Tag Archive: இலியட்

வீரகதைப்பாடல்கள்

அன்பு ஜெயமோகன், நலந்தானே. தமிழினியில் இலியட் குறித்த தங்கள் கட்டுரையை வாசித்தேன். ட்ராய் ( பிராட் பிட்) திரைப்படமாகக்  காட்டப்பட்டதை விட உங்கள் மொழிபெயர்ப்பில் நிறைய சாரமிருந்ததாக உணர்கிறேன். தமிழில் உள்ள வீரகதைகள் பற்றிப் பேசவே இந்தக் கடிதத்தை எழுதத் துவங்கினேன். மதுரை வீரன், பொன்னர் சங்கர் பற்றிய பாடல்கள் நிறைய கோவில்களில் இன்றும் பாடப்பட்டு வருகின்றனதானே. ‘மன்னான் சின்னாண்டி கதைப்பாடல்கள்’ என்னும் சிறிய புத்தகத்தை 9 வருடங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணி சாலையோர பழம்புத்தகங்களிலிருந்து கண்டெடுத்தேன். இன்னமும்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20582

ஊட்டி முகாம் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், ஊட்டி காவிய முகாம் இலக்கிய  வாசிப்பின் புதிய வாசல்களைக் காட்டுவதாக அமைந்தது இப்போது காளிதாசன் மிக நெருங்கியவனாகக் காட்சி அளிக்கிறான்.இலியட்டை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.இலக்கியம் தவிர்த்து என்னை வியப்பில் ஆழ்த்திய விசயங்களும் உள்ளன.அவை ஜெயமோகன் மற்றும் தேவ தேவனின் ஆளுமைகள். நீங்கள் உங்களுடைய பழைய கட்டுரைகளில் நான் இனி மேல் சோர்வுற்று இருக்கவோ கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவோ போவதில்லை என்று எழுதியிருந்தீர்கள் .எழுதுவதன் மன எழுச்சியில் நீங்கள் வெளிப்படுத்திய  வாசகங்கள் அவை என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18021

ராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்?

// கிரேக்க புராணங்கள், காவியங்கள் காலத்தால் முந்தையவை.  ஆகவே அவற்றின் கவித்துவம் எளிமையானது, அவற்றின் தத்துவார்த்தம் முழுமைநோக்கி விரியாதது.// // தத்துவார்த்தமான பெருமதங்கள் உருவாகிக் குறியீடுகள் பிரம்மாண்டமாகப் பெருகியபிறகு உருவாகும் காவியங்களில் இருக்கும் கவித்துவச்செறிவை இவற்றில் நாம் காணமுடியாது // ஜெ, கிரேக்க புராணங்கள் ராமாயண, மகாபாரதங்களின் ஆதி வடிவை விடவும் முந்தையவை என்று கருதுகிறீர்களா? எனக்கென்னவோ அவற்றில் இருக்கும் primitive  தன்மையினால் அவை இந்திய இதிகாசங்களுக்கும் முந்தைய காலத்தவையாகத்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் வலிந்து கொள்வதாகப் படுகிறது. வலுவான அகழ்வுச் சான்றுகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17891

படைப்பாளிகளின் மேற்கோள்கள்

அன்புள்ள ஜெ. உலக இலக்கியங்கள் – மேற்கோள் குறித்து ஒரு கேள்வி. பல விவாதங்களில், திரிகளில் மேற்கத்திய , உலகப்படைப்பாளிகளையும், படைப்புகளையும் மேற்கோள் காட்டி கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன.  உதாரணத்திற்கு – தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், செக்காவ் மற்றும் பலர். தற்சமயம் உங்கள் தளத்தில் “இலியட்டும் நாமும்” படித்துக்கொண்டிருக்கிறேன். அவை உலக அளவில் பிரபலமைடைந்ததற்கு அதன் தரமும், பரவலாக்கப்பட்ட முயற்சியும் காரணம். ஒரு அற சிந்தனையின், தத்துவ விவாதத்தின், இலக்கிய அறிவின் தேடலில் நமது (நம் படைப்புகளும், தத்துவவாதிகளும்) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17747

காவியங்களும் தொன்மங்களும்

இலியட் பற்றி ஜெயமோகனின் கருத்துகள் தொன்மங்களின் ரசிகனான என்னைக் கவர்ந்தன. பிரியமும் அகிலிசும் சந்திக்கும் காட்சி ஜெயமோகன் வார்த்தைகளில் பிரமாதமாக இருந்தது. ஆனால் இலியட், ஒடிசி இரண்டும் – உண்மையைச் சொல்லப் போனால் இந்தியப் பாரம்பரியம் இல்லாத எந்தத் தொன்மமும் – என் மனதைத் தொடவில்லை. இது என் பிரச்சினையா,இந்தியர்களுக்கு மட்டும்தான் இப்படியா, கிரேக்கர்களுக்கு இலியட்தான் மனதைத் தொடும் தொன்மமாக அமையுமா என்று தெரியவில்லை. அதுவும் இதைப் போன்ற வீர கதைகள் – குறிப்பாக பியோவுல்ப் உள்ளிட்ட ஸ்காண்டிநேவியத் தொன்மங்கள்எல்லாமே ஜெயமோகன் சொல்வது போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17740

இலியட்டும் நாமும் 4

[தொடர்ச்சி] அக்கிலிஸ் ஹெக்டரைக் கொல்லுதல்   நாடகத்தருணம் ‘நாடகாந்தம் கவித்வம்’ என்ற ஒரு சொல்லாட்சி உண்டு. நாடகீயத்தன்மையின் உச்சமே சிறந்த கவிதை. கம்பராமாயணத்தில் நாம் காண்பதெல்லாம் உயர்தர நாடகீயத் தருணங்களை. இலியட்டிலும் பல உச்சகட்ட நாடகத் தருணங்கள் உள்ளன. அக்கிலிஸுக்கும் அகமெம்னானுக்கும் உருவாகும் மோதல், அக்கிலிஸை அவன் தாய் உட்பட உள்ள தேவதைகள் சமாதானப்படுத்துவது, நண்பன் கொலைசெய்யப்படும்போது அக்கிலிஸ் கொள்ளும் கோபாவேசவெறி எல்லாமே நாடகத்தன்மை மிக்க இடங்கள். ஆனால் கடைசியில் ஹெக்டரைக் கொன்று அந்தச் சடலத்தை அக்கிலிஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17079

இலியட்டும் நாமும் 3

[தொடர்ச்சி] ஹெலென் இலியட்டின் கவித்துவம்   இலியட் காவியத்தை வீரகதைப்பாடல்களில் இருந்து காவியத்தை நோக்கி நகர்ந்த ஒருவடிவம் என்று சொல்லலாம். ஆகவே உக்கிரமான போர்ச்சித்தரிப்பே அதன் சிறப்பு. இலியட்டில் முக்கியமான கதையோட்டம் ஏதும் இல்லை. அதன் முதல் வரியே சொல்வதுபோல அது அக்கிலிஸ் என்ற மாவீரனின் ஆண்மை, ஆணவம்,  கட்டுக்கடங்காத சினம் ஆகியவற்றின் விரிவான சித்தரிப்பு மட்டுமே. டிராய் என்ற நகரில் இருந்த இலியம் என்ற கோட்டையில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளே இந்தக்காவியத்தில் சொல்லப்பட்டுள்ளன. அக்கிலிஸ் தீட்டிஸ் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17078

இலியட்டும் நாமும் 2

[தொடர்ச்சி]     பாரீஸும் ஹெலெனும்   இலியட்டின் நாட்டார் அழகியல்     இலியட் காவியத்தின் நாட்டார் அம்சம் எதில் உள்ளது? செறிவை விட அது சரளத்தையே முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில்தான். அது நாட்டார் அழகியலின் முக்கியமான அம்சம். அதாவது இது கல்வி கற்ற, காவியப்பயிற்சி உடைய வாசகர்களுக்கானது அல்ல. ஒரு போர்க்களத்தில் போர்முடிந்தபின் இரவில் கணப்பருகே கூடும் வீரர்களிடமோ அல்லது நாட்டுப்புற விழாவிலோ அல்லது அறுவடைக்களத்தில் கூடும் விவசாயிகளிடமோ அல்லது பயணிகள் சத்திரத்திலோ பாடப்படும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17075

இலியட்டும் நாமும்-1

மகா கவி ஹோமரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலியட் காவியத்தை ஐரோப்பியப் பண்பாட்டின் அடிப்படைகளைத் தீர்மானித்த பெருங்காப்பியங்களில் ஒன்றாகச் சொல்லலாம்.  கலைக்களஞ்சியங்களில் பெரும்பாலும் ஹோமரைப்பற்றி அதிகமாக ஏதுமிருப்பதில்லை.  உதாரணமாக மெரியம் வெப்ஸ்டரின் இலக்கியக்கலைக்களஞ்சியம் ஹோமரைப்பறி அனேகமாக ஏதும் தெரியாது , தெரிந்த செய்திகளும் ஊகங்களே என்றுதான் சொல்கிறது. கிரேக்கத்தின்  ஹெலெனிய காலகட்டத்தில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட நான்கு குலங்களில் ஒன்றாகிய அயோனிய குலத்தைச் சேர்ந்தவராக அவர் இருக்கலாம். அவரது தாய்மொழி அயோனியம். கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரோடடஸ் தனக்கு நானூறுவருடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17073

ஊட்டி காவிய முகாம் (2011) – 1

கம்பராமாயணம், ரகுவம்சம், இலியட் குறித்த உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் ஊட்டி காவிய முகாம் துவங்கிவிட்டது. இங்கே சில புகைப்படங்கள். உரைகளின் ஒலிவடிவம் விரைவில் வெளியாகும் முகாம் அரங்கு மாலை நடை மாலை நடை நாஞ்சில் நாடன் கம்பராமாயண உரை கவிஞர் தேவதேவன் உணவு இடைவேளையில் ஒரு உரையாடல் ஜெயமோகன் ஊட்டி காவியமுகாம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/17069