Tag Archive: இயற்கைச் சூழல்

Bob Parsons, a vain insect

காலை எழுந்தவுடன் என் மனைவி இந்தச் செய்தியை MSNBCயில் பார்த்து என்னிடம் காண்பித்தாள். யானை டாக்டர் கதை ஜெ எழுதியிருக்கவில்லையென்றால் எனக்கு இது ஒரு தூரத்து செய்திதான். இனிமேல் எனக்கு இது சாதாரண செய்தி அல்ல. என்னுடைய ஐந்து டொமெய்ன்களை GoDaddy ஹோஸ்ட் செய்கிறது. ஐந்தையும் டிரான்ஸ்ஃபர் செய்யப் போகிறேன். மேலும் GoDaddyயை தொலைப்பேசியில் அழைத்து கடுமையாக எனது எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை. http://www.msnbc.msn.com/id/21134540/vp/42364248#42364248 பகவதிப்பெருமாள் மோசமான விஷயம் என்னவெனில், இதனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13893

மரம் ஓர் அனுபவம்

படித்தவுடனே பதில் போட நினைத்தேன் வேறு வேலைகள் ஆக்ரமித்து விட்டன. முதலில் அய்யாச்சாமி அவர்கள் ஆத்மா சாந்தியடையும் வகையில் இன்னும் பல்லாயிரம் மரங்கள் நடப்படப் பிரார்த்திக்கின்றேன். என்னால் அவருக்கு முடிந்த அஞ்சலி ஒரு நூறு மரங்களை நடுவது மட்டுமே. இவரைப் பற்றியும் இவரைப் போலவே தமிழ் நாட்டில் இருக்கும் இன்னும் ஒரு பத்திருபது உன்னதமான மனிதர்களையும் தொடர்ந்து பசுமை விகடன் மற்றும் மரம் வளப்பதை ஊக்குவிக்கும் இணைய தளங்களில்/கூகுள் குரூப்புகளில் படித்து வருகிறேன். எந்தவித பிரதியுபகாரமும் எதிர்பாராமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13284

மரங்களின் மைந்தர்கள்

திரு. அய்யசாமியைப் போலவே கர்நாடகாவில் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர்தான் திம்மக்கா. அவரும் அவரது கணவரும் குழந்தைப்பேறு இல்லாத வெறுமையை மாற்ற மரம் வளர்க்க ஆரம்பித்தனர். (மாளவிகா சருக்கையின் நாட்டிய நிகழ்ச்சிகளின் மூலம் நான் திம்மக்காவைப் பற்றி அறிந்தேன்.) இவரைப் பற்றிய சுட்டி http://en.wikipedia.org/wiki/Saalumarada_திம்மக்க இம்மாதிரி மனிதர்களால்தான் இன்றும் உலகம் உய்கிறது. இவர்களுக்கு வணக்கங்களுடன், சுதா — ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரே” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13268

கவி சூழுலா 2

நவம்பர் பதிநான்காம் தேதி காலை ஆறுமணிக்கு காட்டுக்குள் செல்ல தயாராக இருக்கும்படி சொல்லியிருந்தார்கள். ஐந்தரை மணிக்கே எழுந்து பல்தேய்த்து வந்து நின்றோம். கவி அதிக உயரமில்லை என்பதனால் குளிர் குறைவு. மழைச்சட்டையின் வெதுவெதுப்பே போதுமானதாக இருந்தது. பால் இல்லாத ‘கட்டன்’ காப்பிதான் இருந்தது. நாலைந்து வெள்ளையர்கள் ஒரு ஜீப்பில் கிளம்பிச்சென்றார்கள். நாங்கள் இன்னொன்றில். காட்டுக்குள் காலைவெளுத்துக்கொண்டிருந்தது. ராஜா இருபக்கங்களையும் கூர்ந்து பார்த்துக்கொண்டே சென்றார். காட்டுக்குள் நீல்கிரிலாங்குர் எனப்படும் கருமந்தியின் உரத்த உறுமல் ஒலித்தது. அவை காட்டின் காவலர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9298

கவி சூழுலா

சென்ற ஜூலையில் நண்பர்களுடன் கவி சென்று வந்தபோதே மீண்டும் ஒருமுறை குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பாதியாண்டு தேர்வு முடிந்து அஜிதன் வந்தபோது நவம்பர் 12 ஆம்தேதி கிளம்பிவிட்டோம். இரு குழந்தைகளுக்குமே சிறுவயதிலேயே காடு மீதான ஆர்வம் வேறெதிலும் இல்லை. தீம்பார்க்குகள் போன்ற செயற்கை கொண்டாட்டங்கள் அவர்களை சற்றும் கவர்வதில்லை. எங்களுடைய எல்லா பயணங்களும் காடுகளுக்குத்தான். அபூர்வமாக கோயில்கள். இதை நண்பர்கள் பலரிடம் சொல்லியிருக்கிறேன். குழந்தைகளுக்கு ஆர்வம் உருவாகும் வயதில் அவர்கள் காண்பது விளம்பரங்களைத்தான். அத்துடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9293