Tag Archive: இமயச்சாரல்

இமயச்சாரல் – 21

பில்லாவரிலிருந்து மாலையிலேயே கிளம்பி நேராக பாசோலி என்ற சிற்றூரை அடைந்தோம. உண்மையில் அது ஒரு நகரம். ஆனால் அங்கே பயணிகளின் வருகை அறவே இல்லாத காரணத்தால் தங்கும் வசதிகள் இல்லை. செய்திகளில் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் என்று செய்தி வந்துகொண்டிருப்பதனால் பெரிதும் பாதிக்கப்படுவது அமைதிப்பகுதியான ஜம்முதான். பாசோலியில் ஒரு அரசு விருந்தினர் மாளிகையை தேடிப்பிடித்து கெஞ்சி இடம்பெற்று தங்கினோம். மெத்தையில் இருந்து வந்த மட்கும் நெடியையும் கழிப்பறை வாடையையும் தாங்கிக்கொண்டு தூங்க வைத்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60484

இமயச்சாரல் – 20

ஜம்மு பகுதியை ஆலயங்களின் மாபெரும் இடுகாடு என்று ‘அலங்காரமாக’ சொல்லிவிடலாம். இந்தியக் கட்டிடக்கலையின் பிறப்பிடங்களில் ஒன்று இது. ஏனென்றால் காஷ்மீர சைவமும் பௌத்தமும் ஓங்கியமண். நேரடியாக காந்தாரக் கட்டிடக்கலையின் செல்வாக்கு இங்கே வந்தது. ஆகவே குறிப்பிடத்தக்க இரு கட்டடக்கலைகள் இங்கே உருவாயின. ஒரு முறையின் உச்சம் மார்த்தாண்ட் ஆலயம். ஜம்மு முழுக்க இன்னொரு வகையான கட்டடக்கலை உருவாகி வளர்ந்ததன் தடயங்கள் உள்ளன. அத்தனை கோயில்களும் இடிக்கப்பட்டன. பெரும்பாலானவை அடித்தளங்களாக எஞ்சுகின்றன. பாதிப்பங்கு இடிக்கப்பட்டு எஞ்சும் ஆலயங்களே நூற்றுக்கணக்கானவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60459

இமயச்சாரல் – 19

காஷ்மீரில் இருந்து ஜம்முவைப்பிரிப்பது ஒரு பெரிய சுரங்கப்பாதை. அதன்வழியாக மறுபக்கம் சென்றபோதே எங்கள் ஓட்டுநர் மறுபிறவி எடுத்துவிட்டவர் போலத் தோன்றினார். ஜம்முவை நெருங்க நெருங்க அவரது முகத்தில் சிரிப்பும் பேச்சில் மிடுக்கும் வந்தன. அதுவரை தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வந்தவர் என்ன உதவி தேவை செய்கிறேன் என்று பேச ஆரம்பித்தார். வெளியூருக்கு வழிதவறிச்சென்ற நாய் ஊர் திரும்புவதுபோல என்று சிரித்துக்கொண்டோம். திரும்பி வரும்போது ஒட்டுமொத்தமாக நினைவில் எழுந்து நின்றது மார்த்தாண்டர் ஆலயமே. அந்த கம்பீரத்தை மீண்டும் திரும்பிச் சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60415

இமயச்சாரல் – 18

எங்கள் பயணத்திலேயே முக்கியமான கோயில் நாங்கள் ஆறாம் தேதி காலையில் பார்த்த மார்த்தாண்டன் ஆலயம்தான். மார்ட்டண்ட் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இவ்வாலயம் மார்த்தாண்டனாகிய சூரியனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் நேரில் சென்று பார்த்தபோது பிரமித்துப்போனோம். இன்று மையக்கருவறை இடிந்த நிலையில் உள்ளது. முகப்புக்கோபுரவாயிலும் இடிந்து நிற்கிறது. ஆனால் இவ்வாலயத்தின் மகத்தான கட்டமைப்பை கற்பனையில் விரித்துக்கொள்ள முடிந்தது. கிரேக்கபாணி காந்தாரக் கலையின் சாயல் அழுத்தமாக விழுந்த ஆலயம் இது. உருண்ட தூண்கள் நிரைவகுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60371

இமயச்சாரல் – 16

ஜம்மு செல்லக்கூடிய வழியில் அவந்திபுரம் உள்ளது. ஸ்ரீநகருக்கு முன் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் பகுதியின் தலைநகரமாக விளங்கியது அவந்திபுரம். அந்நகரம் முதலாம் அவந்தி வர்மனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம். அவந்திவர்மனின் வம்சம் ஐநூறாண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் சமவெளியை ஆண்டிருக்கிறது. காஷ்மீரின் பொற்காலம் என்று அதைச் சொல்லலாம். அதற்கு நிரூபணமாக, காஷ்மீர் சமவெளி முழுக்க நிறைந்திருப்பவை பிரமிப்பூட்டும் பேராலயங்கள். இந்த ஆலயங்கள் அப்பகுதியில் அன்று விளங்கி வந்த மாபெரும் பண்பாட்டுச்சிறப்பை சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாலயங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60262

இமயச்சாரல் – 15

காஷ்மீரில் இந்து ஆலயங்கள் அனைத்திலுமே கடுமையான காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெய்வங்கள் சிறையிலடைக்கப் பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். வழிபாடு நிகழும் அனைத்து ஆலயங்களும் ராணுவ, துணை ராணுவப்படைகளின் தீவிரமான கண்காணிப்பில் உள்ளன. முதன்மையான ஆலயங்கள் தனி ராணுவ பட்டாலியன்களால் காவல் காக்கப்படுகின்றன. சிறு சிறு ஆலயங்கள் ராணுவ முகாம்களுக்குள் கட்டப்பட்டுள்ளன. வழிபாடற்ற ஆலயங்களை மட்டுமே காவலின்றி நம்மால் காணமுடியும். அவைகள் பெரும்பாலும் மூலச்சிலைகள் அற்ற இடிபட்ட கற்குவியல்கள்தான். ஒரு முக்கியமான முரண்பாட்டை கவனித்தேன். காஷ்மீரில் எங்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/59001

இமயச்சாரல் – 14

பழங்காலத்தில் சோதர தீர்த் என்று சமஸ்க்ருதத்தில் வழங்கப்பட்ட பகுதியான, இன்று நார்நாக் என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு ஆலய வளாகம். சனாப் நதியின் துணையாறான சோதர தீர்த் எனும் சிற்றாற்றின் கரையில் உள்ள இவ்வாலயத்தைப்பற்றி விசாரித்துச் சென்றோம். புழுதிக் குவியலைப்போல காட்சி தந்த பெரிய மலையின் விலாவை சுற்றிச்சென்ற பாதையில் விசாரித்தபடி ஏறிச் சென்றோம். பாரமுல்லா எல்லைப்பகுதி கிராமங்களில் உள்ள செல்வச்செழிப்பு மெல்ல குறைந்து வருவதை கண்கூடாகக் காணமுடிந்தது. இப்பகுதியில் மலை ஏறிச்செல்லச்செல்ல, வறுமையில் வாழக்கூடிய மலைக்குடிகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58973

இமயச்சாரல் – 13

காலை ஏழுமணிக்கு ஸ்ரீநகருக்குக் கிளம்பினோம். ஸ்ரீநகரில் தங்குவதற்கு ஒரு விடுதி அறை ஏற்பாடாகியிருந்தது. அங்கு செல்வதற்கு முன்னர் அதிகாலையிலேயே புர்ஷஹோம் எனும் இடத்தில் இருக்கும் பழமையான பெருங்கற்கால அகழ்விடத்துக்குச் செல்லலாம் என முடிவெடுத்தோம். காஷ்மீர் பெருங்கற்கால நாகரீகத்தின் முக்கியமான மையங்களில் ஒன்று. இப்போது இப்பெருங்கற்கால நாகரீகங்கள் வாழ்ந்த பெரும்பாலான புல்வெளிகள், ராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. மிகச்சிலவே நகரங்களுக்கருகில் உள்ளன. புர்ஷஹோம் அவற்றில் ஒன்று. அதை பார்த்தாகவேண்டும் எனும் முடிவுக்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம், பெருங்கற்கால நாகரீகத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58942

இமயச்சாரல் – 12

பஷீருடன் பாரமுல்லா எனும் இடத்தில் உள்ள பழமையான ஆலயத்தைப்பார்க்கச் சென்றிருந்தோம். கியானி அந்த ஆலயத்தைப்பற்றி எங்களிடம் முன்னரே சொல்லியிருந்தார். பாரமுல்லா மிகச்சிறிய ஊர். குறுகிய சாலைகளின் வழியாக பயணித்தோம். ஆனால் பெரும்பாலான கட்டடங்கள் பார்க்க பெரிதாகத்தான் இருந்தன. ஒட்டுமொத்தச் சூழலும் வளத்தையும் வசதியையும் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. சாலையோர விடுதியில் இருந்த இரு முதியவர்களிடம் பஷீர் பேசினார். பாரமுல்லாவில் இருந்த ஆலயத்தை தானே வந்து காட்டுவதாக ஒரு முதியவர் முன்வந்தார். எண்பது வயது இருக்கலாம், இளைஞரைப்போல தாவி முன்நடந்து வழிகாட்டி அழைத்துச்சென்றார். அவருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58893

இமயச்சாரல் – 11

தாப்பர் பிரதாப் சுவாமி ஆலயத்தையும் அதன் பின் பண்டியின் தத்தா மந்திர் ஆலயத்தையும் பார்த்துவிட்டு திரும்ப வந்தோம். இந்த ஆலயங்களைப்பற்றி ஒற்றை வரியல்லாத வேறெதையுமே இணையத்திலோ சுற்றுலா ஆவணங்களிலோ தொல்லியல் துறை அறிவிப்புகளிலோ காணமுடியவில்லை. இவற்றைப் பற்றி பெரிய அளவில் ஆய்வுகள் நடந்திருக்கின்றனவா, நூல்கள் ஏதும் எழுதப்பட்டிருக்கின்றனவா என்று தெரியவில்லை. இங்குள்ளவர்களிடம் கேட்டபோது அவற்றைப் பற்றி தோராயமான வழிகாட்டலுக்கு அப்பால் எவராலும் எதுவும் சொல்ல இயலவில்லை. பண்டியில் தத்தா மந்திர் ஆலயத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58738

Older posts «