15. இருகருவிருத்தல் தாரை கருவுற்றிருக்கும் செய்தி அவர்கள் இருவரையுமே விடுவித்தது. அவர் அனைத்தையும் உதறி இளஞ்சிறுவன் என்றானார். குழவியின் நினைவன்றி பிறிதில்லாதவராக முகம் மலர காடுகளிலும் நகர்தெருக்களிலும் அலைந்தார். பிறக்கவிருக்கும் குழவிக்கு விளையாட்டுப்பொருட்களும் ஆடைகளும் கொண்டுவந்து சேர்த்தார். மனைவிக்கு வேதுவைக்கவும் மூலிகைச்சாறு கொடுக்கவும் தானே முன்னின்றார். பிறர் நகையாடுவதுகூட பெருமையென்றே தோன்றியது. “முதுமையில் பிறக்கும் மைந்தன் முற்றறிஞன் ஆவான் என சொல்லுள்ளது” என்று சொன்ன காமிக முனிவரிடம் அவர் அருகே நின்ற முனிவர்களின் ஏளனப்புன்னகையை உணராமல் “ஆம், …
Tag Archive: இளை
Permanent link to this article: https://www.jeyamohan.in/95313
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24
பகுதி ஐந்து : முதல்மழை [ 3 ] புடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையும் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன் படைப்பின் முதற்கணங்களாகிய அப்பிரஜாபதிகளை நோக்கி பிரம்மன் ‘நீங்கள் விதைகளாகுக’ என்று ஆணையிட்டான். “தந்தையே, நான் என் முழுமையை இழக்க விரும்பவில்லை. சிதையாத விதைகள் முளைப்பதுமில்லை” என்றார் சனகர். “நான் என் அமைதியை இழக்க ஒப்பமாட்டேன். படைப்பென்பது நிலைகுலைவேயாகும்” என்றார் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/47193