Tag Archive: இயற்கை உணவு

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

நான் நித்ய சைதன்ய யதியின் நூல்களில் பாதியையே வாசித்திருக்கிறேன்.கணிசமான பகுதி நான் அறியாத துறைகளைச் சார்ந்தவை. அவரது குருகுலத்திற்கு வருபவர்களில் மனநிபுணர்களும் மனநோயாளிகளுமே அதிகம் என்று சொல்வதுண்டு. இல்லை, மனநோய்க்கு வாய்ப்புள்ளவர்களே அதிகம் என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். ஏராளமான அளவில் ஆயுர்வேத மருத்துவர்களும் மாற்று மருத்துவ நிபுணர்களும் வருவதுண்டு. நித்யாவின் முதன்மை மாணவர்களில் ஒருவரும் இப்போது ஊட்டி நித்யாகுருகுலத்தின் பொறுப்பில் இருப்பவருமான ஸ்வாமி தன்மயா பூர்வாசிரமத்தில் ஓர் அலோபதி மருத்துவர் [டாக்டர் தம்பான்]. சென்ற இருபது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/382/

இயற்கை உணவு, கடிதம்

வணக்கம் ஜெயமோகன் அவர்களே நான் தங்களின் இயற்கை உணவு : என் அனுபவம் கட்டூரையை படித்தேன், நான் கடந்த 40 வருடகாலமாக இயற்கை உணவை பயன்படுத்துகின்றேன், மேலும் யோகாவில் முனைவர் பட்டம் பெற்று முழு நேர யோக பயிற்யாளராகவும், இயற்கை உணவு ஆராய்ச்சியாளராகவும் இருக்கின்றேன்.இயற்கை உணவு மற்றும் யோகா சார்ந்து சில புத்தகங்களும் எழுதியுள்ளேன். அந்த கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட சிவ சைலம் இராமகிருஷ்ணன் அவர்கள் தான் என் குரு. நான் அவருடன் கிட்டத்தட்ட 6 வருடங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17074/

இயற்கை உணவு,நல்வாழ்வு ஆசிரமம்

அன்புள்ள ஜெயமோகன், சரவணன் என்பவருக்கு மே 13ல், சிவசைலம் நல்வாழ்வு ஆசிரமம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள்.  சில வருடங்களுக்கு முன் நான் அங்கு சென்று ஒரு வாரம் தங்கினேன்.  எனக்குப் பொதுவாக நவீன அறிவியலின் அடிப்படையில் நிரூபிக்கப்படாத மாற்று மருத்துவத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. ஒரு நண்பர் இந்த இடத்தைப் பற்றிக் கூறினார். உங்களது இயற்கை உணவு பற்றிய கட்டுரையையும் படித்திருந்தேன்.  நீங்கள் பழங்களை மட்டும் மாலை/இரவு உணவாகக்  கொள்வதால் அடைந்த பலன்களைப் படித்தது, இதை முயற்சிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16826/

இயற்கை உணவு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ! நலமா, மீண்டும் ஒரு கடிதம் வாயிலாக உங்களுடன் அளவளாவ. கடிதம் எழுதும் அவா, அதை தாண்டிய பதற்றம், நண்பர்களும் படிப்பார்களே என்னும் ஒரு தயக்கம், இதையும் தாண்டி எதோ ஒன்று எழுத தூண்டுயது. நீங்கள் பரிந்துரைத்த இயற்கை உணவிற்கு மாறலாம் என்று நானும் ஓரிரு மாதங்கள் முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஆம் விட்டு விட்டேன். :) உங்களை போலவே பெரும் பாதிப்புகள் கொண்ட வயிறுடையோன் நான். அமீபா தொந்தரவுகள், அதை தாண்டிய அமில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8876/

இயற்கை உணவு ஒரு கடிதம்

   அன்புள்ள ஜெயமோகன் நலம்தானே? இயற்கை உணவு பற்றிய உங்கள் கட்டுரையை படித்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். இதுவரை இயற்கை உணவு சாப்பிடுவது பற்றிய ஒரு கட்டுரையைக் கூட நான் படித்தது இல்லை. எனக்கு தொடர்ச்சியாக வயிறு சம்பந்தமான பல சிக்கல்கள் வந்தன. அதிக எடையும் மூச்சுத்திணறலும் இருந்தது. எங்கோ கேள்விப்பட்ட நினைவில் நானே இயற்கை உணவுப்பழக்கத்துக்கு மாறினேன். இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாக்கை பழக்குவது பற்றி எழுதியிருந்தீர்கள். ஒரு மாதம் பல்லைக் கடித்துக் கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/377/

இயற்கை உணவு : என் அனுபவம்

பதினைந்து வருடம் முன்பு ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு தமிழ் நூலை மலையாளத்திற்கு மாற்றித்தர முடியுமா என்று கேட்டார்.அது ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘நோயின்றி வாழ முடியாதா?’ என்ற சிறுநூல். இயற்கை மருத்துவம் பற்றிய நூல் அது. மருத்துவமல்ல இயற்கை உணவு முறை. உணவுமுறை மட்டுமல்ல வாழ்க்கை முறை. அதைப்படித்துப் பார்த்தபோது ஒருவகை சுய ஏமாற்று என்றுதான் அதைப்பற்றி எண்ணினேன். அதேசமயம் அந்த விஷயத்தில் உள்ள பிடிவாதமும் என்னைக் கவர்ந்தது. அத்தகைய பிடிவாதங்கள் மேல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/373/