Tag Archive: இந்திய அறிவியல்

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இந்திய அறிவியல் பற்றிய உங்கள் பதில் சற்று விரக்தியையே உண்டுபண்ணுகிறது. மூன்று நூற்றாண்டு கால இடைவெளி , கடக்க சற்று சிரமமானது.நமது கல்வித்துறைகளில் காணப்படும் வறட்சி, உள்ளீடற்ற வாய்ப்பேச்சாள தலைவர்கள் இதை இன்னும் அதிகப்படுத்தக்கூடும். நேரு குறித்த தங்களின் கருத்தை ஏற்கிறேன். மரபை உதாசீனம் செய்தது ஒரு பிழையே. ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு வேறு வழி இருந்திருக்கும் என தோன்றவில்லை. மேற்கத்திய பாணி கொள்கைகள் அல்லாது வேறு எதேனும் முயற்சித்திருந்தால் ஒரு வேளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20617

நம் அறிவியல்- கடிதம்

அன்புள்ள ஜெ, நேரு குறித்த தங்கள் மதிப்பீடு துல்லியமானது. 1990கள் வரை இந்தியக் கல்விப் புலங்களை முற்றாக நேருவியர்களும் இடதுசாரிகளுமே ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு சில ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. இந்தப் பாரம்பரிய அறிவியலுக்கு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுக்கு உலகச் சந்தையில் இருக்கும் பொருளியல் மதிப்பு நமக்குப் புரிந்து உறைக்க ஆரம்பித்தது. வேம்பு பற்றிய மருத்துவ அறிவு திருடப்பட்டு  உலக அளவில் காப்புரிமை பெறப்பட்ட போது,  ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே நமக்குத்  தெரிய வந்தது. சூடுபட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20555

இந்திய அறிவியல் எங்கே?

அன்புள்ள ஜெ, அயோத்திதாசர் எனும் முதற்சிந்தனையாளர்  கட்டுரை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அயோத்திதாசர் ஒரு தலித் சிந்தனையாளர் என்று தான் கேள்விப்பட்டிருந்தேன். அவரின் அறிவாளுமை இவ்வளவு பெரியது என நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். மரபிலிருந்து விலகிய நாம் மீண்டும் அதனுடன் தொடர்பு கொள்ளத் தங்களின் கட்டுரை ஒரு தெளிவான முன்வரைவை அளித்தது. மரபான ஞானத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டது, துரதிஷ்டவசமாக   அதை உணராமலேயே இருப்பது ஒரு பெரும் சாபக்கேடு. நம்முடைய கோயில்களில் உள்ள கட்டிட நுட்பத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19636