Tag Archive: இ. எம். எஸ். நம்பூதிரிபாட்

இ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2

இ எம் எஸ்சின் ஆய்வுக் கருவிகள் ========================= இ எம் எஸ்ஸின் ஆய்வுக்கருவிகள் மூன்று. ஒன்று அவரது அடிப்படையான வரலாற்றுத்தரிசனம். வரலாற்றை எதிர்காலத்துக்கு நகர்வதற்குரிய வரலாற்றுத் தருக்கத்தையும் , பண்பாட்டுக் கூறுகளையும் கண்டடையவேண்டிய அகழ்வாய்வுநிலம் என்ற அளவில் மட்டுமே அவர் பார்க்கிறார். அதாவது எதிர்காலத்துக்கு உதவாத வரலாற்றாய்வு அவரைப்பொறுத்தவரை பயனற்றது. அவ்வெதிர்காலத்தை கட்டமைக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வரலாறு ஆய்வுக்கு உட்படுத்தபட வேண்டும்.  வரலாற்றுக்காக வரலாறல்ல, அரசியல் போராட்டத்துக்காகவே வரலாறு. வரலாற்றிலிருந்து பழம்பெருமை இன அடையாளம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2671

இ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்

இ.எம் எஸ் [இளங்குளம் மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு] இறந்தபோது மலையாளிகளுக்கு அம்மரணம் ஒரு பெரிய ஊடக நிகழ்வாக இருந்தது கேரளத்தில். அதற்கு முன்பு அப்படி கொண்டாடப்பட்ட பெரிய மரணம் எழுத்தாளர்  வைக்கம் முகம்மது பஷீருடையது. பிதாவழிபாட்டு மனநிலையின் கூறுகள் அதிலிருந்தன என்று சொன்ன ஆய்வாளர் உண்டு. கேரளத்தின் கிட்டத்தட்ட ஐம்பது செய்தித்தாள்களிலெல்லாம் அட்டைச்செய்தி அதுஇதான். வார மாத இதழ்களில் – இவை முந்நூறுக்கும் மேல் — அட்டைப்படமும் முக்கியச் செய்தியும் அவர்தான். பல இதழ்களில் அட்டை தொட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2665