Tag Archive: இந்தியப்பயணம்

குகைகளின் வழியே – 3

முன்தினம் இரவு பிலம் குகைகளின் அருகில் ஆந்திர அரசு கட்டிய விடுதியில் தங்க இடம் கிடைத்தது. தலைக்கு அறுபது ரூபாய்தான். நாங்கள் மதியம் சாப்பிடவில்லை. பிலம் குகைகள் ஐந்தரை மணிக்கு மூடிவிடுவார்கள் . அதற்குள் குகைக்குள் போய்விடுவோம் என்று அவசரப்பட்டோம். குகைகளைப் பார்த்து முடித்து வந்ததும் அங்கிருக்கும் உணவு விடுதியில் போய் உணவு கோரினோம். கொஞ்சம் ஆறிப்போயிருந்தாலும் ஆந்திரபாணி சைவ உணவு கிடைத்தது. ருசிக்கு ஆந்திராவின் சோறும் சாம்பாரும் ரசமும் அனல்பறக்கும் ஆவக்காயும் மிகவும் பிடிக்கும். பசியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33643

புஷ்டிமார்க்கம் – ஒரு கடிதம்

திரு ஜெயமோகன், உங்கள் சமணத் தலங்கள் பயணக் கட்டுரை தொடர்ந்து படித்து வருகிறேன். பிரமிப்பும், பெருமையும், ஆனந்தமும் மாறி மாறி வருகின்றன. உங்களது இந்தப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள். ஒரு நாள் முழுக்கப் பார்த்ததை ஒரு பக்கப் பதிவாக செய்திருப்பது குறைவாகத் தெரிகிறது. இன்னும் விரிவாக எழுதத் திட்டம் உள்ளதா? கடைசிக் கட்டுரை பதினைந்தில் ஒரு சில விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன். இஸ்கான் புஷ்டி மார்க்க வைணவம் அல்ல. அது துவைத மார்க்கத்தை சேர்ந்தது. பிரம்ம-நாரத-மத்வ-கௌடீய சம்பிரதாயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25129

பயணம்: கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களின் ‘அருகர்களின் பாதை’ பல புதிய கதவுகளைத் திறந்து விட்ட ஒரு அற்புதமான பயண அனுபவமாகத் திகழ்ந்தது. நம் முன்னோர்களின் விழுமியங்களை மீள் பார்வை பார்க்க நீங்கள் ஏற்படுத்திக்கொடுத்த உன்னதமான வாசல்கள். கடந்த ஒரு மாத காலமாக நான் அதிகாலையில் எழுந்தவுடன் தட்டுவது உங்கள் இணைய தள நுழைவு வாயிலையே. உங்கள் பயணத் திட்டமும், தேர்வு செய்த தலங்களும், நீங்கள் எத்துணை ஆழமாக சமணத் தலங்களைப் பற்றியும், இந்திய வரலாற்றினை அதன் அனைத்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25183

இந்தியா ஆபத்தான நாடா – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, பலமுறை இந்தப் பயம் எனக்கும் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி செல்லும் போது, ‘உனக்கு இந்தி தெரியாது; அதனால் வெளியில் தனியாக செல்வது ஆபத்து’ என்று ஒரு அறிவுரை. இந்தி தவிர வேறெதுவுமே தெரியாத மக்கள் ஒருவர்கூட என் மேல் துவேஷம் காட்டியதில்லை. நம் அறிவுஜீவிகளின் கருத்துக்கள் இன்னும் அவர்களை அடையவில்லை போலும். இப்போது பெங்களூரில் இருக்கிறேன். ‘தமிழ்க்காரங்களை எல்லாம் கன்னடியர்கள் வெறுப்புடன்தான் பார்ப்பார்கள்’ என்று பலமுறை தமிழ் நாட்டில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், நான் பெங்களூரில் ஆங்கிலத்தைவிடத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25116

பயணம் – கடிதங்கள்

அன்புள்ள சார், களைப்பும் ஆர்வமும் மனநிறைவும் ஒரு சேர்ந்த மனநிலையில் இருப்பீர்கள் என நினைக்கிறன். படங்களையும் கட்டுரைகளையும் வாசிக்கும்போது ஒவ்வொரு இடத்திலிருந்தும் பொக்கிசங்களை எடுத்து நிறைத்து வருகிறீர்கள் என்பது தெரிகிறது. என் பாஷைல சொல்லணும்னா “வயிறு எரியுது சார்”. ஆனாலும் நீங்க சொல்லிதான் இதெல்லாம் பற்றி நான் தெரிந்து கொள்கிறேன், நன்றிங்க. உங்க கட்டுரைகளில் ஒரு அழகு இருக்கும். கட்டுரையின் முடிவில் அதிலுள்ள விசயங்களில் இருந்து மீறிக் கட்டுரையாளன் உன்னத மனதுடைய எழுத்தாளனாக மாறிப் பேசுவது. உதாரணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25040

இந்தியா ஆபத்தான நாடா?

அன்புள்ள ஜெமோ, முதலிலே சொல்லி விடுகிறேன், நீங்கள் நலமுடன் வீடு திரும்பியதற்குக் கடவுளுக்கு நன்றி. இக்கடிதம் உங்கள் மேல் அன்பு கொண்ட வாசகனாக எழுதியத. உங்களின் பயணக்கட்டுரை அருமையிலும் அருமை. ஆனால் படிக்கும்போது மனம் மிகவும் பதட்டத்திற்கு உள்ளானது. ஆபத்தான இந்த தேசத்தில் நீங்கள் இப்படிப் போவது உசிதம்தானா என்று நீங்கள் யோசிக்க வேண்டும். மிக மோசமான விபத்துக்கள் நடக்கும் நெடுஞ்சாலைகள், மிக மோசமான வேகத்தில் பறக்கும் கனரக வண்டிகள் மட்டுமில்லாமல், எங்கும் கூட்டம் சேர்த்து கொள்ளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25039

அருகர்களின் பாதை – கடிதங்கள்

அருகர்களின் பாதை தொடரைப் படிக்கும்போது இந்திய சரித்திரம் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரியும் என்பது புரிந்தது. சமணர்கள், வணிகர்கள் கண்ணில் ஒரு நாவல் வந்தால்! புகைப்படங்கள் அபாரமானவை. என்றாவது ஜெயமோகனோடு ஊர் சுற்றப் போக வேண்டும். ஐயாயிரம் படி இருக்கும் மலையாக இருந்தாலும் சரி… ஆர்வி உங்கள் அருகர்களின் பாதை தொடரை விடாமல் படித்துவருகிறேன். முடிந்தால் பின்னர் ஒருமுறை அதே வழியைத் தொடர்ந்து போக விருப்பம். பத்ரி சேஷாத்ரி அன்புள்ள ஜெமோ , என்னுடன் ஒரு ஜைன மதத்தவர் வேலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25005

வீட்டில்

நேற்று பின்னிரவு இரண்டுமணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்தோம். கோயம்பேடு பேருந்துநிலையம் அருகே என்னையும் கடலூர் சீனுவையும் இறக்கிவிட்டார்கள். முத்துக்கிருஷ்ணனும் கெ.பி. வினோதும் சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் இறங்குவதாகச் சொன்னார்கள். பிறர் நேராக ஈரோடு செல்வதாகத் திட்டம். நானும் சீனுவும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் சென்றோம். நான் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் செல்வது அதுவே முதல் முறை. போர்நிகழ்ந்த படுகளம் போல் இருந்தது. எங்கே நோக்கினாலும் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். தமிழகப் பேருந்து நிலையங்களுக்கே உரிய மூத்திரவாடை. பிரம்மாண்டமான பேருந்துநிலையம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24997

அருகர்களின் பாதை 30 – நீண்ட பயணம்

ஜாலார்பதானில் இருந்து நேராக சென்னைக்கே திரும்பிவிடுவதாக முடிவெடுத்தோம். முடிந்தவரை நேராக சென்னையைச் சென்றடைவதாக திட்டம். ஆனால் ஒரு மகத்தான பிழை செய்தோம். இரு வழிகள் கண்ணுக்குப்பட்டன. ஒன்று இந்தூர் வழியாக பெங்களூர் வந்து சென்னைக்கு. இன்னொன்று போபால், நாக்பூர் வழியாக ஹைதராபாத். இருவழிகளையும் இணையத்தில் தேடிப்பரிசீலித்தபின் போபால் வழியைத் தேர்வுசெய்தோம். போபால் மத்தியப்பிரதேசத்தின் தலைநகரம். அவ்வழியாக நான்குவழிப்பாதை இருக்கும், வேகமாக வந்துவிடலாமென்று நினைத்தோம். மாலையில் போபால் வந்து சேர்ந்தபோதுதான் ஒன்று தெரிந்துகொண்டோம், போபால் ஹைதராபாத் பாதை இன்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24977

அருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்

நேற்று மாலையில் நான்குமணிக்கெல்லாம் ஜாலார்பதான் நகரை வந்தடைந்துவிடலாமென்றுதான் திட்டமிட்டிருந்தோம். சவாய் மாதோப்பூரில் இருந்து ஜாலார்பதான் இருநூற்றைம்பது கிமீ தூரம். அதிகம்போனால் ஐந்து மணிநேரம். ஆனால் நாங்கள் ஏழுமணிநேரம் பயணம்செய்ய நேர்ந்தது. இருட்ட ஆரம்பித்தபின்னர்தான் ஜாலார்பதான் ஊருக்குள் நுழைந்தோம். வழியில் கோட்டா நகரைத் தாண்டினோம். ராஜஸ்தானின் இப்பகுதி வளமானது. சம்பல் ஆறு, இரு கரையும் நிரம்ப நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரம்மாண்டமான இரு கால்வாய்கள் விளிம்பு தொட்டு நீலநீர் ஓட விரைந்து சுழித்துச் சென்றன. இறங்கிக் குளிக்க முத்துக்கிருஷ்ணன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24947

Older posts «