Tag Archive: இயற்கை

புன்னகைக்கும் பெருவெளி

”இந்திய எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகப்பிடித்தமானவர் யார்?’ என்றார் ஓர் இலக்கிய நணபர். இம்மாதிரி வினாக்களுக்கு எளிதில் பதில்சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கியமேதையும் நம்மை ஒருவகையில் கவர்ந்தவர். நான் யோசித்தேன். தாரா சங்கர் பானர்ஜியா, மாணிக் பந்த்யோபாத்யாயவா? சிவராம காரந்தா ?எஸ்.எல்.·பைரப்பாவா? தி.ஜானகிராமனா? ஜெயகாந்தனா? சற்று நேரம் கழித்து ”வைக்கம் முகமது பஷீர்தான்”என்றேன். ”ஏன்?” என்றார் நண்பர். ”மற்ற இலக்கியமேதைகளின் உலகில் மனிதர்கள் மட்டுமே உண்டு. பஷீரின் உலகில்தான் மிருகங்களும் பறவைகளும் இருக்கிறார்கள்” என்றேன் ”உலக இலக்கியத்தில் உங்களுக்குப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7820/

காஞ்சிரம்

காடு நாவலில் வரும் ஒரு மரத்தைப்பற்றி பலர் எனக்கு கடிதம் எழுதிகேட்டிருந்தார்கள். காஞ்சிரம். அப்போது நான் அறிந்த ஒரு விஷயம் தமிழ்நாட்டில்மக்கள் பெரும்பாலும் நெருக்கமான தெருக்கள் அமைந்த ஊர்களிலேயே வசிக்கிறார்கள்.ஊரிலும் சுற்றி இருக்கும் பொட்டலில் சிலவகை மரங்களே உள்ளன. ஆகவேபெரும்பாலானவர்களுக்கு நிறைய வகையான மரங்களையும் செடிகளையும் தெரிவதேயில்லை.என்னுடையது போல மலையடிவாரக் கிராமத்தில் தோட்டம் சூழ்ந்த ஊரில் வாழ்வது இயற்கையைஅறிவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பு. காடு நாவலில் காஞ்சிர மரம் ஒரு யட்சிக்கதையின் பகுதியாக வருகிறது. காட்டில் ஒருமாபெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1885/

பறக்கும் புல்லாங்குழல்

ஞாயிற்றுக்கிழமை காலையில் எழும்போது மிகவும் தாமதமாகும். முந்தின இரவில் நாளை விடுமுறைதானே என்று எண்ணி கிடத்தட்ட விடியும்வரை விழித்திருப்பேன். இரவு விழித்திருக்க நேர்வதென்பது எப்படியோ வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வது என்றே பொருள்படுகிறது. முட்டாள்கள்தான் இரவு தூங்குவார்கள் என்பது மறைந்த எழுத்தாளர் கரிச்சான்குஞ்சுவின் பொன்மொழி. இதற்குக்காரணம் நம் ஊரில் மதியம் என்பது கடும் வெப்பம் காரணமாக சுறுசுறுப்பாக வேலைபார்க்க முடியாத ஒன்றாக இருப்பதே. குளிர்ச்சாதன வீடுள்ளவர்களுக்கு இதில் விதிவிலக்கு. ஆகவே ஞாயிறு மதியம் விரிவான ஒரு தூக்கம். மாலை நாலரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2204/

பறவைச்சரணாலயங்கள்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். நான் பூபாலன்.ஏற்கனவே சில கடிதங்கள் தவிர கணிணி,செல்லிடப்பேசி குறுந்திரை என தினமும் தொடர்ந்து உங்களுடன் உரையாடி க்கொண்டிருப்பவன்.பிறந்து வளர்ந்தது,சித்திரங்குடி,முதுகுளத்தூர் வட்டம்,இராமநாதபுரம் மாவட்டம்.தற்போது பிழைப்பிற்காய் சென்னையில்.எங்கள் ஊர் சித்திரங்குடி இந்தியாவின் மிகத்தொன்மையான வலசைப் பறவைகளின் வாழிடம்.(http://www.forests.tn.nic.in/WildBiodiversity/bs_cbs.html).சில நூற்றாண்டுகளாகவே பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டுப்பறவைகள் வந்து தங்கி தலைமுறைகளை உற்பத்தி செய்து செல்லும் தொன்மையான பறவைகள் சரணாலயம்.தொண்ணுறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அப்பத்தா, தான் இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வரும்போதே பல மாமாங்களாக இங்கு பறவைகள் வந்து போவதாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36050/

ஏன் நாம் அறிவதில்லை?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 2011 ஆம் வருடம் இயற்பியலுக்காக நோபெல் பரிசு சால் பெர்ல்முட்டேர்,ப்ரைன் மற்றும் ஆடம்ஸ் கிடைத்திருகிறது. அவர்கள் ” Discovery of theaccelerating expansion of the universe through observation of distantsupernovae ” என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று சேர்ந்தகருத்து இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதுவும்accelerating mode phase . அவர்கள் இதைத் தொடங்கியது பிரபஞ்சம் விரிவடைதல்decelarting phase என்று நிரூபிப்பதற்காக. அப்படியே 180 degree turn …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29193/

பசுமை- ஒரு கடிதம்

அன்பு ஜெயமோகன்! பசுமை வணக்கம்.தங்களைப் பற்றி நான் முதன் முதலில் கேள்விப்பட்டது 15 ஆண்டுகளுக்கு முன்பு. அரைக்கால் சட்டையில் இருந்து, முழுக்கால் சட்டைக்கு மாறிய தருணம் அது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் எனது ஊர். அங்குள்ள கிளை நூலகம் வழியாகத்தான் அறிவுலகில் நுழைந்தேன். அதன் பிறகு காலம் என்னைக் கைப்பிடித்துப் பத்திரிகைத் துறைக்கு அழைத்து வந்தது. ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பசுமை விகடன்’ இதழில் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17089/

யானைடாக்டர்-படங்கள்

யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் அழகிய புகைப்படங்கள் இரண்டு கிடைத்தன. யானைடாக்டர் என்ற பேரில் இந்தக்கதை மட்டும் சிறிய நூலாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நண்பர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இலவசமாக இது தகுதியான வாசகர்களுக்கு வழங்கப்படும். புத்தகம் அச்சாகும் முன் கிடைத்திருந்தால் இந்தப்படங்களை அதில் சேர்த்திருக்கலாம் மேலும் சில நண்பர்கள் இந்த கதையை தங்கள் அமைப்புகளுக்காகச் சிறு நூலாக வெளியிடலாமா என்று கேட்டு எழுதியிருந்தார்கள். அதைச் சேர்ந்து செய்வது நல்லது யானைடாக்டர் கெ அவர்களைப்பற்றி பிபிசி எடுத்த ஆவணப்படம் எவரிடமாவது இருந்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17056/

குப்பை- கடிதங்கள்

ஜெ, இந்த இணைப்பில் உள்ள நிகழ்ச்சியை 2 வருடங்களுக்கு முன்பு பார்த்த பிறகு அனாவசிய எலெக்ட்ரானிக்ஸ் குப்பைகைளை வாங்குவதைக் குறைத்துக்கொண்டேன். http://www.cbsnews.com/video/watch/?id=4586903n&tag=mncol;txt — Rajesh அன்புள்ள ஜெ, “நான் அமெரிக்கா கனடா நாடுகளில் பயணம்செய்யும்போது அங்கே  காகிதம் பிளாஸ்டிக் போன்றவை மிதமிஞ்சிப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துக் குப்பையில் போடும்படி அறிவுறுத்துகிறார்கள். மக்களும் செய்கிறார்கள். அவை 95 சதம் மறுசுழற்சி செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சொல்லப்பட்டு அவர்கள் நம்புகிறார்கள். அதைப் பலரும் சொன்னார்கள். ஆனால் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16328/

பீர் புட்டியும் கம்ப்யூட்டரும்-கடிதம்

//IT கம்பெனி ஊழியர்கள் குடித்து விட்டு பாட்டில்உடைத்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் மேனேஜர் முதல் அனைவரும் அதை ரசித்து ஆரவாரம் செய்து புகைப்படங்கள்எடுத்தனர்.அவர்கள் FaceBook  இல் அந்த புகைப்படங்கள்இருக்கலாம்.// முராத்தியின் பீர்புட்டிகள் IT மற்றும் BPO துறைகளில் வேலை செய்யும் இளைஞர்கள்  உலகில் இருக்கும் அத்தனை சீர்கேடுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தொடங்கி ஆண்டுகள் பலவாகின்றன. ஒரு பிரிவினர் செய்யும் செயல்களை இது போலப் பொதுமைப்படுத்துதலே அதற்குக் காரணம். நானாக இங்கே பதில் எழுத ஆயிரம் இருக்கிறது. எனினும் உணர்ச்சி வேகத்தில் ஏதேனும் தவறாய் எழுதிவிடுவேன் எனும் பயத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16322/

முராத்தியின் பீர்புட்டிகள்

நேற்று பெங்களூரில் இருந்து நூறு கிமீ தூரத்தில் உள்ள முராத்தி என்ற மலைவாச இடத்துக்குச் சென்றிருந்தேன். அருமையான இடம். என்ன பிரச்சினை என்றால்  கண்ணாடிச்சில்லுகள். மது அருந்துபவர்கள் அந்தக் குப்பிகளை வீசி எறிந்து உடைக்கிறார்கள். இங்கே நடந்தேறுவது ஷோலே உச்சகட்ட காட்சி மாதிரி.  இங்கே வரும் 90 சதம் பேரும்  பெங்களூரைச் சேர்ந்த தொழில்நிபுணர்கள். உயர்கல்வி கற்றவர்கள். இவர்கள் எங்கிருந்து தங்கள் அற மதிப்பீடுகளைக்  கற்றுக்கொள்கிறார்கள். பள்ளியிலிருந்தா பெற்றோரிடமிருந்தா இல்லை சமூகத்தில் இருந்தா? உங்கள் யானைடாக்டர் கதையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16875/

Older posts «