Tag Archive: இருத்தலியல்

வெண்முரசும் நவீனத்துவமும்

வெண்முரசு நாவலை ஒட்டி உள்ளே வரும் புதியவாசகர்களில் ஒருசாரார் இந்நாவலின் புனைவைப்பற்றிய குழப்பங்களை எழுதியிருக்கிறார்கள். அதாவது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதும் புனைகதைகளைத்தான் அவர்கள் வாசித்திருக்கிறார்கள். இந்த நாவல் புராணம்போல இருக்கிறது, இப்படி எழுதுவது நவீன இலக்கியமாகுமா என்று சிலர் கேட்டிருந்தனர். வாசிப்பின் ருசி, படைப்புகள் சார்ந்த எதிர்பார்ப்பு, அல்லது படைப்புகள் சார்ந்து இருக்கும் பொது மனஉருவகம் என்பது இயல்பானதோ தன்னிச்சையானதோ அல்ல. அது எப்போதும் கட்டமைக்கப்படும் ஒன்று. அதன்பின்னால் தத்துவம், அரசியல் போன்றவை உள்ளன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45840

என்பிலதனை வெயில்காயும்

நாஞ்சில்நாடனின் என்பிலதனை வெயில்காயும் பற்றி ஆர்வி எழுதியிருக்கிறார். அதை ஒருவகை தன்வரலாற்றுநாவல் என அவர் ஊகிக்கிறார். அது தன்வரலாற்றுக்கதை அல்ல. நாஞ்சில்நாடனின் நண்பனின் கதை. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அவரது வரலாறு உண்டு – அந்த வில்வண்டிக்கார மாணவி கதை. அதை அவரது பலகதைகளில் பலவகைகளில் காணலாம். அவளுக்கு முன்னால் தேங்காய் திருடியமைக்காக அடிபடும் கதை ஓர் உதாரணம். அதைவைத்து ஆர்வி அப்படி நினைத்திருக்கலாம். இந்நாவலில் உறவுகளைக் கசந்து கதாநாயகன் வெளியேறும் முடிவுதான் இருந்தது. அதுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31269