Tag Archive: இலக்கியத்தரம்

கேள்வி பதில் – 58, 59

ஒரு படைப்பு உருவாக்கப்படும்போதே அது இலக்கியத் தரத்தின் எல்லையைத் தொடவேண்டும் என்ற எண்ணத்தோடு ஆக்கப்படுகிறதா, அல்லது மக்களைச் சென்றடைந்த பிறகு இலக்கியத் தரத்தை அடைகிறதா? — கேவிஆர். இலக்கியத்தரமான படைப்பு ஒருபோதும் இலக்கியத்தரமான படைப்பை உருவாக்கவேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்படுவதில்லை. உலகத்தில் ஏராளமான இலட்சியவாதிகள் உள்ளனர். அவர்கள் எவருமே இலட்சியவாதியாக வாழவேண்டும் என்பதற்காக அப்படி வாழ்பவர்களல்ல. அப்படி வாழ்பவர்கள் போலிகளக மட்டுமே ஆகமுடியும். அவர்களை ஆட்கொண்ட ஓர் இலட்சியம் அவர்களை அதை நோக்கியே வாழும்படிச் செய்வதனால்தான் இலட்சியவாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116

கேள்வி பதில் – 01

ஒரு எழுத்தாளரின் படைப்புகள் இலக்கியமா இல்லையா என்பதற்கு உங்கள் வரையறைகள் என்ன? — சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ். இலக்கியத்தரம் என்பது ஓர் அக உருவகம். ஆகவே அதைத் திட்டவட்டமாக, புறவயமாக, எப்போதைக்குமாக எவரும் வரையறை செய்துவிட இயலாது. ஆகவே இலக்கியத்தரம் என்ற ஒன்று இல்லை என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் நியாயம், நீதி, அறம், அன்பு போல பல நூறு அக உருவகங்கள் உண்டு. சமூகம் அவற்றின் அடிப்படையிலேயே கட்டப்பட்டுள்ளது. ஒரு நாளில் எத்தனையோ முறை இச்சொற்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30