Tag Archive: இந்தோனேசியா

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12

எரிமலையிலிருந்து இறங்கி மாலை சரிந்துகொண்டிருந்த மலைச்சரிவினூடாக வந்தோம். கிராமப்புறங்களில் ஒருவகையான அமைதியான விவசாய வாழ்க்கை. தோளில் விறகுடன் குனிந்து நடந்த பெண்கள். கூம்புத்தொப்பி வைத்த விவசாயிகள். முகம் முழுக்க சுருக்கங்களுடன் பாட்டிகள். கறைபடிந்த பெரிய பற்களுடன் பெரியம்மாள்கள் கார்களை கூர்ந்து நோக்கினர். எரிமலை மக்கள். அந்த எரிமலையை அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அடித்தாலும் அதுதான் சோறுபோடுகிறது அவர்களுக்கு. [ராஜமாணிக்கானந்தா] இன்றையநாளுடன் யோக்யகர்த்தா பயணம் முடிவுக்கு வருகிறது. செறிவான களைப்பூட்டும் பயணம் .ஆனால் பயணக்களைப்பு போல இனியது வேறில்லை.ஒவ்வொரு பயணமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80929/

இந்தோனேசியா -கடிதங்கள்

ஜெ கால் படும் மண்ணிற்கு உண்டு பல ஆயிரம் வருட கதைகள். ஆனாலும் மண்ணின் கதைகள் யாரும் அறியா வண்ணம் அமைதி காத்து உறங்குகிறது. மண்ணாகி மறைந்து போக விருப்பமின்றி கட்டிய கோவில்கள் தரும் உணர்வுகள் விதவிதமானவை. கட்டுவது கலை என்றா? நீள் காலம் வாழும் ஆசையா? பண்பாட்டை பகிர வேண்டிய கடமையா? எது அவர்களை இப்படி கட்டி குவிக்க தோன்றியது என நினைத்தால் மனம் தாளவில்லை. காதில் ஒலிக்கிறது பல காலம் எதிரொலித்தபடி இருந்த உளிகளின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80853/

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11

காலையில் தாமதமாக எழுந்தால்போதும் என்று சரவணன் சொல்லியிருந்தார். அன்று முழுக்க யோக்யகர்த்தா நகரைப் பார்வையிடுவதுதான். ஆகவே காலை எழுந்ததும் வெண்முரசு எழுதிவிட்டு குளித்து நிதானமாகக் கிளம்பினேன். முந்தையதினம் காலை மூன்றரைக்குக் கிளம்பி இரவு பத்துக்கு வந்ததுமே அருண்மொழி அதே வேகத்தில் படுத்துக்கொண்டாள். நான் அதன்பின் வெண்முரசு கொஞ்சம் எழுதினேன். இத்தனை அலைச்சலிலும் அது கூடவே வந்துகொண்டிருக்கிறது. முன்னரே எழுதிவைக்கமுடியவில்லை .ஆகவே ஒவ்வொருநாளும் மறுநாளைக்குரியதை எழுதினேன்.ஆச்சரியம் என்னவென்றால் நெருக்கடியில் எழுதினால் சிறப்பாக வரும். யோசிக்க ஆரம்பித்தால் ஒன்றுமே தோன்றாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80924/

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10

முன்பு ஒரு வெள்ளையத் துறவியை திருவண்ணாமலையில் பார்த்தேன். ‘ஏன் இங்கு வந்தீர்கள்?’ என்றேன். ‘இது அணைந்த எரிமலைகளின் நாடு” என்றார். அவர் அணையா எரிமலைகள் கொண்ட ஃபின்லாந்தில் இருந்து வந்திருந்தார். தென்னிந்தியாவின் நிலம் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு அணைந்த எரிமலைக்குழம்புப் பாறைகளால் ஆனது. நமது கருங்கற்களில் பெரும்பகுதி லாவாதான். நாம் அணைந்த எரிமலைகளை வீடுகளாக்குகிறோம். தெய்வச்சிலைகளாக்குகிறோம். வாழும் எரிமலைகளின் நாடுதான் இந்தோனேசியா. இங்குள்ள பல மலைகள் எரிமலைகள். செங்குத்தான கூம்புவடிவம். மேலே குடைபோல ஒரு வெண்முகில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80879/

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9

இந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும் யுனெஸ்கோவாலும் பேணப்படுகின்றன [போராப்புதூர் தூபி 1882ல் பழுபார்க்கப்படுகிறது] இந்து ஆலயங்கள் பெரும்பாலும் அறநிலையத்துறை, மாநிலத் தொல்பொருட்துறை கையில் உள்ளன. ஆகவே இஷ்டத்துக்கு சூறையாடப்படுகின்றன. ஆலயங்களில் செய்யக்கூடாத சில உண்டு. திரும்பத்திரும்ப அதை எழுதிவருகிறேன் 1. அவற்றின் கட்டுமான அமைப்புக்கு அன்னியமான புறக்கட்டுமானங்களைச் செய்யக்கூடாது 2. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80821/

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 8

விடுதியிலிருந்து காலை மூன்றரை மணிக்கே கிளம்பவேண்டும் என்று சரவணன் சொல்லியிருந்தார். போராபுதூர் பௌத்தப்பேராலயத்தைச் சென்று பார்ப்பதாகத் திட்டம். நான் வெண்முரசு எழுதி வலையேற்றி முடிக்க பத்தரை ஆகிவிட்டது. காலையில் அந்த எச்சரிக்கையே விழிப்பைக்கொண்டு வந்தது. இரண்டரை மணிக்கு சரவணன் வந்து கூப்பிட்டார். மணி இரண்டரை என்று அருண்மொழி சொல்ல ‘மன்னிக்கவும், நான் சிங்கப்பூர் நேரத்துக்கு எழுப்பிவிட்டேன்” என்றார் வேறேதும் செய்வதற்கில்லை. அருண்மொழி குளித்துக்கிளம்பத் தொடங்கினாள். நான் தூங்கவே இல்லை என்று தோன்றியது. கனவில் இடிபாடுகள் நடுவே அலைந்துகொண்டிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80802/

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 7

1984ல் நான் முதல்முறையாக ஹம்பி சென்றேன். அன்றெல்லாம் அது ஒரு சுற்றுலாத்தலமாக அறியப்படவில்லை. மிகக்குறைவான பயணிகளே வந்தனர். கர்நாடகமாநிலத்தவர் அறவே வருவதில்லை. ஹோஸ்பெட்டில் மட்டுமே தங்கும்விடுதிகள் இருந்தன. மத்தியத் தொல்பொருள்துறை அந்த இடிந்த தொல்நகரை கட்டி எழுப்பிக்கொண்டிருந்தது. எனக்கு ஒரு பெரிய கொடுங்கனவாக இருந்தது இடிந்த ஹம்பியின்வழியாக நடந்துசெல்வது. நூற்றுக்கணக்கான ஆலயங்கள் இடிந்துகிடந்தன. கல் மண்டபங்கள் கண்ணெட்டியதொலைவு வரை சிதறிக்கிடந்தன. வெயில் விரிந்து கிடந்த அக்கல்வெளியில் நெருஞ்சி அடர்ந்திருந்தது. சிறுபறவைகள் எழுந்து பறந்தமைந்தன. [ஹம்பி] நாம் காட்சிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80773/

மக்கின்ஸி, இந்தோனேசியா- கடிதங்கள்

      அன்புள்ள ஜெ   மக்கின்ஸி குறித்து நீங்கள் எழுதி இருந்தது நூறு சதவீத உண்மை .சிலை வைப்பதோடு மட்டும் இல்லாமல் அவர் நினைவாக ஆய்வு நிறுவனம் அல்லது மாணவர் பரிமாற்ற நிகழ்வு என்று ஏதாவது  செய்தால் நல்லது. மக்கின்ஸியின் சிறப்பு என்னவென்றால் அவர் காலனிய பார்வையுடன் ஆய்வுகளை செய்தவர் அல்ல என்பது தான்.எட்வர்ட் சைதின் கோட்பாடு இவரிடம் செல்லுபடியாவாது என்றே தோன்றுகிறது மக்கின்ஸியும் அவரது குழுவினரும் செய்த ஆய்வு ,சேகரித்த தகவல்கள் பிரமிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80765/

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6

பரம்பனான் ஆலய வளாகம் திரிமூர்த்தி கோயில். நடுவே சிவன். வலப்பக்கம் பிரம்மன்.இடப்பக்கம் சிவன். தொலைவிலிருந்து பார்க்கையில் மாமல்லபுரத்தின் பஞ்சபாண்டவர் ரதம்போலவோ நார்த்தாமலையின் விஜயாலய சோளீச்வரம் ஆலயத்தொகை போலவோ தோன்றும். இவ்வகை ஆலயங்களில் கருவறைக்குமேலேயே கோபுரம் அமைந்திருக்கும். முன்பக்கம் ஒரு சிறிய மண்டப நீட்சி இருக்கும். உயர்த்த அடித்தளம் மேல் ஆலயம் நின்றிருக்கும். சுற்றுமண்டபங்களோ முகமண்டபம் மீது கோபுரங்களோ இருப்பல்லை. ஆகவே இவை பல இடங்களில் தேர்கள் என அழைக்கப்படுகின்றன. ஒருநோக்கில் நம்மூர் ஆலயத் தேர்கள். ஆனால் அணுகிச்செல்லும்தோறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80701/

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 4

இந்தோனேசியா செல்வதாக முடிவெடுத்தபோது முதலில் எண்ணத்தில் எழுந்தது பாலி. ஆனால் அது வழக்கமாக எண்ணத்தில் தோன்றும் இடம் என்பதனாலேயே ஜோககர்த்தா செல்லலாம் என்று சரவணன் முடிவெடுத்தார். யோக்யகர்த்தா என்ற சம்ஸ்கிருதப் பெயரைத்தான் அங்கே எழுதி வைத்திருக்கிறார்கள். சிங்கப்பூரிலிருந்து ஜோககர்த்தாவுக்கு நேரடியாக விமானம் உள்ளது. காலை பதினொரு மணிக்குக் கிளம்பி இரண்டரை மணிக்குச் சென்றிறங்கும். எட்டரை மணிக்கே சரவணன் எங்களைக்கூப்பிட்டு அவசரப்படுத்தினார். நாங்கள் ஒன்பது மணிக்கு விமானநிலையம் சென்றுவிட்டோம். ஆனால் சரவணனும் ராஜமாணிக்கமும் வர பத்து ஆகிவிட்டது. இந்தியா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80594/

Older posts «