குறிச்சொற்கள் இந்திரன்
குறிச்சொல்: இந்திரன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1
தோற்றுவாய்
மலைசரிந்து இறங்கி, மண் செழிக்க ஒழுகி, அழிமுகத்தில் கடலைச் சேர்ந்து விரிநீர் என்றானது கங்கை. அலையலையெனப் பெருகி தன்னைத் தானே நிறைத்துக்கொண்டது. காற்றும் ஒளியும் கொண்டு வெளியாகியது. நீலவானாகியது. தன்னில் தான் செறிந்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-19
குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் பந்தங்கள் சூழ்ந்த வட்டத்தின் நடுவே முழுதணிக்கோலத்தில் படுத்திருந்த கர்ணனின் உடல் செங்கனல் குவியலென மின்னிக்கொண்டிருக்க, மூடிய இமைகளுடன் புன்னகை நிறைந்த உதடுகளுடன் அவன் சுற்றிலும் ஒலித்த புகழ்மொழிகளை செவிகூர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவன்போல்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7
குருக்ஷேத்ரத்தின் சூரியகளத்தில் அமர்ந்து அஜர் சொன்னார். அழிவில்லாதனவற்றை பாடுக! அழிவுள்ளவற்றை பாடலினூடாக அழிவற்றவை என்றாக்குக! அறியவொண்ணாமையை பாடுக! பாட்டினூடாக அவற்றை அறிபடுபொருளென்றாக்குக! தோழரே, பாடல் வாழ்வின் பொருள்மட்டுமே பிரிந்து நின்றிருப்பது. வேரில் கசந்து...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-37
தென்னகத்து விறலியின் கரிய கன்னங்களில் அருகிருந்த விளக்குகளின் ஒளி மின்னியது. அவள் உடல் எண்ணை பூசப்பட்ட கருங்கல் சிலை என மின்னியது. வெண்விழிகளும் வெண்பற்களும் பெரிய வட்ட முகத்தில் மின்னித்தெரிந்தன. சிறிய மூக்கில்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-2
பன்னீராயிரமாண்டுகாலம் பிரபாவன் விண்முகில்கள் மேல் அலைந்தது. மழையும் வெயிலும் மீளமீள வந்துசென்றன. நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண் என்று பிரபாவன் உணர்ந்தது. எனவே விண்ணில் எதுவும் நிகழ்வதேயில்லை என்று தெளிந்தது. ஒன்றுபோல் மறுநாள்...
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–50
50. அனலறியும் அனல்
சச்சியை இந்திராணி என அமராவதியில் அமர்த்தும்பொருட்டு புலோமன் அசுரர்களின் பெரும்படையை திரட்டினான். தைத்யர்களும் தானவர்களும் அடங்கிய படைவிரிவு கடலுடன் கடலிணைந்து கடலென்றாவதுபோல திரண்டபடியே இருந்தது. அதன் வலப்பகுதியை காலகேயர்களும் இடப்பகுதியை...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
49. விதையின் வழி
தன் மனைவி தாரை சந்திரனின் மைந்தனாக புதனைப் பெற்று அவன் அன்னையென்றே தன்னை உணர்ந்து உடன் சென்றபின் தேவகுருவான பிரஹஸ்பதி நெடுநாள் தனியனாக இருந்தார். தன் உள்ளத்தை இறுக்கி இறுக்கி...
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
48. நில்லாத்துலா
துலாவின் நடுமுள்ளென நடுங்கி நின்றிருக்கும்படியே அறத்தை தெய்வங்கள் அமைத்தன. எனவே தோன்றிய நாள்முதல் தேவரும் அசுரரும் போரிடுவது நின்றதில்லை. எவரும் முற்றிலும் வென்றதுமில்லை, முற்றழிந்ததுமில்லை. அழிந்தாலும் மீண்டு எழும் வல்லமை கொண்டிருந்தது...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–44
44. வில்லுறு விசை
நகுஷேந்திரனின் ஆணைப்படி கந்தர்வனாகிய வஜ்ராக்ஷன் தன் துணைவர் எழுவருடன் சென்று இந்திராணி தவம் செய்துகொண்டிருந்த மகிழமரச் சோலையை அடைந்தான். தன் சொல்லால் அதற்கு அனல்வேலியிட்டிருந்தாள் இந்திராணி. அவர்களின் காலடியோசையிலேயே சாய்கதிர்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–43
43. விண்ணூர் நாகம்
படைக்களத்திலிருந்து திரும்பும்போதே நகுஷன் பிறிதொருவனாக மாறிவிட்டிருந்தான். அவன் உடலுக்குள் மற்றொருவர் நுழைந்துவிட்டதைப்போல நோக்கும் சொல்லும் மட்டுமல்ல நடையும் உடலசைவுகளும்கூட நுட்பமாக மாற்றமடைந்திருந்தன. அரண்மனைமுற்றத்தில் தேரிறங்கிய அவனைக் கண்டதுமே பத்மனின் விழிகளில்...