Tag Archive: இயல் விருது

விருதுகள்

சாகித்ய அக்காதமி விருது ‘ விஷ்ணுபுரம் வெளிவந்தது 1997ல். அப்போது எனக்கு முப்பத்தைந்து வயதுதான். அன்றெல்லாம் வயோதிகர்கள்தான் சாகித்ய அக்காதமி விருது பெறுவார்கள். ஆனாலும் ஒவ்வொருமுறை சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்படும்போதும் என்னைக்குறிப்பிட்டு ஒரு கெக்கலிப்பு கிளம்பிவரும். ‘இந்தமுறையும் ஏமாந்தான்யா’ என்றவகையில். சாகித்ய அக்காதமி விருதுகளை நான் விமர்சித்தேன் என்றால் ‘கெடைக்கலைன்னு புழுங்குகிறான்’ என்பார்கள். பாராட்டினால் ‘சமாளிச்சான்யா’ என்பார்கள்.; நான் சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளுக்காக தவம் கிடந்து ஏங்கி ஏமாந்துகொண்டிருப்பதாக எழுதும் அவர்களைக் கூர்ந்து கவனித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68541

இயல் விருது எனக்கு…

2014 ஆம் வருடத்திற்கான இயல் விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு கனடா பயணம்.ஜூன் மாதம். மனதுக்கு உகந்த நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு. இம்முறை லண்டன் வழியாகச் செல்லலாம் என நினைக்கிறேன். அருண்மொழியுடன். இயல்விருது அமைப்பினருக்கு நன்றி

Permanent link to this article: https://www.jeyamohan.in/68423

டொமினிக் ஜீவாவுக்கு இயல்

கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பின் ‘இயல்’ விருது தமிழின் முதன்மைச்சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது, 2013 ஆம் வருடத்திற்கான சிறப்பு இயல்விருது இலங்கையின் மூத்த படைப்பாளியும் சிற்றிதழாளருமான டொமினிக் ஜீவாவுக்கு வழங்கப்படுகிறது இதுவரை இவ்விருதுகள் சுந்தரராமசாமி,வெங்கட்சாமிநாதன், கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.ராமகிருஷ்ணன், அம்பை, நாஞ்சில்நாடன், தியோடர் பாஸ்கரன் ஆகிய தமிழ்ப்படைப்பாளிகளுக்கும் கனகரட்னா, பத்மநாபாய்யர்,தாஸீயஸ், கெ.கணேஷ், எஸ்.பொன்னுத்துரை போன்ற ஈழப்படைப்பாளிகளுக்கும் லக்‌ஷ்மி ஆம்ஸ்ட்ரம், ஜார்ஜ் எல் ஹார்ட் போன்ற மேலைநாட்டினருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. கனடா தமிழ் இலக்கியத்தோட்டமும் டொரொண்டோ பல்கலைக்கழகமும் இணைந்து இவ்விருதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58024

தியோடர் பாஸ்கரனுக்கு விருது

கனடாவின் இயல் விருது தியோடர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சூழியல் எழுத்து என்னும் இலக்கிய வகையை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர் என்று தியோடர் பாஸ்கரன் அவர்களைச் சொல்லமுடியும். இவ்விருது தமிழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதையும்கூட வாழ்த்துக்கள் தியோடர் பாஸ்கரனுக்கு இயல் தியோடர் பாஸ்கரன் மின்னஞ்சல் [email protected]

Permanent link to this article: https://www.jeyamohan.in/57341

தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2013 க்காக சூழியல் எழுத்தாளரும் சினிமா வரலாற்றாசிரியருமான தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவர் இதற்கு முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இடம் இருவகையில் முன்னோடித் தகுதி கொண்டது. தமிழ் திரைப்படத்தை வெறுமே அரட்டைத் தகவல்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44649

நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33061

கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இலக்கியவிருதுகள் சென்ற ஜூன் 16 அன்று வழங்கப்பட்டன. எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது பெற்றார். இலக்கியத்தோட்டம் விருதுகளும் அன்று வழங்கப்பட்டன விருதுகள் 1. இயல் விருது – எஸ்.ராமகிருஷ்ணன் 2. புனைவு – யுவன் சந்திரசேகர் – நாவல் – ’பயணக் கதை’ 3. அபுனைவு – பெருமாள்முருகன் – ‘கெட்டவார்த்தை பேசுவோம்’ 4. கவிதை – தேவதச்சன் – ’இரண்டு சூரியன்’ 5. கவிதை –அனார் – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28277

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது

2011 ம் ஆண்டுக்கான கனடாவின் இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனைக்கான இலக்கிய விருது இது. கனடா இலக்கியத்தோட்டமும் யார்க் பல்கலையும் இணைந்து வழங்கும் இவ்விருது இவ்வருடம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதிப்புமிக்க விருது இது. தமிழ் நாவல், சிறுகதைத் தளத்திலும், நாடகங்களிலும் தீவிரமான பங்களிப்பாற்றிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ்.ராமகிருஷ்ணன். நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதிலும், ஒரு இயக்கமாக அதை நிலைநிறுத்துவதிலும் தொடர்ச்சியான ஈடுபாட்டைக் காட்டிவருபவர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24052

எஸ்.பொ

2004 டிசம்பரில் இந்தியாவை சுனாமி தாக்கி பேரழிவை உருவாக்கியது. அப்போது நான் நாகர்கோயிலில் இருந்தேன். தன் பிறந்தநாளை ஒட்டி சுந்தர ராமசாமி அவரது நண்பர்களை பார்க்கவிரும்பியதனால் முந்தைய நாள் அவரது வீட்டில் ஒர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  அவரது வீட்டுக்கு வந்த சில நண்பர்களும் என்னுடன் இருந்தார்கள். நானும் நாஞ்சில்நாடனும் அந்நண்பர்களுமாக சுசீந்திரம் தேர்த்திருவிழா பார்க்க சென்றிருந்தோம். அப்போது ஒருநண்பர் சொன்னார், சென்னையில் மிகப்பெரிய கடல் அலை ஒன்று அடித்திருக்கிறது என்று. இந்தியக்கடற்கரை முழுக்க மேலும் அதேபோன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16853

ஞானிக்கு இயல் விருது…

2009 ஆம் வருடத்துக்கான கனடாவின் ‘இயல்’ விருது கோவை ஞானிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்றுவரை குறிப்பிடத்தக்க இலக்கிய விருதுகள் எதையும் பெறாத ஞானியை கௌரவப்படுத்தியிருப்பதன் மூலம் இயல் தன்னையும் கௌரவப்படுத்தியிருக்கிறது. அதன் கடந்த கால பிழைகளில் இருந்து அது வெளிவர இது ஒரு வாய்ப்பாக அமையட்டும். ஞானிக்கு என் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.   கி.பழனிச்சாமி என்ற ஞானி ஒரு தமிழாசிரியர். எழுபதுகளில் திரண்டெழுந்த தீவிர இடதுசாரி அமைப்புகளில் இருந்து உருவாகி வந்தவர். புரட்சிகர மார்க்ஸிய சிந்தனையாளரான எஸ்.என்.நாகராஜனுடன் இணைந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6123

Older posts «