Tag Archive: இலக்கிய விவாதங்கள்

அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்

’அந்தக்கால எழுத்தாளர்கள் சிந்தனைகளை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டினார்கள். இப்போதைய எழுத்தாளர்கள் வெறும் விவாதங்களைத்தான் உருவாக்குகிறார்கள்’ இந்தவரி இப்போது பிரபலமாக இருக்கிறது. ஒருவாரத்தில் பலர் என்னிடம் சொல்லிவிட்டார்கள். இப்போதுள்ள விவாதங்களின் பின்னணியில் இதை நீங்கள் விளக்கவேண்டும் என்று நினைக்கிறேன் ஜெயராமன் அன்புள்ள ஜெயராமன், அனேகமாக இது ஏதோ ஃபேஸ்புக் மேதையின் வரியாகத்தான் இருக்கும். எதையும் யோசிக்காமல் வாசிக்காமல் பேசுவதற்கான இடம் அது. இந்த தளத்திலேயே இதற்கிணையான கேள்விகளுக்கு மிகவிரிவான, ஆதாரபூர்வமான பதில்கள் பத்துமுறைக்குமேல் எழுதப்பட்டுள்ளன. ஒரு எளியவாசகன், அடிப்படை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57570

பாரதி விவாதம்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ.மோ, இக்கடிதம் ”பாரதி விவாதம்” பற்றியதே அன்றி ”பாரதி பற்றியது” அல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்திவிடுகிறேன். பாரதி பற்றிய விவாதத்தை மூன்று பேர் மட்டுமே முன் எடுத்து சென்றதாகவும் அது எதிர் பார்த்ததே என்றும் தெரிவித்திருந்தீர்கள். அது தொடர்பாக கீழ்க்கண்டவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். 1. எதிராளியின் பலத்தில் பாதியை வாலியைப் போல் நீங்கள் வாங்கி கொண்டு விடுகிறீர்கள்? எதிராளிக்கு மூச்சு முட்டுகிறது. அசுர பலம் சார் உங்களுக்கு. எதிராளி எங்கே வாதத்தை எடுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22242

கேள்வி பதில் – 53, 54, 55

கதைக்கான கரு எப்போது spark ஆகிறது? எவ்விதம் அதனைக் கதையாக வளர்த்தெடுக்கிறீர்கள்? — மதுமிதா. கதைக்கான கரு எப்போதுமே ஒரு சிறு அதிர்வாகத் தொடங்குகிறது. எப்போதுமே ஓர் அனுபவம். அபூர்வமாக அது வாசிப்பினால் கிடைத்த அனுபவமாகவும் இருக்கலாம். செய்தியோ கதையோ. ஒரு போதும் ஒரு கருத்துத் தூண்டுதலாக அமைவது இல்லை பெரிய, தீவிரமான அனுபவங்கள் கதையானதில்லை. உதாரணமாக நான் ஒருமுறை நாமக்கல் அருகே என் முன்னே சென்ற ஒரு பேருந்து விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்டேன் பத்து பேருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113

திண்ணை ஆசிரியருக்கு கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு கோ.ராஜாராம் எதிர்வினை கண்டேன். இலக்கிய விவாதங்களில், அவையடக்கம் அல்ல பிரச்சினை. மதிப்பீடுகளும், அதிலுள்ள நேர்மையும் தான். தன்னடக்கம் முதலிய ‘எளிமைகள்’ தமிழ் படைப்பாளிகளிடமிருந்தே எதிர் பார்க்கப் படுகின்றன.  பிற சூழல்களில் அப்படி இல்லை. ஆண்டையைக் கண்டவுடன் அக்குளில் அங்க வஸ்த்திரத்தை இடுக்கிக் கொள்ள வித்வானிடம் எதிர்பார்த்த காலத்தின் மிச்சங்கள் அவை. கோ.ராஜாராம் ஒரு பட்டியல் போட்டுள்ளார். அது அவரது அளவீடுகளைப் பொருத்தது. அப்படி பற்பல பட்டியல்கள் ஒரு சூழலில் வரலாம். அவை முன் வைக்கப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34