Tag Archive: இந்திரதுவஷ்டம்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 52

[ 11 ] இந்திரதுவஷ்டம் என்னும் வேள்வியை இயற்றும் முறையை இல்லத்தில் அமர்ந்திருந்த முதிய வைதிகர் தன் உடலுக்குள்ளாகவே மூச்சுடனும் நாடித்துடிப்புடனும் கலந்து ஒலித்த மென்குரலால் சொல்ல ஏழு வைதிகர் அதனை குறித்தெடுத்தனர். முற்றிலும் புதிய சடங்குகள் கொண்டதாக அது இருந்தது. “தந்தையே, இவ்வேள்விச்சடங்குகள் பெரிதும் மாறுபட்டிருக்கின்றனவே?” என்றார் சலஃபர். “இவை மாகேந்திரம் எனப்படும் தொன்மையான வேதமரபைச் சேர்ந்த சடங்குகள். வாருணமும் பிறவும் வந்துசேர்வதற்கும் முந்தையவை” என்றார் முதிய வைதிகர். “இடியோசையை தாளமெனக் கொண்டவை. விழைவையே பொருளென …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92995