியார்’ என்ற வரிகளை சுவர்களெங்கும் காண்கிறோம். உண்மையில் என்ன நடந்தது? சங்கரநாராயணன்   அன்புள்ள சங்கரநாராயணன் வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5789/

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ. வே. ரா வின் அணுகுமுறை   இக்கட்டுரை , ஈ.வே.ரா குறித்த எனது முழுமையான மதிப்பீடு அல்ல. அவரது மொத்த எழுத்துக்களையும் ஆனைமுத்து தொகுப்பில் கூர்ந்து படித்ததுண்டு. அவர் மீது விமரிசனங்களை அவ்வடிப்படையில் முழுமையாக ஆதாரங்களுடன் முன் வைக்க என்னால் முடியும். அது இச்சந்தர்ப்பத்தில் எளிதாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல. இக்கட்டுரையை என் மனப் பதிவும், நிலைப்பாடும் என்ன என்பதை இவ்விவாதச் சூழலில் விளக்குவதற்கே எழுதியிருக்கிறேன். பொதுவாக ஈ.வே.ரா குறித்துப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/368/