அன்பின் ஜெயமோகன். வணக்கம். நான் மா.கார்த்திகைப்பாண்டியன். மதுரையைச் சேர்ந்தவன். தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய அபுனைவுகளைக் காட்டிலும் புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பிறகு ஏழாம் உலகம், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம் என நாவல்கள். சமீபத்தில் எழுதப்பட்ட அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே வருத்தம் உண்டு. ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் …
Tag Archive: இலட்சுமணப்பெருமாள்
Permanent link to this article: https://www.jeyamohan.in/21353