Tag Archive: இமயம்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 3 ] கிருதயுகத்தில் கங்கை ஓடிய பள்ளத்தின் விளிம்பில் இருந்தது அஸ்தினபுரி. மறுமுனையில் கங்கையின் கரையாக இருந்த மேட்டில் நின்றுகொண்டு நகரின் கோட்டையைப் பார்த்தபோது பீஷ்மர் அந்நகரம் ஒரு வேழாம்பல் பறவை போல வாய்திறந்து மழைக்காகக் காத்திருப்பதுபோல உணர்ந்தார். சுற்றிலும் கோடையைத் தாண்டிவந்த காடு வாடிச்சோர்ந்து சூழ்ந்திருந்தது. பெரும்பாலான செடிகளும் மரங்களும் கீழ்இலைகளை உதிர்த்து எஞ்சிய இலைகள் நீர்வற்றி தொய்ய நின்றிருந்தன. இலைத்தழைப்பு குறைந்தமையால் குறுங்காடு வெறுமை கொண்டதுபோல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45630

உமிழ்தல்,இமயம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, தளத்தில் நுழைந்தாலும் , தீவிர வாசிப்புக்கான மனநிலை இல்லாததால் ஒரு மாத அளவில் எதையும் முழுமையாக படிக்கவில்லை..திரும்பி பார்த்தால் புறப்பாடு , நூறு நிலங்களின் மலை , மீண்டும் புதியவர்களின் கதைகள் என நீண்டு கிடக்கிறது.,கல்லூரி ஸ்டடி ஹாலிடேஸ் இறுதி இரண்டு நாட்களில் எல்லா புத்தகங்களையும் விரித்து வைத்து , பீதி அடைபவன் நான்..அதே மனநிலையில் மீண்டும் :-) இமயம் என்றால் பனி மூடிய மலைகள்தான் நினைவுக்கு வரும் .அந்த சித்திரத்தை முழுமையாக உடைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41260

இமயம் இன்னொரு காணொளி

இமயமலை அபாயகரமான ரோடுகளில் ட்ரக் ஓட்டும் சாகசம் பற்றிய ஒரு ரியாலிடி நிகழ்ச்சியும் கொஞ்ச நாட்கள் பிரபலமாக இருந்தது. மிக மிக குறுகிய சாலைகளும் அபாயகரமான வளைவுகளும்… வேடிக்கை என்னவென்றால் இதில் ஒரு ஓட்டுனர் (வெளிநாட்டவர்) டெல்லியிலிருந்து வெளியே வருவதற்குள் நான் இந்த ஆட்டத்திற்கு வரவில்லை என்று விலகிவிட்டார் – (உள்ளூர் தெருக்களில் ஓட்டுவது மலைப்பாதையை விட அபாயகரமாக இருக்கிறது என்று!) சிவா கிருஷ்ணமூர்த்தி http://www.youtube.com/watch?v=bHH6f2o052o

Permanent link to this article: https://www.jeyamohan.in/39769

இமயம் ஓர் ஆவணப்படம்

ஜெயமோகன் தனது இமய மலைப் பயணம் குறித்து எழுத ஆரம்பித்திருக்கிறார். அது நமக்கு ஆழமான பல பரிமாணங்களை அளிக்கும். அவர் கண்ட காட்சிகளை தத்ரூபமாக அவரால் நம் கண்களுக்குக் காட்டி விட முடியும். இருந்தாலும் அதற்கும் மேலாக இமயமலையில் அவர் சென்ற இடங்களையும் செல்லாத இடங்களின் காட்சிகளையும் காண விரும்புபவர்கள் இந்த பிபிசி தொலைக்காட்சித் தொடரின் 6 எபிசோடுகளில் காணலாம். அந்தக் காட்சிகள் ஜெயமோகனின் பயணக் கட்டுரைகளுடன் நமக்கு மேலும் நெருக்கத்தை அளிக்க உதவலாம். பிபிசியின் பிரபல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39756