Tag Archive: இலக்கியத் திறனாய்வு

தமிழில் இலக்கிய விமர்சனம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழில் இன்று இலக்கியத் திறனாய்வு என்பது எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது? அது ஒரு தனிக் கலையாக இன்று நிற்கிறதாகக் கருதுகிறீர்களா? தீவிரமாகவும் ஆழமாகவும் செய்பவர்கள் யார்? யாருடைய திறனாய்வையாவது வாசிக்க சிபாரிசு செய்ய இயலுமா? ராம்குமார் சாத்தூரப்பன் அன்புள்ள ராம்குமார் தமிழில் தொன்மையான திறனாய்வு முறைமை ஒன்று இருந்துள்ளது. நூல்களை சபை நடுவே அரங்கேர்றம்செய்யும் முறை இருந்தது, அது ஒரு திறனாய்வுமேடையே. அந்தத் திறனாய்வுகள் பதிவாகவில்லை நம்முடைய உரைகளைத் திறனாய்வு முறைகளில் ஒன்றாகக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20586

கேள்வி பதில் – 48

தங்களைப் பாதிக்கும் அளவில் விமர்சித்த பத்திரிகைகளுக்கு உங்களால் எழுத இயலுமா? அல்லது நீங்கள் பேசிய கருத்துகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் உங்கள் reaction எப்படி இருக்கும்? — மதுமிதா. இலக்கியவாதி எப்போதுமே தன்னை மீறிச்செல்லும் உணர்ச்சிகளினால் ஆனவன். அதுதான் பெரும்பாலும் இலக்கிய உலகின் பூசல்களின் பின்னணி. ராஜதந்திரிகளின் சுயக்கட்டுப்பாடு அங்கே இயல்வதல்ல. என்னைத் தாக்கிய இதழ்கள், எழுத்தாளர்கள் தன்னளவில் எந்த அளவுக்கு முக்கியமானவர்கள் என்பதே எனக்கு முக்கியம். முக்கியமானவர்கள் என்றால் கோபம் அடுத்த ஒருவாரம்வரைதான், அதிகபட்சம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108

கேள்வி பதில் – 44

விமர்சகன், அவனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்பட்சத்தில் ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்கு சார்புநிலை வந்துவிடாதா? படித்த படைப்புகளோடு ஒப்பு நோக்கவேண்டிய வாசகப்பார்வை போய் எழுத்தாளன் எட்டிப்பார்த்து, தான் படைத்த படைப்புகளோடு, தன் படைப்புத் திறமையோடு ஒப்புநோக்கினால், அந்தப் படைப்புக்கான மதிப்பீட்டுக் கணக்கு தவறாதா? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். திறனாய்வாளன் யாராக இருந்தாலும் சார்புநிலை இருக்கும். சொல்லப்போனால் தன் சார்புநிலையையே அவன் வெளிப்படுத்துகிறான். அதுவே அவனது தனிப்பட்ட பார்வைக்கோணமாகும். முற்றிலும் புறவயமான ஓராய்வு அல்லது மதிப்பீடு இயல்வதேயில்லை. அப்படியானால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101