Tag Archive: இலக்கியக் கலைச்சொற்கள்

மொழி 6,கலைச்சொற்கள் பற்றி…

ஜெ, தொன்மம், படிமம், விழுமியம் ஆகிய சொற்கள் தொடர்ந்து உங்கள் கட்டுரைகளில் இடம்பெறுகின்றன. இவற்றின் பொருளென்ன என்று புதிய வாசிப்பாளர்கள் தெரியாமலும் தொடர்ந்து வாசிப்பவர்கள் கூட தங்களுக்கென ஒரு புரிதலோடு உள்ளார்கள் என நினைக்கிறேன். இக்கலைச்சொற்களை ஓரிடத்தில் தொகுக்க வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் விக்கிபீடியா சரியான இடமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அங்கு விவாதித்து எழுதுபவர்கள் அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கங்களை போடலாம். மேலும் தேடு பொறிகள் அவற்றை முதலில் சுட்டும். கூகுளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8691

விக்கி,விவாதங்கள்

ஜெமோ தமிழில் பேசுவதும் எழுதுவதும் கட்டாயம் தேவை. தமிழில் எழுதுவது விட்டுப் போய் விடக்கூடாது என்ற காரணத்தினாலே தமிழில் எழுத முனைகிறேன் நான். ஆனால் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் போக ஆர்வமே இல்லாததற்குக் காரணம் இந்த தனித்தமிழ் இயக்கம்தான். பொதுவாக தமிழல்லாத பெயர்களை எழுதும் பொழுது அவை உச்சரிக்கும்படி எழுதுவதில்தான் எனக்கு உடன்பாடு. ஜான் என எழுத வேண்டியதை சாண் என எழுதினால் அர்த்தம் மாறாதோ. இன்னும் ஒரு இடத்தில் ஜிகே.வாசன் அவர்கள் பெயரைத் தமிழில் எழுதுகிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4321

இலக்கியக் கலைச்சொற்கள்

அக ஒளி Enlightenment படைப்பில் உருவாகும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட முழுமைநோக்கு அகவயம் : Subjective ஒருவரின் அகம் சார்ந்தது, தனிப்பட்ட முறையிலானது. அந்தரங்கமானது அகமொழி Langue பண்பாட்டின் உள்ளுறையாக உள்ள மொழிக்கட்டுமானம். புறமொழிக்கு கொடுக்கச் சாத்தியமான அர்த்தங்களினால் ஆனது அது. அதுவே கேட்கும்மொழிக்கு அர்த்தம் அளிக்கிறது. அங்கதம் :Satire கேலிப்படைப்பு அடித்தளம்: Base மார்க்ஸிய நோக்கில் சமூகத்தின் பொருளியல் அமைப்பு. உற்பத்தி வினியோகம் இரண்டும் அடங்கியது அடுக்கதிகாரம்: Hierarchy அதிகாரம் ஒன்றுக்குமேல் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பு அணியியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/182