Tag Archive: இயல்விருது

ஒவ்வொருநாளும் விருது

அனைவருக்கும் வணக்கம், ஒருநாள் நானும் என் இனியநண்பரும் என் எல்லா பயணங்களிலும் துணையிருப்பவருமான கிருஷ்ணனுடன் பேசிக்கொண்டிருந்தேன்.நாங்கள் லடாகில் கார்துங் லா கணவாயில் நடுக்கும் குளிரில் இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் ஒரு டீக்கடையில் அமர்ந்து கையில் கஷ்மீரி ஹவாவும் மோமோவும் ஏந்திக்கொண்டு எதிரே கண்கூச ஒளிவிட்டுக்கொண்டிருந்த பனிமலையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். கிருஷ்ணன் சொன்னார் “இப்டி எங்கெல்லாம் உக்காந்திருக்கோம். சின்னச்சின்னக் கிராமங்களிலே உள்ள டீக்கடைகளிலே. வரலாற்றுச்சின்னங்கள் மேலே. காட்டுக்குள்ள. மலையுச்சிகளிலே… எங்கேன்னே தெரியாத இடங்களிலே.. நினைச்சுப்பாக்கவே பிரமிப்பா இருக்கு!” நான் அப்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75036

இயல்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தினமும் தங்கள் இணைய தளத்தில் பதிவுகளைப் படித்துவிட்டே வேலையைத் துவங்கும் எனக்கு, தாங்கள் “இயல்” விருது பெற்றமைக்கான வாழ்த்துக் கடிதத்தை இவ்வளவு தாமதமாக எழுதுவது வெட்கமளிக்கிறது. விடுமுறை தினமான இன்று கூட இதை எழுதாவிட்டால், மேலும் தாமதமாகிவிடுமோ என்ற பயத்தால் அவசரமாக எழுதுகிறேன். உண்மையில், விருதுகளையெல்லாம் தாண்டி நிற்கும் உங்களுக்கு இந்த விருதால் கிடைக்கக் கூடியது ஏதுமில்லை. இருப்பினும் , இயல் விருது தன்னைத்தானே கௌரவித்துக் கொண்டுள்ளது என்று சம்பிரதாயமாகச் சொன்னாலும், என்னைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71330

அஞ்சலி: செல்வ கனகநாயகம்

டொரொண்டோ பல்கலை கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியரான செல்வ கனநாயகம் 23- 11-2014 அன்று மாண்ட்ரியலில் காலமானார். டொரொண்டோவில் இருந்து உஷா மதிவாணன் கூப்பிட்டு செய்தியைச் சொன்னபோது எப்போதும் மரணச்செய்திகள் உருவாக்கும் மரத்த தன்மையையே அடைந்தது மனம். அப்படியா அப்படியா என்று மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன் 2000த்தில் நான் முதல்முறையாக கனடா சென்றபோது செல்வ கனநாயகத்தைச் சந்தித்தேன். அ.முத்துலிங்கத்தின் நண்பராக. டிம் ஹார்ட்டன் காபி நிலையத்தில் நிகழ்ந்த நீண்ட இலக்கியச் சந்திப்புகளில் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் நடந்த பொதுச்சந்திப்புகளில் பல கேள்விகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66351

பசி வீற்றிருக்கும் நடுமுற்றம்

[1 ] இலக்கியத்தில் உலகியல்விவேகத்தின் இடமென்ன? நான் இரு பெரும்படைப்பாளிகளை வாசிக்கையில் எல்லாம் அதைப்பற்றி நினைத்துக்கொள்வதுண்டு. தல்ஸ்தோய், ஐசக் பாஷவிஸ் சிங்கர். ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ‘காஃப்காவின் நண்பர்’ என்ற கதையை ஒருநாள் இரவில் நான் வாசித்தேன். அன்று உடல் திறந்து என்னுள் இருந்து இன்னொன்று வெளிவரும் அனுபவம் போல அந்த தரிசனத்தை அடைந்தேன். பல ஆண்டுகளுக்குப்பின் நித்யசைதன்ய யதியைக் காண ஒரு குடும்பம் வந்திருந்தது. எண்பதுவயதான ஒருபாட்டியும் வந்திருந்தார். குடும்பம் நித்யாவின் காலில் விழுந்து வணங்கியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36322