Tag Archive: இமையம்

எரியும் தேர்

ராஜன் ராதாமணாளன் எழுதிய இந்தக்கதை [ தேர்க்கால் ] சமீபத்தில் வாசித்த குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று. நவீனத் தமிழ் இலக்கியம் இயல்பாகவே மேலிருந்து தொடங்கியது. உயர்குடி வாழ்க்கையின் நுட்பமான சில தளங்களைச் சொல்வதாகவே அது அமைந்தது. அடுத்தடுத்த கட்டத்தில்தான் அது அடித்தள வாழ்க்கையின் சித்திரங்களை அளிக்கத் தொடங்கியது. ஜி.நாகராஜன் அதற்கான தொடக்கம் எனலாம். இமையம்,சு.வேணுகோபால், ஜோ.டி.குரூஸ்,அழகியபெரியவன் போன்றவர்களும் அடுத்த தலைமுறையில் எஸ்.செந்தில்குமார், லட்சுமி சரவணக்குமார், வா.மு.கோமு, கெ.என்.செந்தில் போன்றவர்களும் அடித்தளவாழ்க்கையை எழுதுபவர்களாக இன்று அறியப்படுகிறார்கள். தீவிரமான கணங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67095

இந்தியச் சமூகத்தின் அறம் எது? -இமையம்

வரலாறு என்பது தகவல்கள், புள்ளி விபரங்கள், ஆவணங்கள், இலக்கியப் படைப்பு என்பது சிந்தனை, கற்பனை, அறிவு, மொழித் திறன் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக சிரிப்பு, மகிழ்ச்சி, கண்ணீர் என்பதை ஜெயமோகனின் வெள்ளையானை நிரூபிக்கிறது. தமிழக இந்திய வரலாறு என்பது ஒடுக்கப்பட்ட மக்களைத் தவிர்த்த வரலாறுதான். சமூகத்தில் பெரும்பான்மை மக்களாகவும், சமூகத்திற்கான அடிப்படையான வேலை செய்கிறவர்களாகவும் இருக்கிறவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு சமூகத்தின் வரலாற்றை எப்படி எழுத முடியும்? ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மக்கள் எப்படி அடிமைகளாக இருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42047