Tag Archive: இலக்கிய வட்டம்

துதிபாடி வட்டம் தேவையா?

அன்புள்ள ஜெயமோகன், நலம்தானே? உங்கள் படைப்புகள் மீதும் கருத்துக்கள் மீதும் மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவன் நான். ஆனால் எனக்கு உங்களைச்சுற்றி உள்ள வட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எழுத்தாளனைச்சுற்றி இப்படி ஒரு வட்டம் எதற்காக? வேறு எழுத்தாளர்கள் இப்படி வட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்களா? உங்களைத் துதிபாடுவதில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை. ஆகவேதான் நான் இதை உங்களிடம் கேட்கிறேன்.இந்தத் துதிபாடல் உங்கள் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. அல்லது உங்கள் பலவீனத்தை உருவாக்குகிறது சிவகணேசன் பெருமாள் அன்புள்ள சிவகணேசன், முதல்கடிதம் எழுதுகிறீர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38730

துதிபாடிவட்டம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ அண்ணாவுக்கு, வீரா எழுதுவது. “துதிபாடி வட்டம் தேவையா ?“ என்ற கட்டுரை படித்தேன். ஒருவரின் கேள்வியைப் பயன்படுத்திக் கொண்டு மிக முக்கியமான ஒரு விஷயத்தை விளக்கியுள்ளீர்கள். படு தெளிவான விளக்கம். நேரெதிர் கருத்துக் கொண்டவர்கள் தத்தமது கருத்துக்கு நேர்மையாக இருப்பின் அவர்களும் நண்பர்களாக இருக்க முடியும் என்பதைச் சுட்டியிருக்கிறீர்கள். (உ.ம் :கேசரி வலதுசாரி, அவரிடமிருந்து வந்த அனைவருமே இடதுசாரிகள்.) அதற்கு எவ்வளவு மனநேர்த்தியும் அறிவுத்திறனும் தேவையென்பதை நினைக்கும் போது என் சிந்தனை மேலும் விரிவுகொள்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38832

இலக்கியவட்டம் நாராயணன்

மதிப்பிற்குரிய ஜெ.மோ. அவர்களுக்கு, வணக்கம். எனது வலைப்பூவில் அமரர். வெ.நாராயணன் அவர்களைப் பற்றிய ஒரு நினைவேந்தல் கட்டுரையை எழுதியுள்ளேன். அவருடன் பணியாற்றியவன், இலக்கிய வட்ட கூட்டங்களில் பங்கேற்றவன் என்ற முறையில் எனது அவதானிப்பைப் பதிவு செய்துள்ளேன். அதைத் தங்களது பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா. நன்றி. இப்படிக்கு, தங்களது வாசகன், தி.ஸ்ரீ. நாராயணன் ஒரு நினைவு நாராயணன்- கடிதம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/26319