Tag Archive: இளவரசன்

கௌரவக்கொலை

அன்புள்ள ஜெமோ நான் நாடகக்காதல் பற்றி நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரியிலும் முழுமையாக உடன்படுகிறேன். ஆனால் ஒரே ஒரு விஷயம் பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன். நாகர்கோயில் அருகே இடலாக்குடி பகுதியைச்சேர்ந்த ரமேஷ்குமார் என்ற நாடார்சாதி இளைஞர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் இஸ்லாமியப்பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அந்தப்பெண் இஸ்லாமாகவே நீடித்தார். ஆனால் ரமேஷ்குமாரும் இஸ்லாமியராக மதம் மாறவேண்டும் என்று இரண்டு இஸ்லாமிய அமைப்புகள் வீடுதேடிவந்து வெளிப்படையாகவே மிரட்டின. ரமேஷ்குமார் அவர்களிடம் கெஞ்சியிருக்கிறார். ஒரு கட்டத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37610

நாடகக்காதல்

இரண்டுநாட்கள் சென்னையில் விடுதியில் இருந்தேன். இரவில் தொலைக்காட்சி பார்த்தபோது பத்ரி சேஷாத்ரி ‘புதிய தலைமுறை’யில் இளவரசன் மரணம் பற்றிப்பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் இத்தகைய விவாதங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொண்டவன். ஆங்கிலத் தொலைக்காட்சிகளை விட மலையாளத் தொலைக்காட்சிகள் விவாதத்தின் தரத்தில் மேலானவை. ஆனால் அவையே வெறுமே பொழுதை வீணடிக்கும் குப்பைகள் மட்டுமே. தமிழில் ஒரு விவாதம் நிகழமுடியும் என்ற நம்பிக்கையே எனக்கில்லை. இருந்தாலும் பத்ரி என்ன சொல்கிறார் என்று பார்த்தேன். நான் எப்போதுமே கவனிக்கும் மனிதர் அவர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37590

பாட்டாளி மக்கள் கட்சி பற்றி…

இளவரசனின் மரணத்தைப் பற்றிப் படித்ததில் இருந்து ஒரு வருத்தமான மன நிலையிலேயே இருந்து வருகிறேன். ஆழ்ந்த தார்மீகத்துடன் எழுதப்பட்ட உங்கள் கட்டுரை மன ஆறுதல் அளிக்கிறது. ஒரு வேளை அந்த இளைஞன் நல்ல வேலையில் இருந்து அதனால் நல்ல பொருளாதார நிலையில் இருந்திருந்தால் இந்த கீழ் மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பியிருக்கலாமோ என்னவோ. நீங்கள் சமகால அரசியல் விஷயங்களில் நேரடியான கருத்துக்கள் கூறுவதைத் தவிர்த்து வந்தாலும், நீங்கள் பாமகவை ஒரு ஆக்கபூர்வ அமைப்பாக அடையாளப்படுத்தி வருவதாகவே நான் மனப்பதிவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37580

இளவரசன்

சில சமகால நிகழ்வுகள் அரசியல் சமூகவியல் செய்திகள் என்பதற்கும் அப்பால் சென்றுவிடுகின்றன. அவற்றில் விவாதிப்பதற்குக்கூட ஏதுமிருப்பதில்லை. நெடுங்காலநோக்கில் மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் உடையவை அவை. அதிலொன்று இளவரசனின் மரணம். தமிழகத்தின் முக்கியமான அரசியல் நிகழ்வாக இளவரசன் திவ்யா காதல் மணம் உருவாகி வருவதை கவனித்துக்கொண்டிருந்தேன். அதில் எனக்கு விவாதிக்க ஏதுமே இல்லை. இந்த நூற்றாண்டு உருவாக்கிய விழுமியங்கள், நெறிகள் எதிலும் நம்பிக்கையற்ற கீழ்மனிதர்களுக்கும் இந்நூற்றாண்டு உருவாக்கிய அறத்தை நம்பிய இரு புதிய தலைமுறையினருக்கும் இடையேயான போர்தான் அது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37573