Tag Archive: ஈரோடு சந்திப்பு

ஈரோடு சந்திப்பு கடிதங்கள்-5

  ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020   பெருமதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு, வணக்கம். புதிய வாசகர் சந்திப்பு குறித்த அறிவிப்பை நமது தளத்தில் கண்டவுடனே பெரும் விருப்பையும் அதற்கிணையாகவே தயக்கம் துணைக் கொண்ட பயத்தையும் அடைந்தேன். உங்களுடன் இரு நாட்கள் தங்கும் வாய்ப்பு என்பதே தயக்கத்தை உடைத்திடப் போதுமானதாக இருந்தது. சனிக்கிழமை காலை ஏறத்தாழ 9 மணியளவில் காஞ்சிக்கோவிலில் இருக்கும் பண்ணை வீட்டை அடையும் போதே, உங்கள் குரல்தான் வரவேற்றது. மாடிப்படிக்கருகில் நின்று நீங்கள் பேசிக்கொண்டிருக்க, உடம்பே காதுகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130154

ஈரோடு சந்திப்பு கடிதங்கள்-4

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020 அன்புள்ள ஜெ,   ஈரோடு புதிய வாசகர் சந்திப்பு 2020, இலக்கியத்தின் முழு பரிமாணத்தையும் விளக்கக்கூடிய ஒன்றாக இருந்தது.   Plagiarism, தனிநபர் பத்திரிக்கைகள், இலக்கியத்திற்கும் அரசியல், சினிமா, ஓவியம் போன்ற துறைகளுக்கும் உள்ள தொடர்பு, படைப்புத் திறனை ஊக்குவிக்கும் கல்விமுறை போன்ற உரையாடல்கள்,  இலக்கியம் பற்றிய அறிவை விசாலமாக்கும் வகையில் இருந்தன.   சிறுகதைகளின் பொதுவான வடிவம், கனவை அடிப்படையாகக் கொண்ட கதைகள், பேய்க்கதைகள் மற்றும் நகைச்சுவைக் கதைகளில் இருக்க வேண்டிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130120

ஈரோடு சந்திப்பு பற்றி

  ஈரோடு சந்திப்பு பற்றி சில ஐயங்கள் வந்தன. இது தொடர்ந்து நிகழ்வதனால் எல்லாருக்கும் இது எப்படி நிகழும் என தெரியும் என்று நினைத்தேன். அது பிழை என தெரிகிறது   1. நான் இரண்டுநாட்களும் புதிய வாசகர்களுடன் இருப்பேன், அவர்களுடன் தங்குவேன், உரையாடுவேன்   2. பெண்களுக்கு தனியாக தங்க இடம் ஒதுக்கப்படும்   மார்ச் 7,8 [சனி ஞாயிறு] இரண்டு நாட்கள் சந்திப்பு நிகழ்கிறது.   முன்னர் புதியவாசகர்களாக வந்தவர்கள் பலர் இன்று எழுத்தாளர்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129823

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 3

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். ஈரோடு சந்திப்பு எங்களுக்கு புதிய திறப்பை அளித்திருக்கிறது. பொதுவாக இம்மாதிரி எழுத்தாளருடனான சந்திப்புகளில் அவரின் படைப்புகளை முன்னிறுத்தி கொண்டு போவது நடக்கும். ஆனால் உண்மையில் இங்கு நடந்தது முற்றிலும் வேறு. உங்கள் படைப்புகளை பற்றி பேசியதை விட நாங்கள் படித்திருந்த மற்ற படைப்புகளை கேட்டு அறிந்து அதிலிருந்து குறிப்பிட்டே எங்களுக்கு சொன்னீர்கள். சனிக்கிழமை காலை இரண்டாம் வகுப்பு பெட்டியிலிருந்து நீங்கள் சாதாரணமாக இறங்கி வந்தததை இப்போதும் மறக்க இயலவில்லை. நானும் நண்பர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84675

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 1

மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு புதியவர் சந்திப்புக்கு அனுமதித்தமைக்கு நன்றி. கலைத்துப் போடப்படுதலை அனுபவித்தேன். தயாரிப்புகளும் இலக்கிய வாசிப்பனுபவமும்   இல்லாததால், ஒருவித சுய வெறுப்பு வளர்ந்தது. உங்களுக்கு வாசகவிரிவின் புதிய ஊற்றுகளை நேரடியாகக் கண்டுகொள்ள சந்திப்பு உதவியிருக்கலாம். சிந்திக்க, வாசிக்க, கவனிக்க வேண்டிய முறைகளே தெரியாமல் ஒரு கல்விமுறையைக் கடந்து வந்திருக்கிறோம் என உணரும் போது, மூளை கசக்கிறது. இருப்பினும் எதுவும் வீணாவதில்லை; காலம் உட்பட என ஆழ்மனது சொல்கிறது உண்மையில் உங்களின் தத்துவ, ஆன்மிக ஊற்றுகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84522

ஈரோடு சந்திப்பு -ஒருகடிதம்

ஜெ ஊட்டி சந்திப்புக்கே வர விரும்பினேன். இடங்கள் முடிந்துவிட்டன என்றுதெரிந்ததும் சோர்வு அடைந்தேன். அதன்பின்னர் ஈரோடு சந்திப்பு. அதுவும் முழுமையடைந்துவிட்டது என்று வாசித்தேன். நான் வரவிரும்புகிறேன். இடமிருக்குமா? கதிர் அன்புள்ள கதிர், பொதுவாக இம்மாதிரி நிகழ்வுகளை முடிவுசெய்வது மிகக்கடினம். என்ன சிக்கலென்றால் ஓர் இடத்தில் அதிகபட்சம் இவ்வளவுபேர் என முடிவுசெய்திருப்போம். அதைவிட சற்று அதிகமானவர்கள் வர விரும்பியதும் நிறுத்திக்கொள்வோம். ஆனால் வருவதாகச் சொன்னவர்களில் பலர் சில்லறைக் காரணங்களுக்காக வராமலிருந்துவிடுவார்கள். அது ஒரு தமிழ் மனநிலை. அதாவது ஆர்வம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83382