Tag Archive: இலட்சியவாதம்

இலட்சியவாதம், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் நீங்கள்  “ஒரு சொல்லாட்சி ‘வெர்சேல்ஸ் உடன்படிக்கை முதல் ஹிரோஷிமா வரை’ என்பது. என் வரலாற்றுப்பிரக்ஞையில் ஒரு புரளலை உருவாக்கியது அது. 1789 ல் பிரெஞ்சுப்புரட்சியின் வெர்சேல்ஸ் உடன்படிக்கை ‘சமத்துவம் சகோதரத்துவம் ‘ என்னும் ஆதார ..”  என எழுதுகிறீர்கள். இங்கு வெர்சேல்ஸ் உடன்படிக்கை  என்பது 1789 பிரெஞ்சுப் புரட்சியை குறிப்பிடுவது அல்ல. 1914-18  முதல் உலக யுத்தம் முடிந்தவுடன் பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுவந்த உடன்படிக்கை . அது பாரிசின் வெர்சாய் அரண்மனையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87567

இலட்சியவாதம் அழிகிறதா?

  எரிக் ஹாப்ஸ்பாமின் வரலாற்றுச்சிந்தனைகள் பதினேழாம்நூற்றாண்டு ஐரோப்பிய அறிவொளிக்காலத்தை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனையாக கருதும் போக்கு கொண்டவை. மானுட இலட்சியவாதத்தின் ஓர் உச்சகட்ட தருணம் அது என்றே ஹாப்ஸ்பாம் எண்ணுகிறார். இந்த விஷயத்தில் எப்போதும் அவருடன் நான் ஒத்துப்போவதனால் அவர் எனக்கு நெருக்கமானவராக இருக்கிறார் என்று சொல்லலாம்.   ஐரோப்பிய அறிவொளியுகம் தொடங்கிய அந்தக்காலகட்டத்தில்தான ஐரோப்பா உலகளாவிய காலனியாதிக்கத்தை உருவாக்கியது. தென்னமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்டமான இனப்படுகொலைகள் வழியாக ஒட்டுமொத்த பழங்குடிகளையும் அழித்தொழித்தது. ஆப்ரிக்காவிலும் இந்தியாவிலும் முழுமையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22732

பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன். ஏற்கனவே இரு முறை ‘பின் தொடரும் நிழலின் குரல்’ படித்திருக்கிறேன்.2009 க்கு பிறகு சென்ற வாரம் மீண்டும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.முன்பு படித்த பொழுது கதையின் வெறும் பகுதியாக தாண்டிச் சென்ற பல பக்கங்கள் இம்முறை பல புதிய வாசல்களை திறந்து காட்டின. ஓர் இலக்கியம் மாபெரும் இலக்கியமாக அடையாளப்படுதப்படுவது இந்த அம்சத்தால் தானே? விஷ்ணுபுரமும் காடும் என்றென்றும் என்னுடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56396

வெண்முரசும் நவீனத்துவமும்

வெண்முரசு நாவலை ஒட்டி உள்ளே வரும் புதியவாசகர்களில் ஒருசாரார் இந்நாவலின் புனைவைப்பற்றிய குழப்பங்களை எழுதியிருக்கிறார்கள். அதாவது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதும் புனைகதைகளைத்தான் அவர்கள் வாசித்திருக்கிறார்கள். இந்த நாவல் புராணம்போல இருக்கிறது, இப்படி எழுதுவது நவீன இலக்கியமாகுமா என்று சிலர் கேட்டிருந்தனர். வாசிப்பின் ருசி, படைப்புகள் சார்ந்த எதிர்பார்ப்பு, அல்லது படைப்புகள் சார்ந்து இருக்கும் பொது மனஉருவகம் என்பது இயல்பானதோ தன்னிச்சையானதோ அல்ல. அது எப்போதும் கட்டமைக்கப்படும் ஒன்று. அதன்பின்னால் தத்துவம், அரசியல் போன்றவை உள்ளன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45840

அறம் வாழும்-கடிதம்

அன்புள்ள ஜெயன் யானை டாக்டர் , மத்துறு தயிர் , மற்றும் சோற்று கணக்கு மூன்று கதைகளும் இரண்டு வாரங்களாக எனது சிந்தனையிலும் உணர்விலேயும் மத்துக் கொண்டு கடைவது போலவே இருக்கிறது. டாக்டர் கே , கேத்தேள் சாஹிப், பேராசிரியர், போன்ற மனிதர்கள் எங்காவது தென் படுகிறார்களா அல்லது இந்த முப்பது வருஷ வாழ்க்கையில எங்கேயாவது சந்தித்திருக்கின்றோமா என்று மனம் தேடிக் கொண்டே இருக்கின்றது . டாக்டர் தம்பையா, எனது ஐந்தாம் வகுப்பு சாமுவேல் சார், சென்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21396

திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3

திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம் இன்று ஒரு முக்கியமான அமைப்பு. அதன் பணிகளில் நீங்கள் முக்கியப்பங்கு ஆற்றியிருக்கிறீர்கள் இல்லையா? தமிழ் இலக்கிய வாழ்வில், நான் பெற்ற பயன் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க தொடர்பு. 1963ஆம் ஆண்டில் ஒரு சிமிண்டு கிட்டங்கியின் மாடியறையில் ஆரம்பித்து இன்றைக்கெல்லாம் நாற்பத்திநான்கு ஆண்டு கடந்து விட்ட நிலையில் மூன்று மாடி உயர்கட்டிடமாக வளர்ந்துநிற்கிறது. பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூற்களைக் கொண்டு நகரின் பெரியதோர் நூலகமாகவும் கலாச்சார அரங்கமாகவும் சிறந்து விளங்குகிறது. சங்கவெளியீடாக 1978ல் “கேரளத்தமிழ்” தொடங்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9389