Tag Archive: இலங்கை

வரலாற்றெழுத்தின் வரையறைகள் 3

இலங்கை வரலாற்றை எழுதும்போது… இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றெழுத்தின் வரலாறும் அதன் இன்றைய போக்குகளும் இலங்கையின் வரலாற்றெழுத்துக்கும் பெரும்பாலும் பொருந்துவதாகவே இருக்கும். என்னுடைய எல்லைக்குட்பட்ட வாசிப்பில் இருந்து அத்தகைய ஒரு முன்வரைவையே நான் கொண்டிருக்கிறேன். இந்தியப் பெருநிலத்திற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இலங்கைக்கு உண்டு. தெளிவாக எழுதப்பட்ட ஒரு குலவரலாற்று நூல் இலங்கைக்கு உள்ளது. இந்தியாவின் வரலாற்றிலேயே கணிசமான தருணங்களில் காலநிர்ணயம் மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், மகாவம்சம் ஒரு குலவரலாறு மட்டுமே. ஒரு குலம் தனக்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43399

ஒரு சந்திப்பு

இலங்கையின் அரசியல் விஷயங்களில் எப்போதும் சமநிலை கொண்ட குரலாக ஒலித்துவந்த டி.பி.எஸ். ஜெயராஜின் கட்டுரை ஒன்றை இன்று வாசித்தேன். 1989ல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்கரசி தன் கணவரின் பாதுகாவலராக இருந்த நிஸங்க திப்பதும்முனுவாவை வீட்டில் சென்று சந்தித்த நிகழ்ச்சியைப்பற்றிய உணர்ச்சிகரமான கட்டுரை வரலாறு உருவாக்கும் அர்த்தமின்மையை தொடமுடிவதே எப்போதும் பெரும்புனைவுகளின் கனவு. முடிவதே இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/58275

அமைதிப்படை- திருமாவளவன் கடிதம்

அன்புடன் ஜெயமோகன், கற்பழித்ததா இந்திய ராணுவம்? என்ற குறிப்புப் படித்தேன். உங்கள் பதிலிலும் இது மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம் என்பதுபோன்ற மயக்கம் இருக்கிறது. என் கவிதைகளூடாக என் அரசியல் கருத்தை அறிவீர்கள். புலிகளுக்கோ அல்லது அரசுக்கோ ஆதரவான கருத்துக் கொண்டவன் அல்ல. இந்திய ராணுவம் இருந்த காலப்பகுதியில் அதற்குள் வாழ்ந்தவன். இந்திய ராணுவத்தின் பாலியல் வதைக்கு உள்ளாகாத பெண்கள் இருக்கமுடியாது என்று சொல்லுமளவுக்கு இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் இருந்தது. அது பகிடிவதைகள் பாலியல் நோக்கோடு தொடுதல் தடவுதல் என்பவற்றிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27367

இந்திய அமைதிப்படை -ஷோபா சக்தி

இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற நல்வாய்ப்பை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். அன்று நாங்கள் நிராகரித்த அதே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரியே (பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல் செய்வது ) இப்போது தமிழர் தரப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் இன்றைய அரசியல் எதார்த்தமாயிருக்கிறது. ஆனால் இந்த எதார்த்தம் எந்த வகையிலும் இலங்கையில் இந்திய இராணுவம் நடத்திய போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அராஜகங்களையும் நியாயப்படுத்திவிடாது. காலக் கொடுமை

Permanent link to this article: https://www.jeyamohan.in/27364

இலங்கையில் இருந்து ஒரு கடிதம்

அன்பும் மதிப்புமிகு ஜெயமோகனுக்கு, உங்களின் யானை டாக்டர் படித்தேன். மனசு மத்தாளமானது.உங்களைக்காண வந்த எஸ்.எல்.எம்.ஹனீபா மூலம் கிட்டியது. ஊமைச்செந்நாய்க்கு நிகரான படைப்பு.இன்றைய தமிழ்ச் சூழலில் ஜெயமோகன் என்கின்ற உங்களால் மட்டும்தான் இவ்வாறு எழுத முடியும். இது முகஸ்துதியோ புகழ்ச்சியோ அல்ல,சத்தியம்.உங்களைக்கண்டு வந்த எஸ்.எல்.எம்.என்னிடம் ஜெயமோகன் என்கின்ற புத்தனைக்கண்டு வந்தேன் என்றார்.புத்தனின் மறு பெயர் ஈரம்.யானை டாக்டரின் ஒவ்வொரு பத்தியிலும் அந்த ஈரம் சொட்டுகிறது. இலங்கையில் 6200 யானைகள் வாழ்ந்தாலும் எங்கள் காடு 2200 யானைகளுக்கே போதுமானது என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20350

ஹனீபா-கடிதம்

அருமை ஜெயமோகனுக்கு சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது.நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது. இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது. எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20355