Tag Archive: இன்றைய காந்தி

இன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்

  கடந்து போன ஒரு எளிமையான மனிதரைப் பற்றிய ஒரு தொலை நோக்கு சித்திரம். மகாத்மா என்ற பெயருக்கு சொந்தக்காரர். அவர் அதை ஏற்றுக் கொண்டாரா என்ற வரலாறு ஒரு புறமிருக்க அவரைப் பற்றிய நினைவுகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்றும் அவதானித்துக் கொண்டே இருக்கின்றன.   இன்றைய காந்தி நூலுக்கான சுருக்கமான மதிப்புரைகளில் ஒன்று    

Permanent link to this article: https://www.jeyamohan.in/92859

கடிதங்கள்

அன்புள்ள அய்யா ! நான் தங்களின் வாசகனாவேன், தற்பொழுது பணி நிமித்தமாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறேன். தங்களின் சமீபத்திய வருகையின் போது தங்களை சந்திக்க வாய்ப்பு அமையாமல் போய்விட்டது  பணிச்சூழலின் காரணமாக. தங்களிடம் நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அதீதமாக உள்ளது. ஆனால் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை அதனை ஒத்திப் போட்டே வந்திருக்கின்றது. இருப்பினும் கடந்த 8 வருடங்களாக எழுத நினைத்த ஒரு அறிமுகக் கடிதத்தை எழுதிவிட்ட ஒரு திருப்தி உண்டாகிறது.  இது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81975

காந்தியைப்பற்றி…

காந்தியை அறிய என்ன வழி என்று கேட்டால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காந்தியை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவைக் கொண்டு அதன் ஆன்மாவை உரசிப்பார்ப்பதே முறை என்று தோன்றுகிறது. திறந்த மனதோடு முன் முடிவுகள் ஏதும் இல்லாமல், நம் மனசாட்சிக்கு சரி என தோன்றுவதை அந்த ஆளுமை வரலாற்றின் அந்தத் தருணத்தில் எப்படிக் கையாண்டது என்று பார்ப்பதன் வழியாகவே நாம் அந்த ஆளுமையை மதிப்பிட முடியும். தரவுகளின் எண்ணற்ற தர்க்கச் சட்டகத்திற்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63014

இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கடந்த 8 மாதங்களுக்குமுன் தற்செயலாக உங்கள் நவீன தமிழிலக்கியம் ஓர் அறிமுகம் என்ற நூலை வாசித்தேன். அதிலிருந்த ஒரு ஈர்ப்பு என்னை மேலும் வாசிக்க தூண்டியது. அதன் பின் உங்கள் இணையதளத்தில் இருக்கும் ஏராளமான கட்டுரைகளை வாசித்துள்ளேன். குறுநாவல்கள், பின்தொடரும் நிழலின் குரல், காடு, இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், விஷ்ணுபுரம், இன்றைய காந்தி என என் கனவும் உலகமும் கண்முன்னே விரிந்து செல்கின்றன. என் 25 வருட வாழ்க்கையின் அலுப்பிலிருந்து மீண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42465

காந்தியின் இன்றைய முக்கியத்துவம்

ஜெ, உலகப்போருக்குப் பின் உருவான பொருளியல் நெருக்கடிகளால்தான் வெள்ளையர் இந்தியாவைத் துறந்தனர், காந்தியின் போராட்டங்களுக்கு அதில் பங்கில்லை என்று சொல்லும் இடதுசாரி விமர்சனங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சரவணன்.ஆர் அன்புள்ள சரவணன், இந்த வினாவுக்கு விரிவாக நான் ஏற்கனவே பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். இம்முறை ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டுகிறேன். காந்தியின் இன்றைய பங்களிப்பைப்பற்றிய ஜீன் ஷார்ப்பின் நீண்ட கட்டுரையின் தமிழாக்கம்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/25593

சுயசிந்தனை

ஜெ, நீங்கள் எழுதிய ‘இன்றைய காந்தி’ , சத்தியாக்கிரகத்தைப் பற்றிய புரிதல் குறித்து எனக்குள் முதன் முதலாய்க் கேள்வி எழுப்பிய ஓஷோவின் கருத்திற்கு அடுத்த படிக்கு (அதற்கு எதிரான முடிவிற்கு) என்னைக் கொண்டு சேர்த்துவிட்டது. அந்த பாதிப்பில், என் அரைகுறை தமிழ்’99 layoutல் தட்டுத் தடுமாறித் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். நான் கேட்க விரும்புவது இதுதான். சொந்தமாக, எந்தக் கருத்துகளின்…எந்த ஊடகங்களின் பாதிப்பும் இல்லாமல் யோசிப்பது எப்படி? எந்தப் புதுமையான கருத்துக்களையும் (ஓஷோவின், உங்களது) மனது உடனடியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23887

காந்தி ஒரு கட்டுரைப்போட்டி

காந்தி இன்று இணையதளத்தை நடத்திவரும் நண்பர் சுநீல் கிருஷ்ணன் காந்தியைப் பள்ளி மாணவர்களிடம் அறிமுகம் செய்வதற்காக ஒரு கட்டுரைப்போட்டி நடத்தினார். அந்த திட்டம் பற்றி அவர் ஒரு கடிதத்தில் இவ்வாறு விவரித்திருந்தார் “ஜெ எழுதி சென்ற வருடம் நான் வாசித்த முதல் புத்தகம் இன்றைய காந்தி.பாடப் புத்தகங்களிலும் நண்பர்களுடனான பேச்சுக்கள் மூலமும் நான் அறிந்த காந்தி மறைந்து வேறொரு காந்தியாக அவர் உயிர் பெறத் தொடங்கினார்.பின்பு காந்தியத்தின் நடைமுறை சாத்தியத்தை எடுத்து இயம்பும் விதமாக ஹசாரே போராட்டம் அமைந்தது.ஹசாரேவுக்காகத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23502

காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலமா ?. மீண்டும் உங்களை கடிதம் மூலம் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த மாதம் “இன்றைய காந்தி ” படித்து முடித்தேன். உடனே கடிதம் எழுதவேண்டும் என்று எண்ணினேன் . இருந்தாலும் ஒரு அவரசநிலையில் எழுதவேண்டாம் , ஆறப்போட்டு எனக்குள் அப்புத்தகத்தின் கருத்துக்கள் என்ன செய்கின்றன என்று பார்த்த பின் எழுதலாம் என்று எண்ணத்தில் இப்பொழுது எழுதுகிறேன். பொதுவாக எனக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22358

கடிதங்கள்

காலை வணக்கம் சார். சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் வாழ்விலே ஒரு முறை புத்தகத்தை எடுத்து வாசித்தேன்.  யோகி ராம் சுரத்குமாரைப் பற்றி “முடிவின்மையிலிருந்து ஒரு பறவை” என்ற அந்தக் கட்டுரை மிக நெருக்கமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. அன்புடன் தேவராஜ் விட்டலன் http://devarajvittalan.blogspot.com நன்றி தேவராஜ். அந்தக் கட்டுரையை எழுதி நெடுநாளாகிறது. நானும் நண்பர்களும் நடத்திய சொல்புதிது மூன்றாமிதழில் வெளிவந்தது. இன்று யோசிக்கும் போது அப்படி ஒரு இலக்கிய சிற்றிதழில் அந்தக்கட்டுரை வெளிவந்தது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19631

கோவை

பத்து வருடம் முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஆரம்பித்தன என்றாலும் சென்னை, மதுரை கண்காட்சிகளை மட்டுமே பதிப்பாளர் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறது. நெல்லை கண்காட்சி ஆரம்பத்திலேயே படுதோல்வி எனத் தெரிந்து அப்படியே விட்டுவிட்டார்கள். திருச்சி கண்காட்சியும் எடுபடவில்லை. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் மட்டும் விற்பதில்லை. அது எழுத்தாளனாக என் அனுபவம்சார்ந்து நான் ஏற்கனவே சொல்லிவருவதற்கு ஒத்தே உள்ளது. தஞ்சை ஓர் அறிவுப்பாலைவனம் இன்று. அங்கிருந்து ஒருவாசகர் கடிதம் வருவதென்பது அனேகமாக சாத்தியமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19791

Older posts «