Tag Archive: இறுதி யந்திரம்

வலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை

மிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting நாவலில் ஒரு நிகழ்ச்சி. 1948ல் சோவியத் படைகள் செக்கோஸ்லாவாகியாவுக்குள் ஆக்ரமித்துக்கடந்து அந்நாட்டைக்கைப்பற்றி ஆட்சியமைக்கின்றன. செக் நாடு ருஷ்ய ஆதிக்க கம்யூனிச நாடாக அறிவிக்கப்படுகிறது. ருஷ்ய கம்யூனிஸ்டுத் தலைவரான க்ளெமெண்ட் கோட்வால்ட். பிராக் நகரின் பரோக் பாலஸ் என்ற மாளிகையின் பால்கனிக்கு வந்து தன்முன் கூடியிருந்த பல்லாயிரம் மக்களைநோக்கி ஆவேசமான உரையொன்றை நிகழ்த்தினார். அவருக்கு அருகே அவரது தோழரான விளாடிமிர் க்ளெமென்டிஸ் நின்றிருந்தார். பனிபெய்துகொண்டிருந்தது. கோட்வால்டின் தலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43411

இறுதி யந்திரம் (சிறுகதை)

எட்டு இருபது முதல் ஒரு மணி நேரத்தை அவருக்காக அதிபர் ஒதுக்கியிருந்தார். விருந்தினர் அறையில் அந்த ஒல்லியான பரட்டைத் தலை மனிதர் தன் கருவியுடன் காத்திருந்தார். முன்பக்கம் கண்ணாடி  விழி ஒன்றும் சில பித்தான்களும் கொண்ட சதுரமான எந்திரம் அது. விருந்தினர் அறை மிகவும் குளிராக இருந்தது. எந்தவிதமான உடையணிந்தாலும் அந்தக் குளிர் எலும்புகளைத் துளைத்தேறும் என்று பட்டது. பரட்டை மனிதர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. கடிகார முள் மிக மெதுவாக நகர்ந்தது. அவர் தன்உபகரணத்தை இன்னுமொருமுறை சரிபார்த்துக்கொண்டார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12852