Tag Archive: இஸ்லாம்

பரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி

  ஏராளமான மின்னஞ்சல்கள் நான் சமஸ் கட்டுரைக்கான முன்குறிப்பாக எழுதியதைப்பற்றி. பெரும்பாலானவை வசைகள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. சாதகமாகவும் பாதகமாகவும் வந்த கடிதங்களை வெளியிட்டு அதை மையவிவாதமாக ஆக்கவேண்டாமென நினைக்கிறேன். நான் எழுதியவை ஒவ்வொருவரும் அறிந்தவைதான். எவ்வகையிலும் அதில் விவாதத்திற்கு ஏதுமில்லை. அதை ஏற்றுக்கொள்வதில் ஒவ்வொருவருக்கும் அரசியல் நிலைப்பாடும், தனிப்பட்ட முகம் ஒன்றை முன்வைக்கவேண்டிய ஆவலும்தான் தடைகளாக ஆகின்றன. இரண்டு கேள்விகளுக்கு மட்டும் என் விளக்கங்களைச் சொல்கிறேன். ஒன்று, இக்கட்டுரை இஸ்லாமியரை குற்றம்சாட்டுகிறதா? இக்கட்டுரையை அப்படி ஆக்கிக்கொள்வதென்பது அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84475/

இரு எல்லைகள்

ஜெமோ, இந்தச்சுட்டியைப் பாருங்கள். இந்தியாவில் பிறந்த ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அதற்காக அவரைக்கொல்லவேண்டும் என்று கோரி ஒருலட்சம் பேர் வெளிப்படையாக பொது இடத்தில்கூடி கோரிக்கைவிடுக்கிறார்கள். அதை நியாயம் என்று நம்மூர் முற்போக்காளர்கள் சொல்கிறார்கள். பாருங்கள் மனுஷோ,மார்க்ஸோ ஞாநியோ ஒருவராவது ஒரு வார்த்தையாவது பேசுகிறார்களா என்று கிருஷ்ணனையும் ராமனையும் முஸ்லீம்கள் எப்படி எப்படி விமர்சிக்கிறார்கள் என்று விண்  டிவியை ஒருநாலைந்து நாள் பார்த்தாலே காணமுடியும். இதைவிட கடுமையான விமர்சனத்தை இந்து தெய்வங்கள் மேல் ஒவைசி ஊடகத்தில் வெளிப்படையாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81783/

அ.மார்க்ஸின் ஆசி

ஜெ, பேராசிரியர் அ.மார்க்ஸ் உங்களை அவன் இவன் என்று ஒருமையில் எழுதி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். நீங்கள் இஸ்லாமிய, கிறித்தவ மக்கள் மேல் காழ்ப்பை வளர்ப்பதாகவும் உங்கள் படைப்புகளை வாசித்தால் எவருக்கும் சிறுபான்மையினர் மீது வெறுப்பே உருவாகும் என்றும் சொல்லியிருந்தார். நான் உங்கள் படைப்புகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். உண்மையில் பின் தொடரும் நிழலின் குரல் வாசித்தபின்னர்தான் ஏசு என்ற வடிவம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. தொடர்ந்து கிறிஸ்துவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் தீவிரமாக எழுதிவரக்கூடியவர் என்றுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74140/

சூஃபியிசம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மத அடிப்படைவாதிகளுக்கு மற்றைய மதங்களை,மரபுகளை ஒழித்துக்கட்டிவிடவேண்டும் என்ற துடிப்பு இருக்கின்றது.ஒற்றைப்படையாக உலகத்தை மாற்றிவிடலாம் என்பது உலகின் இயல்புக்கு மாறானது.பன்மைத்துவம் என்பதை உலகில் இருந்து ஒழித்துவிடமுடியாது என்பதை மத அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ளவேண்டும். ஒற்றைப்படையான மதங்களாக ஆரம்பித்துப் பரவியவைகூட காலமாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு கிளைகளாக மாறியது உலகின் அடிப்படை இயல்பான பன்மையை உருவாக்கும் தன்மைக்கு சான்றாகும்.இந்த நியதியை புரிந்துகொள்பவர்களுக்கு உலகம் எங்கும் ஒற்றைப்படையாக மாற்றிவிடலாம் என்ற எண்ணம் வருவதற்கு வாய்ப்பில்லை.மாற்றுமதங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66624/

மண்ணும் ஞானமும்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன், தேசமென்னும் தன்னுணர்வு உரையின் தாக்கம் மிகப் பரவலாக உணரப்பட்டிருகிறது. எனக்கும் நான் அறிந்த பலருக்கும் “இந்தியாவைப் பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது? இந்தியன் என்று ஏன் உணர வேண்டும்? உணர்வதால் என்ன பயன்?” போன்ற கேள்விகள் எப்போதும் உண்டு. உங்கள் உரை பல கேள்விகளுக்கு விடை சொல்லியுள்ளது. இது தொடர்பாக என்னுள் எழும் இன்னொரு முக்கிய கேள்வி – “இந்திய ஞான மரபை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இந்தியாவில் இருத்தல் அவசியமா?”. உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40525/

இஸ்லாம் – கடிதம்

முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்றும் கொலை செய்வது மதச்சடங்கு என்றும் கூறி உள்ளீர்கள்.[கௌரவக்கொலை ]இஸ்லாமிய அடிப்படை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இஸ்லாமியனாக வாழ்வது எப்படி என்று தெரியுமா? இன்று முஸ்லிம் என்ற போர்வையில் வாழும் சினிமாக் கூத்தாடிகள் “கான்” களையும், தாடி வைத்துக்கொண்டு குல்லா போட்டுக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடி அலைபவர்களைத்தான் உங்களைப் போன்றவர்களுக்குத் தெரியும் …. மனிதனாகப் பிறந்த, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுகொண்ட யாவரும் சக மனித சமுதாயத்திற்கு எந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37644/

இந்தியா இஸ்லாம்-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..வணக்கம்… உங்களின் மறுமொழியில் பெரிதும் உடன்படுகிறேன்.. இந்தியாவின் சமூக கலாச்சாரத்தின் மையச் சரடாக இருப்பது பார்ப்பனீயம்தான் என்றும் அதைத் தூக்கிப்பிடிப்பது மட்டுமே இந்து மதத்தின் வேலை என்றும் ஒரு கற்பிதம் உறுதியாக இந்த நாட்டில் உருவாக்கப்பட்டுவிட்டது.. இதை நமது அறிவுஜீவிகள் எவ்விதமான மறுகேள்வியும் இன்றி ஆதரிக்கிறார்கள்.. ஆனால், இதைத் தவறு என்று சொல்லி மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது ஆய்வாளர்கள் மற்றும் சமூக அறிவியல் நிபுணர்கள் மட்டுமே.. புனைவுலகில் பயணிக்கும், எழுத்தில் மட்டுமே தனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28713/

நவீனகுருக்கள்,மிஷனரிகள்

வணக்கம் ஜெ. நலமா? பத்திரிக்கைத் துறையில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் தங்களது எழுத்துகள் பரிச்சயம். மூன்று வருடங்களாக வாசித்து வருகிறேன். கார்ப்பரேட் சாமியார்கள் தொடர்பாக சமீபத்திய கேள்விக்கான தங்களின் பதில் கண்டேன். எனக்கும் சில சந்தேகங்கள் … தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். சிறு வயது முதலே கோயில் ஆன்மீக நம்பிக்கைகள் என வளர்ந்து வந்தவன் நான் – விவரமேதுமறியாமலேயே.தேவாரம் திருவாசகம் ஓதுவது எங்கள் வீட்டில் வழக்கமான ஒன்று. கல்லூரிக் காலத்தில் ஆசனங்கள், யோக முறைகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22995/

இஸ்லாமும் சாதியும்-ஒருநாவல்.

நாகர்கோயிலில் எழுபதுகளில் இஸ்லாமுக்கு மதம் மாறிச்சென்ற தலித் ஒருவருடன் அந்தரங்கமாக உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மதம் மாறியதைச் சுற்றியுள்ள இஸ்லாமிய சமூகம் பெரும் கொண்டாட்டத்துடன் வரவேற்றது. பெரியமனிதர்களெல்லாம் வீடுதேடி வந்தார்கள். ஊர் ஊராகக் கூட்டிச்சென்று பேசவைத்தார்கள்.கொஞ்சம் பணம் கிடைத்து வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளவும் முடிந்தது ஆனால் எல்லாம் சிலநாட்களுக்குத்தான். அதன்பின் ஒன்று புரிந்தது, மதம் மாறினாலும் அவர் புத்தன்தொப்பி என்றே அறியப்பட்டார். அவரது குடும்பத்துடன் மண உறவு கொள்ள எந்தப் பழைய இஸ்லாமியரும் தயாராக இல்லை. மணவிஷயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23060/