Tag Archive: இலக்கிய விமர்சனம்

ரசனையும் பட்டியலும்

ஜெயமோகன், பிரமாதமான கட்டுரை. இருபத்தைந்து, இருபத்தாறு வருஷங்களுக்கு முன்னால் படித்திருக்கிறீர்களா என்ற புத்தகத்தைப் படித்தேன். சாண்டில்யனும் சுஜாதாவும் கல்கியுமே தமிழ் வாசிப்பு என்று கொஞ்சம் இளக்காரமாகப் பார்த்தவனுக்கு அது ஒரு பெரிய கண் திறப்பு. பின்னாளில் அவர் குறிப்பிட்டிருந்த புத்தகங்கள் பல பில்டப் அளவுக்கு இல்லாமல் ஏமாற்றம் அளித்தன (இதயநாதம், நாகம்மாள், மு.வ.வின் ஏதோ ஒரு புத்தகம், எஸ்விவியின் உல்லாச வேளை) என்றாலும் இப்படி இலக்கியமும் நிறைய இருக்கிறது, தேடிப் பிடித்து படிக்காதது என் தவறு எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78282

அழியா அழல்

  பொன்நிற தாழை மடல்களுக்குள் புகுந்துகொண்ட தன் சகோதரர்களை போல் அதுவும் அன்னை என்றெண்ணி காட்டு தீயில் புகுந்தழிகிறது. மறுபிறப்பில் சந்திர வம்சத்து அரசனாக பிறக்கும் வரம் பெற்ற உசகன் மண்ணில் சந்தனுவாக பிறக்கிறான். அவன் அன்னைக்காக அவளின் அரவணைப்பிற்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறான். அவன் கங்கா தேவியிடமும் சத்தியவதியிடமும் கூட முட்டி முட்டி அதைத்தான் தேடி திரிந்தானோ? அழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/55887

சுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்

அன்புள்ள ஜெ, இந்தக் கடிதம் மற்றுமொரு சுஜாதா புகழ் பாடி தங்களை வசை மாரி பொழிய எழுதவில்லை. தங்களது சுஜாதா பதிவைப்பற்றிச் சில கருத்துக்களைப் பதிய விருப்பபடுகிறேன். பிழைகளை மன்னிக்கவும்.சுஜாதாவின் மாணவன் என்பதில் பெருமையும் கர்வமும் கொண்டுள்ளவன். தங்களது எழுத்துக்களை சில மாதங்களாக ரசித்து உணர்ந்து வியந்தவன்(மாடன் மோட்சம்,சோற்றுக்கணக்கு). (ஜெ – நீங்கள் மட்டுமல்ல இலக்கிய அடிப்படை அறிந்த பெரும்பாலான தமிழ் வாசகர்கள் சுஜாதாவைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை ) நாம் அனைவரும் குழந்தைப்பருவத்தில் இருந்து வளர்ந்த முறை: …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17084

ஒருமையும், உறுதியும்

இலக்கிய விமர்சனம் சார்ந்த விவாதங்களில் தமிழில் எப்போதுமே ஒருவகைக் கருத்துக் குழப்பம் வெளிப்படுகிறது. ஒரு படைப்பின் உறுதியான தன்மை அல்லது ஒருமையை ஆசிரியரின் கருத்துநிலை சார்ந்த உறுதிப்பாடாக எடுத்துக்கொள்கிறார்கள். இலக்கியப்படைப்பின் நெகிழ்தன்மை, வாசகன் மனதில் அது வளரும் தன்மை ஆகியவற்றுக்கு எதிரானதாக இது விளக்கப்படுகிறது. குறிப்பாக நவீனத்துவத்துக்கு எதிரான விமர்சனங்களில் மிக ஓர் ஆசிரியனின் உறுதிப்பாடு ஓர் எதிர்மறைக்கூறாகவே சுட்டிக்காட்டப்படுகிறது. அதற்கு ஆதாரமாக அந்த ஆக்கத்தில் உள்ள வடிவ உறுதி அல்லது உள்ளொழுங்கின் உறுதி சிலரால் [தவறாக] …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10605

ஏற்புக் கோட்பாடு

இலக்கிய விமர்சனத்தை மூன்று பெரும் காலகட்டங்களாகப் பகுக்கலாம். ஒன்று, படைப்பாளியை மையப் படுத்தி ஆராயும் விமர்சனம். கற்பனாவாத கால கட்டத்தில் இலக்கிய விமர்சனம் அப்படித்தான் ஆரம்பித்தது. கூல்ரிட்ஜின் இலக்கிய விமர்சன முறை இதுவே. அதற்கு மாற்றாக படைப்பை முன்னிறுத்தி ஆராய்வது புதுத் திறனாய்வு முறை. எலியட் முதல் அது ஆரம்பிக்கிறது. அமெரிக்க புதுத் திறனாய்வாளார்களில் உச்சம் கொள்கிறது. மூன்றாவது அலை என்பது வாசகனை மையப்படுத்தியதாகும். இலக்கிய ஆக்கம் என்பது வாசிப்பு வழியாக உருவாவதே என்பதுதான் இந்த ஆய்வின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10634

சுஜாதா பற்றி…

அன்புள்ள ஜெயமோகன், இந்த இணைப்பை இப்போதுதான் வாசித்தேன். http://www.saravanakumaran.com/2010/09/blog-post_04.html . சுஜாதாவைப்பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் சுஜாதா இருந்தபோதே வைத்திருக்கலாம் என்று இணையத்தில் அவ்வப்போது வாசிக்கிறேன். ஆரம்பத்தில் நீங்கள் சுஜாதா இருந்தபோது அவரை வணிக எழுத்தாளர் என்று திட்டிவிட்டு இறந்ததுமே இலக்கியமேதை என்று கொண்டாடினீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உலவியது. சாரு நிவேதிதா அவ்வாறுதான் செய்தார் என்பதற்கு என்னிடம் பல பக்கங்களுக்கு ஆதாரம் உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணன் கூட ஒரு சொல்லும் சொன்னதில்லை. இப்போது நீங்கள் சுஜாதாவை அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8412

இலக்கிய விமர்சனம் என்பது…

இந்த விமர்சனத்தால் என்ன பயன் என்றசில கடிதங்கள் வந்தன. இலக்கிய விமர்சனம் என்பதே குறைநிறை கண்டு தரம் அறிந்து வகைப்படுத்தும் ஒரு செயல்பாடுதான். உலகமெங்கும் இலக்கியம் எங்கே உள்ளதோ அங்கெல்லாம் இலக்கிய விமர்சனம் உள்ளது. இலக்கியம் மேலும் மேலும் தன்னை கூர்மைப்படுத்திக்கொண்டு முன் செல்ல இலக்கிய விமர்சனம் இல்லாமல் முடியாது. இலக்கிய விமர்சனம் நிகழாத மொழியில் இலக்கியம் அழியும். ரசனை என்பது ‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குதல்’ அல்ல. இலக்கியத்தை நுண்ணுணர்வுடன் அறிவார்ந்த தீவிரத்துடன் வாசிப்பதே அது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7840