ஜெயமோகன், நீங்கள் ‘அன்னியநிதி’ பற்றிய கட்டுரைகள் எழுதியிருப்பதை வாசித்தேன். அப்பட்டமான கேள்வி. உங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா? இல்லை என்று சொல்லமுடியுமா? இந்தக்கட்டுரைகளே இந்துத்துவ அஜண்டாதானே? சாம் மனோகர் அன்புள்ள சாம், ஜெயமோகன்.இன்னுக்கு நல்வரவு. என் அரசியல் என்ன என்று முன்பும் விரிவாகவே எழுதிவிட்டேன். நான் என் ஆரம்பகாலத்து இந்துத்துவ இயக்கத் தொடர்புகள் பற்றி எப்போதுமே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். ஆம், நான் இளமையில் இந்துத்துவ இயக்கங்களில் உறுப்பினராக இருந்தேன். …
Tag Archive: இந்து ஞானமரபு
Permanent link to this article: https://www.jeyamohan.in/28420
கலாச்சார இந்து
அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது தர்க்க புத்திதான். ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/27843
பகவத் கீதை தேசியப்புனித நூலா?
பகவத்கீதையை இந்தியாவின் தேசியப்புனித நூலாக அறிவிக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதை நாளிதழ்ச்செய்திகளில் வாசிக்க நேர்ந்தது. இந்துத்துவ அரசியல் என்பது இந்துப் பண்பாட்டு மரபில் இருந்து உடனடி அரசியலுக்குண்டான சில கருவிகளை மட்டும் எடுத்துக்கொள்வது, அதன்பொருட்டு ஒட்டுமொத்தப்பண்பாட்டுவெளியையே குறுக்கிச் சிறுமைப்படுத்துவது என்றநிலையிலேயே உள்ளது. இதைச்செய்பவர்கள் எவரும் இந்துமரபில் போதியஅறிவுகொண்டவர்களோ ஒட்டுமொத்த இந்துப்பண்பாடு பற்றிய புரிதல் கொண்டவர்களோ அல்ல. வெறும் தெருச்சண்டை அரசியல்வாதிகள். அல்லது மேடையில் உளறும் அசடுகள். இந்த அறிவிப்பும் அந்த வகையைச் சேர்ந்ததே பகவத்கீதை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/66954