Tag Archive: இந்திய இலக்கியம்

இந்திய இலக்கியம் – கடிதம்

அன்புடன் ஆசிரியருக்கு “வாசல் காவலனைக் கேளாது உட்புகும்படி பறவைக்குச் சொல்லும் கவிஞனின்  மனதில்  உள்ளது  வாசல்கள்  தோறும் கூசி நிற்கும்  அன்பின்  ஏக்கமல்லவா?”  – விண்ணளக்கும் பறவை(நூல்:சங்கச் சித்திரங்கள்) “இந்த மண்ணில் ரத்தத்தைச் சிந்தி உயிர் துறந்த மாவீரர்களே  இன்று நீங்கள்  நட்பு  நாட்டில்  கிடக்கிறீர்கள். ஆகவே அமைதியாக  உறங்குங்கள். நமது நாட்டில்  அருகருகே  துயிலும் ஜானிக்களுக்கும் மஹ்மூதுக்களுக்கும் நடுவே எந்த பேதமும்  இல்லை. தங்கள்  மைந்தர்களை  தொலைதூர நாட்டில் போர் புரிய  அனுப்பிய  அன்னையரே கண்ணீரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88708

ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து

சில நாட்கள் கழித்து திண்ணையில் ஜெயமோகன் எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ச்சி. என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? என்ற தலைப்பில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய எளிய உரையின் கட்டுரை வடிவம் இலக்கியத்தில் கொஞ்சம் ஆர்வமுள்ளவர்கள் கூடப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நவீனத்துவம் என்னும் இலக்கிய வடிவத்தின் கூறுகளை எளிமையாக எடுத்துச்சொல்லி, இவ்வகையான இந்திய இலக்கியம் எப்படி மேற்குலக நவீனத்துவ இலக்கியம் போன்று இல்லாமல் “உக்கிரமான வெறுமையின் சாரத்திலும் கனிவைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41285

மகாகவி விவாதம்

இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம் நேரிலும் நிகழ்த்திய விவாதங்களே என்னளவில் முக்கியமானவை. இந்த மொத்த விவாதத்திலும் நான் பேசவேண்டியதைப் பேசிவிட்டேன், கேட்க வேண்டிய எதிர்வினைகளைக் கேட்டும்விட்டேன் என்பதனால் இதை இங்கே முடித்துக்கொள்ளவிருக்கிறேன். ஆகவே எல்லா வாசகர்களுக்குமாக என் தரப்பைத் தொகுத்துச்சொல்ல விரும்புகிறேன். உலக இலக்கியம், தேசிய இலக்கியம், மகாகவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22089