Tag Archive: இமயமலை

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-26

விந்தியமலைகளைக் கடந்து வணிகர் செல்லும் பாதையை விட்டு விலகி சதாரவனத்தை அடைந்து அங்கிருந்து தன்னந்தனியாகச் சென்று சுகசாரி மலையை வியாசர் அடைந்தபோது தலைக்குமேல் பறந்துசென்ற கிளி ஒன்று வேதச்சொல் கூவிச்சென்றது. உட்கடந்து செல்லுந்தோறும் மேலும் மேலும் கிளிகள் வேதம்பாடி மரங்களில் எழுந்தும் அமர்ந்தும் காற்றில் சிறகசைத்துச் சுழன்றும் சூழ்ந்திருந்தன. அவற்றைக் கண்டதுமே அவர் உள்ளம் மலர்ந்து முகம் புன்னகை கொண்டது. அண்ணாந்து அவற்றை நோக்கியபடி நடந்தார். தன் மைந்தனை காண்பதற்குள்ளாகவே அவன் உள்ளத்தை காணக்கிடைத்தது என எண்ணினார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108479

இமயமலைப்பயணம்

சென்ற 26 ஆகஸ்டில் ஆரம்பித்த இமயப் பயணம் இன்றுடன் முடிகிறது. ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் புகுந்தோம். காஷ்மீரின் கிராமப்பகுதிகளில் பயணம் செய்தோம். கார்கில் வழியாக லடாக். பயணிகள் செல்லாத பல சமவெளிகளில் சிறப்பு அனுமதிபெற்று செல்ல முடிந்தது. இமயம் எனக்குப் புதிதல்ல. என் இருபது வயது முதல் நான் இங்கே வந்துகொண்டிருக்கிறேன். நண்பர்கள் சேர்ந்து வரும் மூன்றாவது இமயப்பயணம் இது. இன்று மதியம் சண்டிகர் வழியாக டெல்லி சென்று கோவை விமானம் ஏறுகிறோம். பயண அனுபவங்களை எழுத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39502