Tag Archive: இயலிசை வல்லபி

ஒரு தனிப்பட்ட விண்ணப்பம்

வானவன் மாதேவி இயலிசை வல்லபி சகோதரிகளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். என் வாசகர்களுக்கு பரவலாக அறிமுகமான பெயர். மரபணுச்சிக்கலால் விளைந்த குணப்படுத்த முடியாத தசைச்சுருக்க நோயால் [ Muscular Dystrophy] பாதிக்கப்பட்டவர்கள் இருவரும். கடுமையான வலியுடன் போராடி விரைவாக முற்றிவரும் நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஆனால் ஒருபோதும் தளராத ஊக்கமும் தணியாத வாசிப்பார்வமும் கொண்டவர்கள். அவர்களுக்கிணையான வாசகர்களை நான் குறைவாகவே கண்டிருக்கிறேன். தங்கள்நோயையும் வலியையும் சகமனிதர்களுக்குச் சேவைசெய்வதற்கான முகாந்திரமாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற சில வருடங்களாக அவர்கள் தனிச்சிறப்புக் கவனத்தைக் கோரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63344

ஆதவ் அறக்கட்டளை- இரு கட்டுரைகள்

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/946852_505503502838427_1211727314_n.jpg” alt=”” /> என் பிரியத்திற்குரிய இயலிசை வல்லபியும் வானவன்மாதேவியும் நடத்தும் ஆதவ் அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்த இரு நண்பர்கள் எழுதிய கட்டுரைகளை வாசித்தேன். இலட்சியவாதம் என்பதைப்போல கவர்ச்சியானது பிறிதொன்றில்லை என்ற எண்ணம் மீண்டும் உறுதியாகியது. எந்தப்புள்ளியில் மானுடம் அதை உருவாக்கிக் கொண்டிருக்கும்! அந்தக்கணம் முதல் ஆரம்பமானதையே நாம் மானுட நாகரீகம் என்கிறோம் ஜெ ஒளிவிடு ஒளியேற்று சுநீல்கிருஷ்ணன் வானவன் மாதேவி என்னும் வாமன அவதாரம்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/38244