Tag Archive: இலக்கிய பயன்

நவீன இலக்கியம், கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இந்த கடிதத்தை தனிப்பட்ட முறையில் எழுதுகிறேன். நீங்கள் ஒரு கல்லூரியில் ஆற்றிய உரையைக் வாசிக்க நேர்ந்தது. பெரும் ஏமாற்றம் அடைந்தேன். சுவாரசியமான உரை. ஆனால் ஒரு கல்லூரியில் சுவாரசியமான உரைகளுக்கு என்னவேலை? நீங்கள் இன்றைய சிந்தனைகளை அல்லவா அங்கே முன்வைத்திருக்க வேண்டும்? நீங்கள் அதற்கு தகுதியானவர். நாமிருவரும் கடந்த இரு வருடங்களாக பேசிவருவதில் இருந்து நான் அதை நன்கறிவேன். பின் நவீனத்துவம், நவசரித்திரவாதம், வாசகஎதிர்வினைக்கோட்பாடு உரைமாற்றாடல் விமர்சனம் என இன்று நவீன இலக்கிய சிந்தனைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8230

கேள்வி பதில் – 13

உங்கள் பார்வையில் இலக்கியம் என்பது என்ன? இலக்கிய வகை சார்ந்த எழுத்துகள் காலத்தின் சூழலுக்கேற்ப மாறக்கூடியது என்ற கருத்து சரியா??— ஷக்தி ப்ரபா. இலக்கியம் என்பது என்ன என்ற வரையறைகள் இலக்கியத்திறனாய்வில் பல்லாயிரம் உண்டு. எல்லாமே சரிதான். எல்லாமே முழுமையற்றவையும்கூட. அன்பு என்றால் என்ன? நீதி என்றால் என்ன? இலக்கியம் அதைப்போன்ற ஓர் அக உருவகம். என் நோக்கில் வாழ்க்கையைக் கற்பனை மூலம் மறுநிகழ்வு செய்துகொள்வதற்குப் பெயர்தான் இலக்கியம். வாழ்க்கையனுபவங்கள், தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு உண்மையான வாழ்க்கையனுபவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44

கேள்வி பதில் – 02

சமீபத்தில் விஷ்ணுபுரம் படித்தேன். என் மனதில் தோன்றிய எண்ணம்: படிப்பதற்கு நேரம் அரிதாய்க் கிடைக்கும் இந்தக் காலகட்டத்தில் இத்தனைச் சிக்கலான மொழிநடையில் நீங்கள் எழுதுவது ஏன்? படிப்பது என்பது பொழுதுபோக்கு, இதில் எழுத்துக்கும் வாசகனுக்கும் சுமுகம் இல்லாவிட்டால் படிப்பு சோர்வைத் தராதா? அல்லது இந்தச் சிக்கலான மொழி நடைதான் இலக்கியம் என்று சொல்லுகிறீர்களா? (திருக்குறள் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் எளிமைதானே!) — ராமசந்திரன் உஷா. உங்கள் கேள்வியில் உள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31