Tag Archive: இந்திரகீலம்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50

[ 7 ] இந்திரகீலத்தின் உச்சிமலை ஏந்திய வெள்ளித்தாலமென முழுமைகொண்ட வட்டமாக இருந்தது. நாண்இழுத்த வில்லென வளைந்து தெரிந்த அதன் விளிம்பைக் கடந்தபோது அர்ஜுனன் கையிலிருந்த யட்சி நடைதிருந்தா, மொழியறியா பைதலென உருக்கொண்டிருந்தாள். வலக்கையின் விரலை வாய்க்குள் இட்டு மடிப்புகள் என தசைகொழுவிய கால்களை உதைத்து உடலை நெளித்து எம்பி ஆ ஆ என குரலெழுப்பி கீழிறங்க விரும்பினாள். “இறங்கிக்கொள்கிறாயா?” என்று அவன் மதலைமொழியில் கேட்டான். அவள் தலையசைத்து காட்டை சுட்டிக்காட்டினாள். அவன் இறக்கிவிட்டதும் அண்ணாந்து செவ்விதழ்களுக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92956/

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 49

[ 5 ] இந்திரகீலமலையை அர்ஜுனன் தன்னந்தனியாகவே சென்றடைந்தான். பீதர்நாட்டுக் கலங்கள் அவர்களின் கடற்பாதையிலேயே வழிபிரிந்தன. பாய்புடைத்து காற்றில் பறந்துசென்றுகொண்டிருந்த பெருங்கலங்களை கடலுக்குள் நிறுத்தமுடியாதென்பதனால் விரைவுகுறையாமலேயே கலவிலாவில் கட்டப்பட்டிருந்த மென்மரத்தாலான படகை கயிற்றை அவிழ்த்து கீழிறக்கினர். அர்ஜுனன் வீயிடம் விடைபெற்றுக்கொண்டு கயிற்றினூடாக அதில் இறங்கி அமர்ந்தான். கடலைக் கிழித்த கலத்தின் மூக்கு உருவாக்கிய பேரலையில் அவன் படகு எழுந்தமைந்தது. கயிறு அறுக்கப்பட்டதும் அர்ஜுனனின் படகு அலைமேல் ஏறி அமைந்து விலகிச்சென்றது. அவன் அதன் பாயை இழுத்து விரித்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92938/

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 48

[ 3 ] “இது பிறிதொரு கதை” என்று சண்டன் சொன்னான். அவனுடன் பைலனும் சுமந்துவும் ஜைமினியும் நடந்தனர். “இக்கதையை காமரூபத்துப் பாணர் சொல்லக்கேட்டேன். அவர்களிடம் இக்கதையே மூன்று வெவ்வேறு பாணர்பாடலாகத் திகழ்கிறது. இதில் அர்ஜுனனை அவர்கள் மேற்குப்பாலையில் கண்டெடுத்த கதை சொல்லப்படுகிறது.” பைலன் புன்னகைத்து “நூறு இளையபாண்டவர்கள் நூற்றுக்கணக்கான கதைகள்” என்றான். “மாமனிதர்களை மொழி ஆடிகள்போல சூழ்ந்திருக்கிறது. அவர்கள் முடிவிலாது பெருகிக்கொண்டிருப்பார்கள்” என்றான் ஜைமினி. “அவரை வருணனின் ஏழு மயனீர்கள் வெள்ளாடுகளின் வடிவில் வந்து தங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92934/

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47

பகுதி  ஆறு : மகாவஜ்ரம் [ 1 ] தண்டகாரண்யத்தைக் கடந்து திருவிடத்தின் மேட்டுநிலத்தின் மீது சண்டனும் இளையோர் மூவரும் ஏறினர். பாறைகள் ஏட்டுச்சுவடிகளை அடுக்கி வைத்தவைபோலிருந்தன. எட்டுப்பெருக்குகளாக அப்பாறைகளிலிருந்து விழுந்த திரோத்காரம் என்னும் அருவி ஒன்று மேலும் மேலும் என பள்ளத்தில் சரிந்து நூற்றுக்கணக்கான சிற்றருவிகளாக ஆகி கீழே ஆறென ஒருங்கிணைந்தது. “அருவிகள் படைகொண்டு செல்கின்றன” என்றான் ஜைமினி. “வெண்ணிற காட்டுத்தீ என நான் நினைத்தேன்” என்றான் பைலன். “அன்னங்கள்” என்றான் சுமந்து. “அவை ஏன் அருவிகளல்லாமலாகவேண்டும்?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92879/

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35

[ 16 ] தண்டகாரண்யம் வறண்டு தூசுபடிந்த புதர்களுடன் சூழ்ந்திருந்தது. முட்புதர்களுக்குள் சருகுகள் சலசலக்க ஓடி பாறைமேல் தாவி ஏறிநின்று செதில் உப்பி வண்ணம் மாற்றிக்கொண்ட பச்சோந்தியின் களைத்த கண்களில் நீண்ட கால வறட்சியின் சலிப்பு தெரிந்தது. காலடி பதிந்த இடங்களில் கூழாங்கற்கள் எழுந்து உருண்டு சரிவிறங்கி சருகுகளை ஒலிக்கச்செய்தன. வியர்வை உடலில் வழிய இடையில் கைவைத்து நின்று “நீர் இருக்கிறதா, பைலரே?” என்று ஜைமினி கேட்டான். “அது உள்ளம் கொண்ட விடாய். நீர் இப்போது கேட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92595/

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15

[ 20 ] வெண்சுண்ணத்தால் ஆனது அர்ஜுனன் தவம் செய்துகொண்டிருந்த குகை. அதன் மேல்வளைவிலிருந்து பன்றியின் முலைக்கொத்துபோல் தொங்கிய சுண்ணக் குவைகளில் நீர் ஊறித்துளித்து சொட்டிக் கொண்டிருந்தது. குகையின் ஊழ்கநுண்சொல் என அது தாளம் கொண்டிருந்தது. அர்ஜுனன் சாய்ந்து அமர்ந்திருந்த சுண்ணக்கல் பீடத்திற்கு நேர்முன்னால் குத்தி உருவி எடுத்த கத்தி நுனியிலிருந்து சொட்டும் கொழுங்குருதி போல நீர் உதிர்வதை அவன் பல்லாயிரம் வருடங்களாக நோக்கிக் கொண்டிருந்தான். நகரங்கள் எழுந்து பொலிந்து போரிட்டு புழுதியாகி மறைந்தன. மக்கள்திரள்கள் பிறந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91879/

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14

[ 18 ] இரவுணவுக்குப் பின்னர் கொட்டகையில் வணிகர்களும் வைதிகர்களுமாக நாற்பத்தெட்டுபேர் கூடினர். மென்மழைச்சாரலிருந்தமையால் கதிரொளி முன்மாலையிலேயே மறைந்துவிட்டிருந்தது. ஆனால் நீர்ச்சரடுகள் வழியாக வானொளி மண்மேல் ஊறி இறங்கிக்கொண்டிருந்தது. தேங்கிய நீரின் படலங்கள் ஒளியுடன் கசங்கி அதிர்ந்து கொண்டிருந்தன. சாரல் கலந்த காற்றின் குளிருக்கு மரவுரிகளைப் போர்த்தியபடி கட்டில்கள் மேல் கால்மடித்து அமர்ந்துகொண்டு இயல்பாக எழுந்த நினைவுகளையும் வேடிக்கை நிகழ்வுகளையும் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். சண்டன் தன் முழவை எடுத்து அதன் தோல்வட்டம் காய்ந்துவிட்டதா என மெல்ல தட்டிப்பார்த்ததும் அத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91867/