Tag Archive: ஈராறு கால்கொண்டெழும் புரவி

புரவி-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், ஈராறு கால்கொண்டெழும் புரவி படித்தவுடன் இதை எழுதுகிறேன். ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு இதைப் படித்திருப்பினும் இப்போது மீள்வாசிப்பினில் தான் இக்குறுநாவலின் சாரத்தை விளங்கிக் கொள்ள முடிந்தது. முன்னுரையில் நீங்கள் கூறியது போல சித்தர் ஞானத்தைப் பற்றிய அறிதல் இல்லாததால் நாவல் முழுவதுமாகத் திறக்காவிடினும் சில முக்கிய மன விரிவுகள் சாத்தியமாகியுள்ளன. முதன்மையாக அறிதல் பற்றிய தெளிவு. நாவலின் மையக் கதாபாத்திரமான சாஸ்தான் குட்டிப்பிள்ளை நாவல் முழுவதும் தனக்கான ஞானத்தைத் தேடித் தேடி சலிக்கிறான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35947

கடிதங்கள்

அன்புள்ள ஜெயன், தங்களது குறுநாவல்கள் தொகுப்பை வாசித்துக் கொண்டு இருந்தேன். கிளிக்காலம், பரிணாமம், லங்கா தகனம் ஆகியவை மிகச் சிறப்பாக இருந்தன. நீங்கள் சொல்வது போல, நாவல்களுக்கு உரிய உள்விரிவும், சிறுகதைக்கு உரிய உச்சமும் இணைந்து வரும் ஆக்கங்கள். தங்களது டார்த்தீனியம் படித்தேன், அந்த நடையும் வர்ணனைகளும் இயைந்து அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது, ஆனால் அதன் உள் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் இங்கே குறிப்பிடும் டார்த்தீனியம் என்பது ஒரு குறியீடு என்று புரிகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35669

ஈராறு கால்கொண்டெழும் புரவி 6

மறுவருடம் முதல் மாமரம் குலைகுலையாக காய்த்து கனத்து தழைய ஆரம்பித்தது. சித்தன்மரமென்று மலையேறி வந்து வணங்கி கனிகொய்து உண்டு இனிமையறிந்தனர் மக்கள்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6462

ஈராறு கால்கொண்டெழும் புரவி – 5

மாமரம் செடியாகி மரமாகி நிழல்விரிக்கும் காலத்திலும் மலைமீதுதான் இருந்தார் பிள்ளை. மழையிருக்கும் காலத்தில் கொடுப்பைக்கீரையும் குப்பைக்கீரையும் காச்சில்கிழங்கும் சேனைக்கிழங்கும் பறித்துத் தின்றார். கானல் எரிந்த கோடையில் காரையிலையும் கூவைப்புல் கிழங்கும் தின்றார். கொட்டகையில் ஒவ்வொருநாளும் தன்னுடன் தான் மட்டுமாக சிறுதகரக்குடிலில் வாழ்ந்தார். தகரக்கொட்டகை காற்றில்பிய்ந்துசென்றபோது இன்னும் மேலே சென்று ஒரு நரிக்குகைக்குள் ஒதுங்கிக் கொண்டார். அக்குகையைத் தோண்டி விரிவாக்கி கல்லடுக்கிச் சுவர் கட்டி உள்ளே வாழ்ந்தார். அவர் பெயரை அறிந்த கோனார்கள் காலமாகி அடுத்த தலைமுறை உருவாகி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6392

ஈராறு கால்கொண்டெழும் புரவி – 4

4 ஒன்பது வருடம் சாஸ்தான்குட்டிப்பிள்ளையின் போதம் மண்புழுவென மண்ணைத் துளைத்து மீண்டு அலைந்தது. வேப்பங்குச்சியில் சத்தும் சித்தும் சந்திக்கும் ஆனந்தம் நின்றுநடுங்க மண்ணுள் நீரின் முடிவற்ற வரைபடச்சிக்கல்கல் இழைகளில் சொல்லிலும் மௌனத்திலுமாக செதுக்கப்பட்ட மந்திரங்களைக் கண்டார். இரவுகள் முழுக்க அவற்றை பெரிய நோட்டுப்புத்தகங்களில் முறைப்படி பகுத்தும் தொகுத்தும் எழுதிவைத்து அதன் மீது மீன்கொத்தி போல தொட்டுச் சீறி வளைந்தெழுந்து சுழன்று கரையோரமொதுங்கி மீண்டும் தொடப்பாய்ந்து அலைந்தார். கவ்விக் கொணரும் வரிகளெல்லாம் திருமூலரின் சொற்களென உணர்ந்த ஓர் இரவுக்குப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6391

ஈராறு கால்கொண்டெழும் புரவி 3

[3] சாஸ்தான்குட்டிப்பிள்ளை முதன்முதலில் நாகம்மையின் உடலைப் பார்த்தபோது ”இது ஏம்ளா இப்டி இருக்கு ?” என்று கேட்டார். .நாகம்மை நொடித்து” பின்னே எப்டி இருக்கும்ணு நெனக்கியோ? வேறெ கண்டிட்டுண்டோ? ” என்றாள் . அவருக்கு கொஞ்சநேரம் கையும் காலும் எதுவும் ஓடவில்லை. ”நான் எங்க கண்டேன் ? ஆனா…” நாகம்மை வாரிச்சுருட்டி” என்ன ஆனா?” என்றாள் “இப்பிடி இருக்கு?” “பின்ன எப்பிடி இருக்கணும்?’ “இல்லே …உறக்கையின் கனி நிகரென இலகிய முலைமேல்- ண்ணாக்குமெ அருணகிரிநாதர் சொன்னது.. இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6390

ஈராறு கால்கொண்டெழும் புரவி 2

[2] நாகம்மையை கல்யாணம் செய்துகொள்ளும்போது சாஸ்தான்குட்டிப்பிள்ளைக்கு இருபத்தெட்டுவயது. நாஞ்சில்நாட்டில் பிள்ளைவாள்களுக்கு மீசையின் பட்டு கனக்கும் முன்னரே மூத்தபெண் பச்சைமாவு தின்பதெல்லாம் சாதாரணம். ஆனால் பிள்ளைக்கு அவர் திருநெல்வேலியில் புலவருக்குப் படிக்கும்போது வசக்கேடாக மண்டையிலடித்துவிட்ட சைவசித்தாந்தமும் சித்தமருத்துவமும் அந்த உறுப்பு ஒரு திரவவடிகால் என்பதற்கப்பால் பொருள் கொள்ளமுடியாமல் செய்தன. எல்லாம் தற்செயல்தான். திருநெல்வேலி கொக்கிரக்குளத்தில் அவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுக்கூரை சரிந்த குளுளுத்த கல்திண்னையில் கல்திண்டில் சாய்ந்து அமர்ந்திருந்த, சட்டையற்ற உடலில்   சாம்பல் தடியங்காய் போல திருநீற்றுக்கோலம் பூண்ட, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6389