Tag Archive: இலக்கிய வாழ்க்கை

திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3

திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம் இன்று ஒரு முக்கியமான அமைப்பு. அதன் பணிகளில் நீங்கள் முக்கியப்பங்கு ஆற்றியிருக்கிறீர்கள் இல்லையா? தமிழ் இலக்கிய வாழ்வில், நான் பெற்ற பயன் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க தொடர்பு. 1963ஆம் ஆண்டில் ஒரு சிமிண்டு கிட்டங்கியின் மாடியறையில் ஆரம்பித்து இன்றைக்கெல்லாம் நாற்பத்திநான்கு ஆண்டு கடந்து விட்ட நிலையில் மூன்று மாடி உயர்கட்டிடமாக வளர்ந்துநிற்கிறது. பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூற்களைக் கொண்டு நகரின் பெரியதோர் நூலகமாகவும் கலாச்சார அரங்கமாகவும் சிறந்து விளங்குகிறது. சங்கவெளியீடாக 1978ல் “கேரளத்தமிழ்” தொடங்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9389

கேள்வி பதில் – 13

உங்கள் பார்வையில் இலக்கியம் என்பது என்ன? இலக்கிய வகை சார்ந்த எழுத்துகள் காலத்தின் சூழலுக்கேற்ப மாறக்கூடியது என்ற கருத்து சரியா??— ஷக்தி ப்ரபா. இலக்கியம் என்பது என்ன என்ற வரையறைகள் இலக்கியத்திறனாய்வில் பல்லாயிரம் உண்டு. எல்லாமே சரிதான். எல்லாமே முழுமையற்றவையும்கூட. அன்பு என்றால் என்ன? நீதி என்றால் என்ன? இலக்கியம் அதைப்போன்ற ஓர் அக உருவகம். என் நோக்கில் வாழ்க்கையைக் கற்பனை மூலம் மறுநிகழ்வு செய்துகொள்வதற்குப் பெயர்தான் இலக்கியம். வாழ்க்கையனுபவங்கள், தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு உண்மையான வாழ்க்கையனுபவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44