Tag Archive: இந்திய ஞானமரபு

அறிதல்-அறிதலுக்கு அப்பால்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களுடைய கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களுடைய பணி தமிழில் ஒரு முக்கியமான   இடத்தை வகிக்கிறது. உங்களுடைய ஒரு கருத்துடன்  நான் மாறுபாடுகிறேன். இந்திய மதங்களில் தத்துவமே அதி கடைசி  எல்லையாக அல்லது தத்துவமே அதனுடைய இறுதி லட்சியமாக முன்வைக்கப்படுகிறதாகத் தாங்கள் எழுதுவது (அல்லது   நான் அப்படிப் புரிந்துகொள்கிறேனா என்று தெரியவில்லை) மிகவும் முரணாகத் தெரிகிறது. இந்திய மதங்களின் சாரமே  தத்துவத்தின் எல்லையை எப்படி மீறுவது என்பதே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19614

கனவுபூமியும் கால்தளையும்

சம்சாரத்தைப்பற்றிய ஏராளமான இந்திய, ஜப்பானிய கதைகளில் ஒன்றில் நாரதர் மாயை என்றால் என்ன என்று பெருமாளிடம் கேட்கிறார். பெருமாள் ஒரு வீட்டைக்காட்டி அங்கே சென்று ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வா என்கிறார். தண்ணீர் கொண்டுவருபவள் ஒரு பேரழகி. நாரதர் அவளிடம் காதல்வயப்பட்டு, அவள் குடும்பத்தினரிடம் போராடி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம்செய்து வைத்து, பேரன் பேத்திகள் எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது பெருமாள் திரும்பி வரும்படி அழைக்கிறார். ‘இதோ என் கொள்ளுப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21056

இந்திய ஞானமரபும் காந்தியும்

காந்தியின் சுயசரிதையான எனது சத்தியசோதனையில் ஓர் இடம் வருகிறது. மராட்டிய மாநிலத்தில் இருக்கையில் ஒருமுறை அவருக்கு உடம்பு சரியில்லாமலாகிறது. அஜீரணமும், காய்ச்சலுமாக துன்பப் படுகிறார். அலோபதி மருத்துவம் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்நிலையில் அப்பகுதியில் யோகி என்று புகழ் பெற்றவரான ஒரு சாமியாரை அவருக்கு மருத்துவம் பார்க்க அழைத்து வருகிறார்கள். அவர் சில மர்மமான வழிமுறைகளை பயன்படுத்தி சிகிழ்ச்சை அளிப்பதாக சொல்லப் படுகிறது ‘அவரைக் கண்டதுமே தெரிந்துவிட்டது, அவரும் என்னைப் போலவே ஒரு கிறுக்கு என்று’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8138