Tag Archive: இம்பால்

சூரியதிசைப் பயணம் – 13

கோகிமாவிலிருந்து நீண்ட நெடும்பயணம் வழியாக மணிப்பூருக்குள் நுழைந்தோம். நாகாலாந்து முழுக்க கடுமையான ராணுவக்காவல் இருந்தது கூடவே ஒருவகை செல்வச் செழிப்பையும் காணமுடிந்தது. ஆனால் மணிப்பூரில் ராணுவக்காவல் மட்டும்தான். செழிப்பு இல்லை. மணிப்பூர் எல்லையில் எங்கள் வண்டியை நிறுத்தி விரிவாகச் சோதனையிட்டார்கள். அனுமதிச்சீட்டு வாங்கியிருந்ததைப் பரிசீலித்தார்கள் மணிப்பூரின் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சிட்டே கிடந்தன. இப்போதுதான் சாலை போட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே குண்டும் குழியுமான சாலை. மணிப்பூரில் இப்போது 37 ஆயுதம்தாங்கிய சிறிய குழுக்கள் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு இனக்குழுவுக்குரியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71945