Tag Archive: இமயமலைப்பயணம்

நூறுநிலங்களின் மலை – 6

முல்பெக் லடாக் செல்லும் சாலையில் உள்ள ஒரு நகரம். அங்கே சாலை ஓரமாக ஒரு பெரிய புத்தர்சிலை உள்ளது. அந்த வழி ஒருகாலத்தில் முக்கியமான வணிகப்பாதையாக இருந்திருக்கிறது. வணிகர்களுக்காக அமைக்கப்பட்ட வழிபாட்டிடம் அது முல்பெக் மடாலயம் கிபி ஆறாம் நூற்றாண்டில் அமைக்கபப்ட்டது. அதற்கு நூறு வருடங்களுக்கு முன்னரே அங்கே ஒற்றைப்பெரும்பாறையில் மைத்ரேயபுத்தரின் பிரம்மாண்டமான புடைப்புச்சிலை செதுக்கப்பட்டிருந்தது. மடாலயம் அச்சிலையை உள்ளே விட்டு சுற்றிலும் கட்டப்பட்டிருந்தது. முல்பெக்கில் இறங்கியதுமே ஓங்கி நின்றிருந்த புத்த மைத்ரேயரைப்பார்க்க முடிந்தது. பத்து மீட்டர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39639

நூறு நிலங்களின் மலை – 5

இரவெல்லாம் சரியாக தூக்கமில்லை. நாங்கள் தங்கிய இடங்களிலேயே மிகக்குறைவாக ஆக்ஸிஜன் இருந்த இடம். மூச்சுத்திணறல் தூக்கத்தை கலைத்துக்கொண்டே இருந்தது. களைப்பினால் தூங்கி நினைவழிந்து செல்லும்போது நுரையீரல் விம்மி விழித்துக்கொள்வேன். அரைத்தூக்க கனவுக்குள்ளும் மூச்சுதான் வரும். மார்பில் எடைகள் ஏறியிருப்பதுபோல. நீருக்குள் மூழ்கி மூச்சழிவதுபோல. வாய்க்குள் மணல் நிறைந்து இறுகுவதுபோல. நள்ளிரவில் அஜிதன் தலைவலிப்பதாகச் சொன்னான். ஒரு கட்டத்தில் குளிர்ந்தாலும் பரவாயில்லை என்று கதவுகளை திறந்தே வைத்தேன். உடம்பு துள்ளித்துள்ளி விழுந்தது. ஆனால் அவர்கள் வைத்திருந்த ரஜாய்கள் மிகத்தரமானவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39566

நூறுநிலங்களின் மலை – 4

எங்கள் பயணம் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியின் அதிகம் அறியாத உச்சிமலைச் சமவெளிகளை, பனிச்சிகரங்களை, ஆழ்மலையிடுக்குகளை உத்தேசித்து திட்டமிடப்பட்டது. மிகவிரிவான திட்டமும், அதிகாரத் தொடர்புகளும் இன்றி இப்பகுதிகளுக்குச் செல்ல முடியாது. ஸன்ஸ்கர் சமவெளி போன்ற பகுதிகள் சமீபகாலம் வரையில் முழுமையாக ராணுவக்கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருந்தன. சாகசச்சுற்றுலாவுக்கு அவை திறக்கப்பட்டது இப்போதுதான். ஆகவே அனேகமாக தமிழில் அப்பகுதியை சென்று கண்டு எழுதப்படும் முதல்குறிப்புகள் இவையாக இருக்கலாம். சாகசச்சுற்றுலாவுக்கு இப்பகுதியைத் திறந்துவிடுவதில் அரசுக்கு ராஜதந்திரநோக்கங்கள் இருக்கின்றன என்று சொல்லலாம். இவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39561

நூறுநிலங்களின் மலை – 3

கார்கிலுக்கு மதியம் சென்று சேர்ந்தோம். அங்கே முதல் பிரச்சினை, நாங்கள் சென்ற காரில் மேலே செல்ல விடமாட்டார்கள் என்பதே. நாங்கள் கார்கிலில் இருந்து ஸுரு சமவெளிக்கும் ஸன்ஸ்கர் சமவெளிக்கும் செல்ல ஆசைப்பட்டோம். அதற்கான முறையான அனுமதிகள் பெற்றிருந்தோம். ஆனால் அங்குள்ள வாடகைக்கார் ஓட்டுநர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத எவரும் செல்ல அனுமதி இல்லை என்று சொல்லி வழிமறித்தனர். சற்று அடாவடிதான். ஆனால் வருடத்தில் தொண்ணூறுநாட்களுக்கு மட்டுமே அங்கே கார்கள் செல்லமுடியும் என்ற நிலையில் அவர்களுக்கும் வேறுவழி இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39529

நூறுநிலங்களின் மலை – 2

சோனாமார்க்கின் விடுதியில் காலை ஐந்துமணிக்கே எழுந்துவிட்டோம். கார்கில் செல்லும் பாதையை காலை ஏழுமணிக்குத்தான் திறப்பார்கள் என்று விடுதிக்காரர் சொன்னார். விடுதியின் உரிமையாளர் அவராக இருந்தாலும் வெந்நீர் கொண்டு வைப்பதுவரை அவரே செய்தார். ஜமால் என்று தன் பெயரைச் சொன்னார். ஷியா முஸ்லீம் என்று தெரிந்தது. அவரது மகன்களும் இருவேலைக்காரர்களும் இணைந்து அங்கே எல்லாவற்றையும் செய்தனர். விடுதிக்குள்ளேயே இரண்டு அறைகளில் அவர்கள் தங்கியிருந்தனர். எங்களைத்தவிர ஒரு சிந்தி குடும்பம் அங்கே தங்கியிருந்தது. வாளியில் கொதிக்கும் வெந்நீர் கொண்டுவந்து வைத்தார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39515

நூறு நிலங்களின் மலை – 1

நித்ய சைதன்ய யதியின் மாணவரான ஷௌகத் அலி நித்யாவின் மறைவுக்குப்பின் கிட்டத்தட்ட நாலாண்டுக்காலம் இமயத்தில் அலைந்த அனுபவங்களை ‘இமயத்தில்’ என்ற பயணக்கட்டுரைநூலாக மலையாளத்தில் எழுதினார். நீண்ட இடைவேளைக்குப்பின் உஸ்தாதை திருவண்ணமாலையில் பவா செல்லத்துரையின் நண்பராகச் சந்தித்தேன். அவர் கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்ற அந்நூலை அளித்தார். அதை வாசித்தபோது மீண்டும் இமயப்பயணம் பற்றிய கனவை அடைந்தேன். அக்கனவு எப்போதும் என்னுடன் இருந்துகொண்டிருந்த ஒன்றுதான். எப்போதென்று சொல்லவேண்டுமென்றால் என் இளமையின் அந்தரங்கத்திற்குள் செல்ல வேண்டும். சிவன் வீற்றிருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39511

» Newer posts