Tag Archive: இலக்கிய விருது

அசோகமித்திரனுக்கு விருது

கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் 2013க்கான இலக்கிய விருது எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு வழங்கப்படுகிறது. கண்ணதாசனின் ரசிகரான கிருஷ்ணகுமார் என்பவரின் அமைப்பு இது. இலக்கியத்திற்கும் கலைக்கும் இது அளிக்கப்படுகிறது. கலைக்குப் பாடலாசிரியர் முத்துலிங்கம் விருது பெறுகிறார் இதற்கு முன்னர் இவ்விருதினை திரு.நாஞ்சில்நாடன்,திரு.எஸ்.ராமகிருஷ்ணன்,திரு. வண்ணதாசன்,திரு.கலாப்ரியா,திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி,டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் திரு.இராம.முத்தையா,திரு.பி.ஆர்.சங்கரன் ஆகியோர் பெற்றுள்ளனர். அசோகமித்திரனுக்கு வாழ்த்தும் வணக்கமும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/36617

கேள்வி பதில் – 67, 68

எல்லாத்துறைகளிலும் (கல்வி, இசை, நடனம், விளையாட்டு, என) விருதுகளும் பரிசுகளும் இருந்தாலும் எழுத்துத் துறையில் மட்டும் ஒரு கலைஞன் பரிசும் விருதும் பெறும்போது பொதுமக்கள்/ரசிகர்கள் எல்லோரும் அவரைப்பற்றி சிலாகிக்க, அவரது சககலைஞர்களிடமிருந்து மட்டும் ஏன் இவ்வளவு மாற்றுக்கருத்துகள்? எழுத்தும் அதற்கான ஊடகங்களும் எழுத்தாளர்களுக்கு சுலபமாக இருப்பதாலா? பரிசுகள் அளிக்கப்படும் தருணங்களில் சமரசமற்ற திறனாய்வுதான் என்று இல்லை, குறைந்தபட்சம் சமரசமுள்ள, சார்புநிலையுள்ள திறனாய்வாவது படைப்பின்மீது செய்யப்படுகிறதா? இதை நான் வைரமுத்துவிற்காகக் கேட்கவில்லை. — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். எழுத்து தவிர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122