Tag Archive: இந்திய முற்போக்கு அழகியல்

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1

ஜெயகாந்தனைப் பற்றிப் பேசும் முன்பு அவர் மீதான விமரிசனங்களைப்பற்றி பேச வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவரது படைப்புகளை புதிரவிழ்ப்பு செய்யுமுன்பு அவரது விமரிசகர்களை அதற்கு ஆளாக்கவேண்டியுள்ளது. நவீன இலக்கிய வாசகனைப் பொறுத்தவரை அவர் நவீனத்துவ அழகியலின் விதிகளால் அளவிடப்பட்டு புறக்கணிக்கப்பட்ட ஒருவராகவே அறிமுகம் ஆகிறார். கச்சிதமான வடிவம், உட்குறிப்பு மூலம் மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை , உணர்ச்சி கலவாத நடை, வெளிப்பாடுமீது ஆசிரியனின் முழுமையான கட்டுப்பாடு ஆகியவை அவ்விலக்கணங்கள். இவை இலக்கியத்தில் சென்ற நூற்றாண்டின் இறுதியில் உருவாகி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/427

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2 May 11, 2000 – 11:17 am ஜெயகாந்தன் மீதான மதிப்பீடுகளின் பின்னணி   ஜெயகாந்தனின் ஆக்கங்களில் எண்ணிக்கையில் பெரும்பாலானவை ஆழ்மன வெளிப்பாடற்ற , மேலோட்டமான உடனடி எதிர்வினைகள் என்பதே என் கணிப்பாகும். அது தவிர்க்கப்பட முடியாத ஒன்று. தமிழ் எழுத்தாளனிடம் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது முதல் [அதாவது கலைமகள் குடும்ப இதழாகி ,சுதேசமித்திரன் நின்ற பிறகு] ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறு வரையிலான காலகட்டம் முன்வைத்த தெரிவுச்சாத்தியங்கள் இரண்டே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/428