Tag Archive: இலக்கியத்திறனாய்வு

பெண்களின் எழுத்து…

அன்புள்ள ஜெ, பெண்களின் சாதனைகளை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள் என்று இங்கே பலபேர் சொல்கிறார்கள். பெண்கள் வெற்றிபெறுவதெல்லாம் பாலியல் அடையாளம் மூலம் பெறும் வெற்றி மட்டும் என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தவற்றை எந்த அளவுக்கு புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. தங்களை பெண்ணிய ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பெண்கள் எழுதவே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்றுகூட சிலர் எழுதியதை வாசித்தேன். நீங்கள் சொன்னதென்ன என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56437

சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்

என் அலுவலகத்தில் அ.முத்துலிங்கத்தின் இந்தக் கட்டுரைத்தொகுதியை மேஜைமேல் வைத்திருந்தேன். ஒரு சக ஊழியர் பார்த்துவிட்டு சும்மா மேஜைமேல் வைத்தே புரட்டிப்பார்த்தார். ஏதோ சினிமாபற்றிய கட்டுரை அவருக்கு ஆர்வமூட்ட அதை படித்துப் பார்த்தவர் அப்படியே படிக்க ஆரம்பித்துவிட்டார். ”சார் படிச்சுட்டு குடுத்திடறேனே” என்றார். எனக்கு பயம். நான் அதைப்பற்றி படித்துவிட்டு பேசவேண்டியிருக்கிறது. நண்பருக்கு எதையுமே படிக்கும் பழக்கம் கிடையாது. ஏற்கனவே ஒருமுறை இந்த நண்பர் என் மேஜைமேல் இருந்த ஒரு நூலை எடுத்துப் பார்த்துவிட்டு ”இது எப்டி சார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17207

தேவதேவனின் கவிதையுலகம்

தமிழ் கவிதையுலகில் தேவதேவனின் இடம் அனேகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று .முற்றிலும் ஆரவாரமற்ற, எப்போதும் விசித்திரமான தனிமை சூழ்ந்த, இந்த மனிதர் கடந்த 20 வருடங்களாக எழுதி வருகிறார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சகஜமாக பேசவோ, மற்றவர்களிடம் உரையாடவோ முடியாத ஒரு விசித்திரமானஅந்தரங்கத் தன்மை உடையவர் .குறிப்பாகச் சொல்லப்போனால் அவர் தன் கவிதைகளை சம்பந்தப்படுத்தாமல் எதையுமே பேசுவது இல்லை. இலக்கிய விஷயங்கள் மட்டுமல்ல,சாதாரண அன்றாட விஷயங்கள் கூட கவிதையுடன் தொடர்பு படுத்தப்பட்டே அவர் மனதில் எழும். இலக்கிய வம்புகள், கோபதாபங்கள், அரசியல் தரப்புகள், சித்தாந்த விவாதங்கள் ஆகியவற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2312

பி.கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’

பி.கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’ ரிக் வேத வரி ஒன்று உண்டு. ‘அன்னத்திலிருந்தே அன்னம் பிறக்கிறது.அன்னம் அன்னத்தை உண்கிறது.’ மண்ணில் உள்ள அனைத்தும் பிறிதை உண்டே வாழ்கின்றன. சமூக வளர்ச்சியின் சித்திரமும் அதுதான். சமூகத்தில் ‘வளர்சிதை மாற்றம் ‘ உண்டே ஒழிய மாற்றம் இல்லை. வென்று வாழ்ந்ததை அதன் அடியில் முளைத்தது வென்று உண்டு தான் வளர்வதும் வீழ்வதும்தான் சமூக அமைப்புகளின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது. சமூக அமைப்¨ப்பம் மாற்றங்களையும் புரிந்துகொள்வதில் மார்க்ஸியம் அதாவது முரணியக்க பொருள்முதல்வாதம் பெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/227

தமிழ்ச் சிறுகதை – திறனாய்வாளன் பட்டியல்

1 அ. மாதவையா 1 கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை] 2 சுப்ரமணிய பாரதி 1 ரயில்வே ஸ்தானம் 3 புதுமைப்பித்தன் [புதுமைப்பித்தன்கதைகள். காலச்சுவடு] 1 கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், 2 கயிற்றரவு 3 செல்லம்மாள் 4 சிற்பியின்நரகம் 5 கபாடபுரம் 6 ஒருநாள்கழிந்தது 7 அன்றிரவு 8 சாமியாரும் குழந்தையும் சீடையும் 9 காலனும் கிழவியும் 10 சாபவிமோசனம் 11 வேதாளம் சொன்ன கதை 12 பால்வண்ணம் பிள்ளை 4 மௌனி [மௌனியின் கதைகள் ] …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/214

பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’

குஜராத்தி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக, நவீன குஜராத்தி உரைநடையின் பிதாமகராக காந்தி கருதப்படுகிறார். பெரிதும் பக்திக்கே பயன்பட்டுவந்த நெகிழ்ச்சியான, இசைத்தன்மைகொண்ட , அலங்காரம் நிறைந்த உரைநடையை காந்தி அக்கால பிரிட்டிஷ் உரைநடையின் இடத்துக்குக் ஒரே தாவல் மூலம் கொண்டுவந்தார். கறாரான கூறுமுறை, கச்சிதமான சொற்றொடர்கள், உணர்ச்சிகள் வெளிப்படாத நேரடியான எளிய நடை ஆகியவை காந்திக்கே உரியவை. அது குஜராத்தி இலக்கியத்தை சட்டென்று அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்றது. உரைநடையில் வரும் மாற்றம் என்பது உண்மையில் கண்ணோட்டத்தில் வரும் மாற்றமேயாகும். அதுவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/195

விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’

‘பாதேர் பாஞ்சாலி’யின் [ வங்கத்தில் பொதேர் பஞ்சாலி .பாதையின் குரல்கள்] ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அது ஓர் அழகிய திரைப்படம்-அவ்வளவுதான், தீவிரமானதோ மகத்தானதோ அல்ல. அதன் காட்சிப்படிமங்களில் நம் ஆழ்மனத்துக்குள் செல்லும் மறைபிரதி இல்லை. எது காட்டப்படுகிறதோ அதுவே அப்படம். ஆனால் அப்படம் பலவகையிலும் முன்னோடியானது. மேற்கத்திய புது யதார்த்தபாணி திரைப்படங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/192

நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்

டி.கே.சி.யின் வட்டத்தொட்க் கூட்டங்களைப்போலவும் சுந்தர ராமசாமியின் காகங்கள் கூட்டங்களைப்போலவும் ஜெயமோகன் முன்னின்று நடத்திவரும் நித்யா கவிதை ஆய்வரங்கங்கள் தமிழ்ச்சூழலில் ஆரோக்கியமான விளைவுகளை உருவாக்கியிருக்கின்றன. முக்கியமாக, கவிதைகளை அணுகும் பார்வைகளை வளர்த்தெடுக்கிற முறையைச் சொல்லவேண்டும். ஒரு கவிதையை முன்வைத்து, ஆய்வரங்கில் பங்கேற்கும் கவிஞர்களும் வாசகர்களும் சுதந்தரமாக பகிர்ந்துகொள்ளும் அனுபவங்களைப் புதுசாக பார்க்கிற அல்லது கேட்கிற பார்வையாளன் கவிதையின் வலிமையையும் ஒரே கவிதையில் விரிவுகொள்ளும் புதுப்புது சாத்தியப்பாடுகளையும் எளிதில் உணரமுடியும். மூன்று நாள்கள் இத்தகு அனுபவங்களிடையேயே திளைத்துவிட்டுத் திரும்பியபிறகு பார்க்கிற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/447

அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )

(இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் ) (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -ஜெயமோகன். யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகம், 30 /2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை ௮6. விலை. ரூ65) ஏற்கனவே நாவல் இலக்கிய வகையைப்பற்றியும் நவீனத்துவத்தைப்பற்றியும் வாசகர்களின் புரிதல் விரிவடையும்பொருட்டு எளிய அறிமுக நூல்களை எழுதிய ஜெயமோகன் இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்களைப்பற்றிய அறிமுக நூலை இப்போது வழங்கியுள்ளார். விஷ்ணுபுரம் என்னும் தன் நாவலில் நிகழும் விவாதப்பகுதியில் இத்தரிசனங்களைப்பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/446

» Newer posts