Tag Archive: இரவு

காதலைக் கடத்தல்

  அன்புள்ள ஜெயன் அவர்களுக்கு, நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே? எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது. நான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் ‘இரவு’ நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த ‘காடு’, ‘அனல்காற்று’ நாவலிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21281/

என்னை வாசிக்கத் தொடங்குதல்

  அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80644/

இரவு – ஒரு வாசிப்பு

இரவு – ஜெயமோகன் இந்த நாவலை நான் ஃபேஸ்புக்கில் தமிழில் எழுதத் தெரியாதிருந்த காலத்திலேயே படித்து விட்டதால், இதைப்பற்றி அப்போது எழுத முடியாமலேயே போய்விட்டது. இது விமர்சனமல்ல, வாசிக்காதவர்களுக்கு அறிமுகப்படுத்தும் சிறு முயற்சி ! பாபநாசம் வெற்றிக்குப் பின் ஜெயமோகன் தலைக் கொம்பின் நீளம் சில செண்டி மீட்டர்கள் கூடிவிட்டிருக்கும் என்றாலும் இந்த இரவு நாவலுக்காக அவர் புகழ் பாடுவதில் தவறில்லை என்பது என் எண்ணம். இந் நாவலை எப்படி இன்னும் படமாக்காமல் விட்டிருக்கிறார் எனப் புரியவேயில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77001/

இரவு- செந்தில்குமார்

தான்நம்பும் தத்துவம் உடைபடும்போது ஒன்று மனிதர்கள் விஜய்மேனனை போல் தப்பிசெல்கிறார்கள். அல்லது முகர்ஜி போல் பேதலிக்கிறார்கள். சரவணனை போல் வெகுசிலரே இறுதிவரை சென்று பார்க்கத்துணிகிறார்கள். கொல்லப்படும் யானைப்பாகனின் மகனும், பாகனாகிறான். இரவு பற்றி செந்தில்குமார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/73578/

சூழ்ச்சிமிகு பெரும்பொழுது

நான் இரவை அதிகமாய் நேசிப்பவன். எல்லோரும் உறங்கிய பின் சுருங்கிப் போன வெளிச்சத்தில் தனிமை உணர்ந்து கொண்டே வாசித்தலும் பயணங்களும் எழுதுவதும் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மனநிலையில் ஜெயமோகனின் இரவு எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இரவு பற்றி ஒரு மதிப்புரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/54920/

இரவும் இருளும்

வணக்கம். நலமாயிருக்கிறீர்கள் என்றே உணர்கிறேன். மலேசியப் பயணம் அதை உணர்த்தியது. இரவு நாவல் இப்பொழுதுதான் முடித்தேன். யட்சினி என்ற தலைப்பும் பொருந்தும் என்று தோன்றியது.இரவில் விழித்திருப்பவர்கள் என்ற காரெக்டர்களே புதிதாய்த் தோன்றி விடாமல் படிக்க வைத்து விட்டது. இருட்டில் நடக்கும் எல்லாமும் தவறுகளாய்த்தான் இருக்கும் என்று மகாத்மா சொல்லிப் படித்ததாக நினைவு. கடைசி இரண்டு அத்தியாயங்களில் மனசு அதிர்ந்து போனது. மேனன் கமலாவோடு வாழ்ந்த நாட்களை சிலிர்ப்போடு நினைவு கூறுவதும், அது நானில்லை வேறு என்று கனவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48524/

இரவும் முறையீடும்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். சில மாதங்களுக்கு முன், தற்செயலாக தங்கள் இணையத்தில் நுழைந்தேன். புதையல் கிடைத்த மாதிரி ஆனது. தினமும் வாசிக்க வாசிக்கத் திகட்டாத தமிழ் அமிழ்தம்! நன்றி. என்னைப்பற்றி.. நான் குடும்பத்துடன் 1990ல், ஆஸ்திறேலியாவிற்குக் குடி பெயர்ந்து விட்டேன். தங்களின் எத்தனையோ இடுகைகளைப் பலமுறை படித்து ரசித்துள்ளேன். இன்று உங்களுக்கு எழுத முனைந்துள்ளேன். அதற்குக் காரணம் முறையீடு என்ற இடுகைதான். தங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இடப்பட்ட இடுகையாகத் தெரிகிறது. நானும் உங்கள் கூட இருந்து அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47631/

இரவின் பொருள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இக்கடிதத்தை என்னை எழுத தூண்டியது உங்களின் ‘இரவு’ நாவல். நான் வாசிக்கும் உங்களுடைய முதல் நாவல். மிக வித்தியாசமான கதைக்களனை கொண்டது. இந்நாவலை படித்துமுடித்ததும் என்னுள் எழுந்த சில கேள்விகள். 1. படித்து முடித்தபிறகு மனசஞ்சலமும், பயமும் ஏற்படுவது ஏன்? 2. நாயகன் ஒவ்வொரு முறை இரவு வாழ்க்கையை விட்டுவிட நினைக்கும்போது சந்தோசமும், திரும்பவும் அதிலேயே உழலும்போது வெறுப்பும் ஆட்கொள்வதேன்? 3. உண்மையிலேயே இரவு அத்தகைய வசீகரம் உடையதா? (பரீட்சித்துப் பார்க்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46633/

இரவும் கவிதையும்

அன்பின் ஜெயமோகன் தங்களின் இரவு நாவல் வாசித்தேன். ஒரு புதுவித வாசிப்பனுபவம் அது.எங்களது பெரும்பாலான இரவுகள் பயமும் பயங்கரமும் நிறைந்ததாக அமைந்தது. இருந்தாலும் தங்கள் நாவலை படித்த பிறகு என்அழகான இரவுகளை நான் வீணாக்கிவிட்டதாக உணர்கிறேன். இப்போது பகலை ரசிக்க முடிவதில்லை அந்நாவலில் இழையொடுகிற மென்மையான காதல் நீலு பற்றிய வர்ணனைகள் மனதை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது. நான் கவிதை எழுதுவேன் இப்போது எழுத முடியவில்லை உங்கள் நாவல் முழுவதும் ஓர் அழகான கவிதை நீங்கள் சொல்லாத ஒன்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44683/

இரவு -கடிதம்

வணக்கத்திற்குரிய ஜெ அவர்களுக்கு, தங்களின் “இரவு” என்னை மிகவும் அசர வைத்து விட்டது. இரவில் விழித்திருக்கும் ஒரு மாபெரும் சமூகத்தின் அறிமுகம் ஆச்சரியப்படுத்தியது. இங்கே ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இரவு வாழ்க்கையை தேடி வருகின்றனர். அதன் தீவிரத்தை உணராமலேயே, தானறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு இதுதான் அதன் முழுமை என அறைகூவல் விடுக்கின்றனர், உதயபானு, முகர்ஜி போல். ஆனால் எல்லாவற்றிலும் சித்தாந்தம், தருக்கம் என பேசி வாயடைத்த மேனன், கமலம், பிரசண்டானந்தா உட்பட பலர் அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41500/

Older posts «