Tag Archive: ஈரட்டிச் சிரிப்பு…

ஈரட்டிச் சிரிப்பு -கடிதங்கள்

  அன்பு ஜெயமோகன், ஈரட்டிச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்கிற ஏக்கத்தில் இருந்த எனக்கு ஈரட்டிச் சிரிப்பு பதிவு வயிற்றெரிச்சலைக் கொடுத்தது. வயிற்று எரிச்சலில் புழுங்கிக் கொண்டிருந்ததால்தான் உடனடியாகக் கடிதம் எழுதவில்லை. ஈரட்டிச் சந்திப்பு குறித்த அறிமுகக் கடித்த்திலேயே யானைக்கு ஆறு தரிசனங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டி இருக்குமோ என  மனம் ’பதைத்திருந்தீர்’கள். அங்கேயே  உங்கள் மனநிலையை நான் புரிந்து கொண்டேன். என்றாலும், ‘செம சூடான’ விவாதங்களில் அது காணாமல் போய்விடுமோ என்று பயந்து கொண்டு இருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85614

ஈரட்டிச் சிரிப்பு – கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் வலைத்தளப்பதிவுகளைக்கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறேன். ஈரட்டி பொதுக்குழு போன்ற. மிக மோசமான பதிவை இதுவரை எதிர்ப்பட்டதில்லை. அதிலும்….உங்களிடமிருந்து அதை எதிர்பார்க்காததால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.உங்களிடம் எனக்குப் பிடித்த அம்சமே கொண்ட கொள்கையில் யாரானாலும் உறுதியாக இருப்பீர்களென்பதுதான்.தொடர்ந்து ஃபேஸ்புக்பதிவுகளை அவற்றால் எழும் வெற்று வம்புப்பேச்சுக்களைத்தாக்கி வரும் நீங்கள் மிக மோசமானதும் அதோடு கூடவே பெண்களைக்கொச்சைப்படுத்துவதுமான கீழ்க்கண்ட பதிவைப்பிரசுரித்தது உங்கள் தகுதிக்குக்கொஞ்சமும் ஏற்பில்லாதது என்றே எனக்குப்படுகிறது. //அரங்கசாமி நாயக்கருக்கு குஷ்பூவுடன் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85546

ஈரட்டிச் சிரிப்பு…

  ஈரோட்டுக்கு செல்வது என்பது மனுஷ்யபுத்திரன் பாணியில் சொல்லப்போனால் ஒரு கொடுங்கனவு.விடியற்காலையில் எழுவதென்பது என்னால் எளிதில் செய்யக்கூடியதல்ல. அதிலும் ரயிலில் விடியற்காலையில் எழுவதென்பது மிகக் கடினம். செல்பேசிக்கு காலையில் என்னை எழுப்பும்படி ஆணையிட்டுவிட்டு படுத்தால் அது என்னை அழைத்துக்கொண்டே இருப்பதுபோல பிரமை. எவர் மணி எங்கே அடித்தாலும் எழுந்து அமர்வேன். ஏன் எந்தப்பெண்ணாவது வளையலையோ கொலுசையோ அசைத்தாலும் எழுந்து அமர்ந்து மணிபார்ப்பேன். மொத்தத்தில் ‘எப்படிப்பட்ட ரயிலில் இருக்கிறோம் நாம்?” என்னும் வகையான பதைப்புதான் எப்போதும். ஆகவே போதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85381