Tag Archive: ஈரோடு

புதியவாசகர் சந்திப்புகள்,ஊட்டி,ஈரோடு -அறிவிப்பு

  அன்புள்ள நண்பர்களுக்கு புதியவாசகர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சிகளை முழுமைசெய்துவிட்டோம். இரு நிகழ்ச்சிகள். ஊட்டி, ஈரோடு ஊட்டி முதலில் கடிதம்போட்டவர்களுக்கான நிகழ்ச்சி ஊட்டியில் பிப்ரவரி 13, 14 [சனி ஞாயிறு] நாட்களில் நிகழும். சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் ஒருமணியுடன் முடிவடையும். இடம் நாராயணகுருகுலம் ஃபெர்ன் ஹில் மஞ்சணகொரே கிராமம் ஊட்டி தொடர்புக்கு நிர்மால்யா, 09486928998 விஜய்சூரியன் 9965846999 [ஊட்டியில் குளிர் இருக்குமென்பதனால் ஸ்வெட்டர் மப்ளர் போன்றவை கொண்டுவரவும். போர்வை, மெத்தை, ஹீட்டர் நாங்கள் ஏற்பாடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83339

உரை- கடிதங்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். சிறுகதைகதைகள் பற்றிய கடிதமே இன்னமும் பாக்கி இருக்கும் பொழுது, இதை பற்றி எழுதலாமா வேண்டாமா என்று குழப்பம் உண்டு. நீங்கள் வாசிங்டன் டிசி வந்திருந்த பொழுது உரையாற்றினீர்கள். மிக சிறந்த உரையினுள் ஒன்று. ஆனால் அந்த உரையினுள் உள்புக உங்களை தொடர்ந்து வாசித்த்து இருக்க வேண்டும் அல்லது ஒரு கல்லூரி முதுகலை மாணவன் தன்னிடம் பேச வரும் ஆசிரியர் குறித்து கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு போல ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். அந்த எதிர்பார்ப்பில்லா இரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38603

ஈரோட்டில் ஓர் உரை

இந்தக்கட்டுரையை நீக்கம் செய்திருக்கிறேன். உண்மையில் நிகழ்ந்தவற்றை ஒரு விஷமி சுயவிளம்பர நோக்குடன் தவறாகச் சித்தரித்தமையால் என் எதிர்வினை அதன் அடிப்படையில் அமைந்தது. அது சம்பந்தப்பட்ட புத்தகக் க்ண்காட்சி நண்பர்களின் அர்ப்பணிப்பை குறைசொல்வதாக அமைந்துவிட்டது என்றார்கள். அவர்கள் செய்துவரும் பொதுநலப்பணிமீதான என்னுடைய பெருமதிப்பை நான் திட்டவட்டமாகவே பதிவுசெய்திருக்கிறேன். அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியமைக்கு மன்னிப்பு கோருகிறேன். ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/38510

ஈரோடு ஓர் அனுபவம்

சனிக்கிழமை காலை ஈரோடு வந்துசேர்ந்தோம். நண்பர் விஜயராகவன் இல்லத்தை 7 மணிக்கு அடைந்தபோது நாங்கள் வந்தது தாமதமோ என்று உணர்ந்தோம். ஏனென்றால் ஜெயமோகனின் குரல் அப்போதே கேட்டுக்கொண்டிருந்தது. இலக்கிய அரட்டை ஆரம்பமாகிவிட்டிருந்தது. உடனடியாக ஜோதியில் ஐக்கியமானோம். தமிழ், தத்துவம், இலக்கியம், விஞ்ஞானம், சுற்றுச்சூழல் என்று பல கேள்விகள். அதற்கு அருமையான ஆழமான பதில்கள். தேர்ந்த வாசகர்களின் கருத்துப் பரிமாற்றங்கள். ஈரோடு அறம் நூல் வெளியீட்டுக்குவந்த நண்பர் சுரேஷ்பாபு அவரது அனுபவங்களை அவரது இணையதளத்தில் எழுதியிருக்கிறார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/22863

ஈரோட்டிலே …

ஈரோடுக்கு அதிகாலை ஐந்துமணிக்குவந்து சேர்ந்தேன். அதற்கு முன்னரே அஜிதன் பெங்களூரில் இருந்து வந்து பேருந்துநிலையத்தில் இருந்து என்னை எழுப்பிவிட்டான். அவனை பொதுவாக இலக்கியக்கூட்டங்களுக்கு வர அனுமதிப்பதில்லை. இலக்கியத்தைவிட சுவாரசியமானது இலக்கிய அரட்டை, அதில் அவன் சிக்கிக்கொள்ளவேண்டாமென்றுதான். ஆனால் ஈரோடு நண்பர்களைச் சந்திக்க மிக விரும்பினான். சரி என்றேன். அவனை கார்த்தி பேருந்து நிலையத்தில் இருந்து கூட்டிக்கொண்டு சென்றார். என்னை வரவேற்க கிருஷ்ணனும் சிவாவும் பேருந்துநிலையத்துக்கு வந்திருந்தார்கள். சிவாவை கொஞ்ச இடைவெளிக்குப்பின் சந்திக்கிறேன். அழகாக இளைத்திருந்தார். விஜயராகவனுக்குச் சொந்தமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22642

கல்யாணப்பாறை

ஈரோட்டைச்சேர்ந்த வாசகர் வெங்கடேஷ் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் பணியாற்றுகிறார். அவருக்கு சென்ற டிசம்பர் 10 அன்று ஈரோட்டில் திருமணம். ஈரோடு, கோவைப் பகுதிகளில் திருமணங்களில் வெற்றிலை தேங்காய்ப்பை கொடுக்கும்போது ஏதேனும் புத்தகங்கள் கொடுக்கும் வழக்கம் சிலரிடம் உண்டு. வழக்கமாகத் திருக்குறள் அல்லது கீதை அல்லது திருமுறைப்பாடல்திரட்டுகள். வெங்கடேஷ் என் ‘சங்கச் சித்திரங்கள்’ கொடுக்க நினைத்து தொடர்புகொண்டார். தமிழினி வெளியிட்ட சங்கச் சித்திரங்கள் 700 பிரதிகளை வாங்கி அனைவருக்கும் அளித்தார் அந்த திருமணத்துக்காக நான் காலையில் ஈரோடு வந்திருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10677