Tag Archive: இயற்கை வேளாண்மை

ஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி

அன்புள்ள ஜெ, வணக்கம் கொற்றவையில் கோவலனும் கண்ணகியும் மருத நிலத்தில் மள்ளர்கள் சேறு கலந்த நெல் விவசாயம் செய்தது பற்றி அவர்களின் பார்வையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் பாலையிலும் குறிஞ்சி நிலங்களில் தங்கும்போது அப்பகுதி மக்கள் தானாகவே விதைத்து (self sown-shattering) முதிர்ச்சி அடைந்த பயிர்களில் இருந்து தானியங்களை சேகரித்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி பகிர்ந்து உண்பதாக ஒரு குறிப்பு இருக்கும். நெல் வறண்ட நிலத்தில் தோன்றி பிறகு காலப்போக்கில் நீர் தேங்கிய சதுப்பு நிலங்களில் பயிரிடப்பட்டதன் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86026

நெல்லின் ரகசியம்

  அன்புள்ள ஜெ அவர்களுக்கு வணக்கம் நெல் சாகுபடி பொதுவாகவே இலாபம் குறைவானதாகவும், விவசாயி தியாகம் செய்பவராகவும் ஒரு நிலை இருக்கிறது. அதிகரிக்கும் சாகுபடி செலவு ஒருபக்கம், ஆனால் விளைபொருளுக்கான சரியான விலை கிடைக்காதது, உற்பத்தி திறன் குறைவாக இருப்பது போன்ற காரணங்கள் விவசாயியை சோர்வுற செய்கின்றன. தேசிய அளவில் நெல்லின் சராசரி உற்பத்தி திறன், 2600 கிலோ ஒரு ஹெக்டருக்கு. தமிழ் நாடு இந்திய சராசரியைவிட குறைவாக நெல் உற்பத்தி திறனை கொண்டுள்ளது. 2400 கிலோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85621

வெறுப்பு, இயற்கை வேளாண்மை – கடிதங்கள்

ஜெ, வேளாண்மை குறித்து உங்களது வலைப்பதிவுகளை வாசித்தேன். இரண்டு விஷயங்கள். ஒன்று,  நம்மாழ்வார் ஐயாவின் வசைபாடுதலால் அவரை விட்டு விலகியவர்களுள் நானும் ஒருவர். மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் சேர்ந்து பணி செய்ய முடியவில்லை. பெயர் குறிப்பிடாமல் நூலின் முன்னுரையில் இதைப்பற்றிய எனது கருத்தையும் எழுதியுள்ளேன். இதே காரணத்தால் கடந்த இருபதாண்டுகளில் பல களப்பணியாளர்களிடமிருந்து விலக நேரிட்டுள்ளது. இரண்டு. நீங்கள் எவ்வகையான இயற்கை வேளாண்மை மேற்கொள்கிறீர்கள் என்று அறியலாமா? என்ன விளைவிக்கிறீர்கள்? ஒரு ஏக்கருக்கு என்ன செலவாகிறது? என்ன வருமானம் கிடைக்கிறது? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85406

விமர்சன மதிப்பீட்டில் நம்மாழ்வார்

அன்புள்ள ஜெ, இக்கட்டுரையில் நம்மாழ்வார் பற்றிச் சொல்லியிருந்த ஒரு கருத்து எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் மேல் மதிப்புள்ளவர் நீங்கள் என்னும் எண்ணம் எனக்கிருந்தது. இந்த நிராகரிப்பு ஆச்சரியமூட்டுகிறது. செல்வரத்தினம் * அன்பின் ஜெயமோகன், இன்றைய இடுகையில் ஒரு வரி: //ஓர் அறிவியலாளராக மாற்று அறிவியலை முன்வைத்துப் பேசத்துவங்கிய நம்மாழ்வார் எளிய வசைபாடிச்சித்தராக எப்படி மாற்றிக்கொண்டார் // இன்று மாற்று மருத்துவம், இயற்கை வேளாண்மை என்று பல திசைகளில் பயணிக்கும் அன்பர்கள் பலரும் நம்மாழ்வாரை நிச்சயம் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85164

பசுமை- ஒரு கடிதம்

அன்பு ஜெயமோகன்! பசுமை வணக்கம்.தங்களைப் பற்றி நான் முதன் முதலில் கேள்விப்பட்டது 15 ஆண்டுகளுக்கு முன்பு. அரைக்கால் சட்டையில் இருந்து, முழுக்கால் சட்டைக்கு மாறிய தருணம் அது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் எனது ஊர். அங்குள்ள கிளை நூலகம் வழியாகத்தான் அறிவுலகில் நுழைந்தேன். அதன் பிறகு காலம் என்னைக் கைப்பிடித்துப் பத்திரிகைத் துறைக்கு அழைத்து வந்தது. ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பசுமை விகடன்’ இதழில் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17089